இரத்த சிவப்பு அணுக்களின் வேலை !

0
இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு? - ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். 
அதாவது சென்னையின் மக்கள் தொகைக்கு ஏறக்குறைய இணையான அளவுக்கு இருக்கும்.

இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?

எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை (Bone Marrow) இருக்கும்.

எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட் லட்டுகள் உற்பத்தி யாகின்றன.

இரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?

இரத்த சிவப்பு அணுக்கள் வேறுபெயர் - எரித்ரோசைட்டுகள், இரத்த சிவப்பு அணுக்கள் வடிவம் - இரு பக்கமும் குவித்த தட்டையான வட்ட வடிவம்,

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோ குளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை.

இரத்தம் சிவப்பாக இருக்க காரணம், ஹீமோகுளோபின் என்ற நிறமி. 

ஆண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை - 5.2 மில்லியன், பெண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை - 4.5 மில்லியன்,

ஆண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் வாழ்நாள் - 120 நாட்கள். பெண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் - 110 நாட்கள். இரத்த சிவப்பு அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - இரத்த சோகை, அனிமியா.

இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்தால் ஏற்படும் நோய் - பாலிசைதீமியா கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம்.

இவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால் ரத்த சோகை வராது. இரத்தத்திலுள்ள ஒவ்வொரு சிவப்பு அணுவிலும் சுமார் 30 கோடி ஹீமோ குளோபின் மூலக்கூறுகள் உள்ளன.
இந்த ஹீமோ குளோபின், முழு வளர்ச்சி அடைந்த ஒரு சிவப்பு அணுவின் கனஅளவில் மூன்றில் ஒரு பங்கு இருக்கிறது.

இதன் ஒவ்வொரு மூலக்கூறிலும் குளோபின் என்ற புரதமும், இரும்பு அணுவைக் கொண்ட ஹீம் என்ற நிறமியும் உள்ளன.

இரத்தத்தி லுள்ள ஒரு சிவப்பு அணு நுரையீரல் வழியே செல்லும் போது, ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் சிவப்பு அணுவினுள் ஊடுருவி, அதிலுள்ள ஹீமோ குளோபின் மூலக்கூறுகளில் ஒட்டிக் கொள்கின்றன.

சில வினாடிகளில், அந்த ஆக்ஸிஜன், உடல் திசுக்களுக்குள் சென்று செல்களை தொடர்ந்து இயங்கச் செய்கிறது.

தற்போது மனிதனின் அல்லது மாட்டின் சிவப்பு அணுக்களி லிருந்து ஹீமோ குளோபின் தயாரிக்கப் படுகிறது.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஹீமோ குளோபின் வடிகட்டப்பட்டு அதிலுள்ள மாசு நீக்கப் படுகிறது.

பின்னர் ரசாயன மாற்றம் செய்யப்பட்டு சுத்திகரிக்கப் படுகிறது. அதன் பிறகு ஒரு கரைசலுடன் கலக்கப்பட்டு பாட்டில்களிலோ, பிளாஸ்டிக் பைகளிலோ அடைக்கப் படுகிறது.

இவ்வாறு தயாரிக்கப் பட்ட திரவமே, ஹீமோ குளோபினிலிருந்து பெறப்பட்ட ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் திரவம் (HBOC - Hemoglobin-based oxygen carriers) என அழைக்கப் படுகிறது.

பல நாடுகளில் இதற்கு இன்னும் அங்கீகாரம் வழங்கப்பட வில்லை.

ஹீம் என்ற நிறமியே இரத்தத்திற்குச் சிவப்பு நிறத்தைக் கொடுப்பதால், சிவப்பு அணுக்களை முக்கியப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட 
இந்த (HBOC - Hemoglobin-based oxygen carriers) யின் ஒரு யூனிட்டை எடுத்துப் பார்க்கும் போது, அது ஒரு யூனிட் சிவப்பு அணுக்களைப் போலவே இருக்கும்.

இரத்தச் சிவப்பு அணுக்களை ஃபிரிட்ஜில் வைத்து, சில வாரங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். 

ஆனால் இந்த (HBOC - Hemoglobin-based oxygen carriers) -யை அறை வெப்ப நிலையில் வைத்து, பல மாதங்களுக்குப் பிறகும் பயன்படுத்தலாம்.

பொருத்தமற்ற இரத்த குரூப் காரணமாக தீவிர பிரதி விளைவுகள் ஏற்படும் அபாயமும் இத்திரவத்தில் இல்லை.

ஏனெனில் செல் சவ்வும் அதோடு, செல்லின் தனித்தன்மை யுள்ள ஆன்டிஜன்களும் இதில் இருப்பதில்லை.

HBOC இரத்தத்தி லிருந்து தயாரிக்கப் படுவதால், இரண்டு வித ஆட்சேபணைகள் எழுப்பப் படலாம்.

அவற்றில் ஒன்று, இரத்தத்தின் முக்கிய பகுதியாகிய சிவப்பு அணுக்களின் வேலையையே HBOC செய்கிறது.

இன்னொன்று, இரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கியக் கூறாக உள்ள ஹீமோ குளோபினிலிருந்தே HBOC தயாரிக்கப் படுகிறது.

இரத்த சிவப்பு அணுக்களின் வேலை !

இரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)