மருத்துவமனை நோயாளிகளுக்கும் உரிமை உண்டு... தெரியுமா?

0
நோய்களின் பிடியிலிருந்து மீளவே மருத்துவர்களை நாடுகிறோம், மருத்துவமனை செல்கிறோம். மருத்துவரிடம் சென்று பரிசோதித்தாலே, நமக்கு வந்த பிரச்னைகளில் பாதி சரியாகி விட்டதாக நிம்மதியடைகிறோம். 

ஆனால், உண்மை நிலவரமோ அதிர்ச்சி அளிக்கிறது. உலகளவில் பத்து பேரில் ஒருவர், நோய்க் காகச் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது பாதிக்கப் படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித் திருக்கிறது. 

தவிர, முறையான சுகாதார விதி முறைகளை மருத்துவமனைகள் கடைப் பிடிக்காததால் ஆண்டுக்கு சுமார் 4.3 கோடி பேர் பாதிக்கப் படுவதாகவும் அந்த நிறுவனம் கூறுகிறது.
நோயாளிகளாக மருத்துவமனை செல்பவர்கள் மருத்துவர்கள் என்ன செய்தாலும், சொன்னாலும் அப்படியே பின் பற்றுவதும், தங்களுக்கான உரிமைகளை அறியாமல் இருப்பதுமே அதற்குக் காரணம். 

அதைச் சரி செய்யும் வகையில், நோயாளியின் பாதுகாப்பு குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் 9-ம் தேதி ‘உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம்’ கடைப்பிடிக்கப் படுகிறது. 

அந்த நாளில் நோயாளி யின் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்பு உணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. 


நாம் அனைவருமே அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அந்த உரிமைகள் பற்றி விரிவாக விளக்குகிறார் சென்னை மருத்துவக் கல்லூரி பொது மருத்துவத்துறைப் பேராசிரியர் ரகுநந்தனன்.

தமிழ் நாட்டில் அலோபதி, சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி எனப்பல்வேறு சிகிச்சை முறைகள் இருக்கின்றன. 

இவற்றில் எந்த வகை மருத்துவ முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஒரு நோயாளி தான் முடிவு செய்ய வேண்டும். 

இது ஒவ்வொரு நோயாளியின் அடிப்படை உரிமை. சிகிச்சையளிக்கும் மருத்துவர், மருத்துவம் படித்து, முறையாகப் பதிவு செய்து கொண்ட மருத்துவர் தானா என்பதைத் தெரிந்து கொண்டு சிகிச்சை பெறவேண்டும். 
வெளி நாடுகளில் மருத்துவர்கள் தங்கள் பெயர்களுடன் அவர்கள் படித்த படிப்பு, எந்தக் கல்லூரியில் படித்தார்கள் என்கிற தகவல்களையும் சேர்த்தே போட்டுக் கொள்வார்கள். 

ஆனால், நம் நாட்டில் அந்தப் பழக்கம் இல்லை. மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்ததற்கான எண்கள் அவர்கள் பரிந்துரைச் சீட்டில் இடம் பெற்றிருக்கும். 

அதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இல்லாத பட்சத்தில் நேரடியாக அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் உரிமை ஒரு நோயாளிக்கு இருக்கிறது.

தான் சிகிச்சை பெறும் மருத்துவ மனை, ‘மருத்துவ மனைகள் மற்றும் சுகாதார சேவைகளுக் கான தேசிய அங்கீகார வாரிய’ த்தால் (National Accreditation Board for Hospitals & Healthcare Providers) 

அங்கீகரிக்கப் பட்டதுதானா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் அனுபவம் உள்ளவர்களா, முறையான பயிற்சி பெற்றவர்களா என்பதையும் தெரிந்து கொள்ள நோயாளிக்கு உரிமை உண்டு.

நோயாளியும் மருத்துவரும் வெளிப்படையாகப் பேச வேண்டும். இதற்கு முன்பாக என்னென்ன பாதிப்புகள் இருந்தன, 

அதற்கு எத்தகைய சிகிச்சைகள் எடுத்துக் கொண்டோம் என்பதையும், மருந்து ஒவ்வாமை பாதிப்பு ஏதும் இருக்கிறதா என்பதையும் தெளிவாகச் சொல்லி விட வேண்டும். 

மருத்துவர்களை அடிக்கடி மாற்றக் கூடாது. உடலில் சிறிய பாதிப்பு ஏற்பட்டதும், குறிப்பிட்ட உடல் உறுப்புக்கான சிறப்பு மருத்துவர் களிடம் செல்லாமல் குடும்ப மருத்துவரிடம் (Family Doctor) 

சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். அவர் பரிந்துரைக்கும் பட்சத்தில் சிறப்பு மருத்துவர்களைச் சந்திக்கலாம். 

மருந்துக் கடைகளில் நேரடியாக மருந்து வாங்கிச் சாப்பிடும் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.  

அந்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நிறுத்தவும் கூடாது. ஏதாவது பிரச்னைக் காக, புதிதாக மருந்து உட்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். 

அதே போல, ஒருவருக்கு வாங்கிய மாத்திரை, மருந்து களை வேறொருவர் பயன் படுத்தக் கூடாது.

உறவினர் கள், நண்பர்கள் என யாராவது மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டிருந்தால், அவர்கள் நலமாகி வீடு திரும்பியதும் போய்ப் பார்த்துக் கொள்ளலாம். 

மருத்துவ மனையிலேயே பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. மருத்துவ மனையில் சென்று பார்ப்பதால் சிகிச்சை பெறுபவர் மற்றும் நலம் விசாரிக்கச் செல்பவர் என இருவருக்கும் ஏதாவது நோய்த் தொற்று ஏற்பட வாய்ப் பிருக்கிறது. 
அதே போல வீட்டில் யாராவது நோய் வாய்ப்பட்டி ருந்தால் அவர்களி டமிருந்து சற்று விலகி யிருப்பது நல்லது.

டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் காலங்களில் தேவை யில்லாத பயணங் களைத் தவிர்க்க வேண்டும். 


நோய்த் தொற்று பரவும் காலங்களில் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களு க்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். 

மரியாதை நிமித்த மாக, கை கொடுப்பதைத் தவிர்த்து விட்டு, நம் கலாசாரப்படி வணக்கம் சொல்லிப் பழக வேண்டும். 

அடிக்கடி கை கழுவுவதும் நல்லது. வயதான வர்கள் தங்களுக்கு என்னென்ன பாதிப்புகள் இருக்கின்றன என்பதைச் சிறிய பேப்பரில் எழுதி, தங்கள் பைகளிலோ, சட்டைப் பாக்கெட்டு களிலோ வைத்துக் கொள்ளலாம். 

முதியோருக்கு மறதி பாதிப்பு அதிகமாக இருக்கும். சில நேரங்களில் மாத்திரை சாப்பிட்டதை மறந்து விட்டு மீண்டும் சாப்பிடுவ தால் கடும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும். 

மருந்துகளை நாள் வாரியாக, வேளை வாரியாக அடுக்கிக் கொள்ளும் சில மெடிக்கல் கிட்கள் தற்போது கிடைக்கின்றன. அவற்றைப் பயன் படுத்தினால் இது போன்ற அசௌகர்யங் களைத் தவிர்க்க லாம். 

மருத்து வருக்கும் நோயாளிக்கும் இடையே யான தகவல் பரிமாற்றங்கள் சரியாக இருந்தாலே பாதிப் பிரச்னை களைச் சரி செய்து விடலாம்’’ என்கிறார் ரகுநந்தனன்.

சிகிச்சையில் ஏற்றத்தாழ்வு கூடாது

நோயால் பாதிக்கப் பட்ட ஒவ்வொரு வருக்கும் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ளும் உரிமை இருக்கிறது. அதை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமை.
அரசு அல்லது தனியார் மருத்துவ மனை என எங்கு சிகிச்சை எடுத்தாலும் நோயாளிகளுக் கென்று சில அடிப்படை உரிமைகள் இருக்கின்றன. 

நோய்களைப் பற்றிய விவரங்களை, எத்தகைய சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பன போன்ற தகவல்களைச் சம்பந்தப்பட்ட நோயாளியிடம் மருத்துவமனை நிர்வாகம் முழுமையாகத் தெரிவிக்க வேண்டும். 

நோயாளி களின் அனுமதி யில்லாமல் அவர்களது புகைப்படம், வீடியோவை வெளியிடக் கூடாது. 

சிகிச்சை யளிக்கும் போது மிகவும் கவனமாக, ஏற்றத் தாழ்வு இல்லாமல் பொறுப் புடன் சிகிச்சை யளிக்க வேண்டும். சிகிச்சையின் போது ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், இழப்பீடு பெறும் உரிமை நோயாளிக்கு இருக்கிறது. 

எனவே, அரசு அதை உறுதி செய்ய வேண்டும். நோயாளியின் அனுமதி இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யக் கூடாது. சிகிச்சையளிக்கும் விவரங் களை நோயாளியின் அனுமதியில்லாமல் வேறு நபர்களிடம் பகிரக் கூடாது. 

அதே போல் நோயாளி இறந்து விட்டால், அவர்களின் நெருங்கிய உறவினர் களின் அனுமதி யில்லாமல் அவர் பற்றிய தகவல்களை வெளியே சொல்லக் கூடாது.’’
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)