100 வருடங்களாக பொங்கல் கொண்டாடாத கிராமம் !

0
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிங்கிலிப்பட்டி என்ற கிராமத்து மக்கள் கடந்த 100 ஆண்டுகளாக பொங்கல் கொண்டாடிய தில்லை. 
100 வருடங்களாக பொங்கல் கொண்டாடாத கிராமம் !
பல ஆண்டுகளுக்கு முன்னர், பொங்கல் பண்டிகையின் போது படைக்கப் பட்ட உணவை நாய் ஒன்று சாப்பிட்டது. 

இதை அபசகுணமாக கருதி, பொங்கல் பண்டிகை கொண்டாட் டத்தையே தாங்கள் நிறுத்தி விட்டதாக, கிராம மக்கள் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த ஆண்டு பொங்கலின் போது கிராமத்தில் இருந்த பசு மாடுகள் உயிரிழந்தன.

எனவே, அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு அசம்பாவி தங்கள் நடைபெற்ற தால், பொங்கல் கொண்டாடு வதையே சிங்கிலிப்பட்டி கிராம மக்கள் முற்றிலும் தவிர்த்து விட்டனர்.
இதுதவிர, சிங்கிலிப்பட்டி கிராமத்தில் இருந்து வெளியூர் களுக்கு திருமணம் ஆகி சென்ற பெண்களும், 

வெளியூர்களில் இருந்து இந்த கிராமத்திற்கு, திருமணம் ஆகி வந்துள்ள பெண்களும் கூட, பொங்கல் கொண்டாடுவ தில்லை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings