நொறுங்கும் எலும்புகள்.. ஆஸ்டியோ போரோசிஸ் !

உலகம் முழுவதும் சமீப காலமாக அதிக அளவில் மனிதர்களைத் தாக்கும் நோய் ஆஸ்டியோ போரோசிஸ் (osteoporosis) என்ற எலும்பு மெலிதல் நோய். 
நொறுங்கும் எலும்புகள்.. ஆஸ்டியோ போரோசிஸ் !
எலும்பு மெலிதல் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக,  வருடந்தோறும் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி ‘உலக எலும்பு மெலிதல் நோய்’ தினமாக அனுசரிக்க படுகிறது.

இந்தியாவில் 50 வயதை கடந்த பெண்களில் 50% பேருக்கு ஆஸ்டியோ போரோசிஸ் நோய் உள்ளது.  30 வயதை கடந்த பெண்களில் 4ல் ஒருவருக்கு உள்ளது. 
எனினும் மாறி வரும் வாழ்க்கை சூழல் காரணமாக இன்னும் 10 ஆண்டுகளில் ஆண்களும் இந்த நோயால் பாதிக்கப் படக்கூடும் என அறிவித்தி ருக்கிறது ஐநா.

இந்நிலையில், எலும்பு மெலிதல் நோய் யாருக்கெல்லாம் வரும்? வராமல் தடுக்க என்ன வழி என்பது போன்ற சந்தேகங்களை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

எதனால் வருகிறது?
நொறுங்கும் எலும்புகள்.. ஆஸ்டியோ போரோசிஸ் !
எலும்பின் உறுதித் தன்மை குறைவதால் இந்த நோய் ஏற்படுகிறது. இதனால் எளிதில் எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது.

எப்படி அறியாலாம்?

எலும்பின் அடர்த்தித் தன்மை அறிவதற்கு என ‘டெக்சா’ என்றொரு மருத்துவ பரிசோதனை இருக்கிறது.
பத்தரை மாற்று தங்கம் என்றால் என்ன? தெரியுமா? உங்களுக்கு !
டெக்சா பரிசோதனை முடிவில் ஒருவரின் எலும்பின் அடர்த்தித் தன்மை எவ்வளவு, வருங்காலத்தில் அவருக்கு ஆடியோ போரோசிஸ் நோய் வருமா எனக் கண்டறிய முடியும்.
(nextPage)
மருந்து உண்டா?
நொறுங்கும் எலும்புகள்.. ஆஸ்டியோ போரோசிஸ் !
நோயை முற்றிலுமாகத் தீர்க்க எந்த மருந்தும் கிடையாது. எலும்பு மெலிதல் நோயின் காரணமாக வரும் வலியை குறைக்க நிவாரணி மட்டுமே உள்ளது. 

இந்த நோய் வந்தவர்கள், அதிகளவில் உடல் இயக்கம் சார்ந்த விளையாட்டுக் களை விளையாடக் கூடாது. அதிக எடைகளைத் தூக்கக் கூடாது. கடினமான உடற் பயிற்சிகளைச் செய்யக் கூடாது. 
ஆஸ்டியோ பொரோசிஸ் வர காரணமும் சிகிச்சையும் !
எனினும், மருத்துவர் ஆலோசனைபடி சிறு சிறு எளிய பயிற்சிகளைச் செய்து வர வேண்டும். கால்சியம் அதிகளவில் எடுத்து கொள்ள வேண்டும். கால்சியம் மாத்திரை களை மருத்துவர் பரிந்துரைத்த அளவு தினமும் உண்ண வேண்டும். 

தினமும் சூரிய ஒளி உடலில் படுமாறு 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும். உணவில் கீரைகள், காய்கறிகள், பழங்கள், நார்ச் சத்துள்ள உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

உயரத்துக்கு ஏற்ற எடையில் இருக்கிறீர்களா என்பதைப் பரிசோதிக்கும் பி.எம்.ஐ மதிப்பில் 25-ஐ தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

உயரத்துக்கு ஏற்ற எடையில் மட்டுமே இருக்க வேண்டும். தினமும், கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அதிக அளவில் காபின் கலந்த காபியை குடிக்கக் கூடாது, மது, சிகரெட்டுக்குத் தடா போடவேண்டும்.
உடலின் எலும்புகளைப் பலவீன மாக்கும் ஆஸ்டியோ போரோசிஸ் நோயை விரட்டி அடிக்க இன்றே உறுதி எடுத்துக் கொள்வது தான் ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி!
(nextPage)
யாருக்கெல்லாம் வரும்?
நொறுங்கும் எலும்புகள்.. ஆஸ்டியோ போரோசிஸ் !
1. ஆஸ்டியோ போரோசிஸ் என்பது கால்சியம் சத்தில்லாமல், எலும்புகள் தேய்ந்து, நொறுங்கி, எலும்பு முறிவு ஏற்படுத்துவது என்பதே.

2. 35 வயதுக்கும் மேல் குறிப்பாக பெண்களுக்கு எலும்பு தேய ஆரம்பிக்கும். 50 வயதை தாண்டினால், இத்தைகைய நோய் தலை தூக்க ஆரம்பிக்கும். 
ஆனால் எல்லாருக்கும் வராது. மிக மோசமான நிலையில் தான் வரும். ஒரு நாளைக்கு சராசரியாக ஒருவர் 500 மில்லி கிராம் கால்சியம் எடுத்துக் கொள்ள வேண்டும். 

ஆனால், இந்தியா மட்டுமல்ல, ஆசியாவிலேயே பலரும் குறைவாகத் தான் எடுத்துக் கொள்கின்றனர்.

3. ஆண்களை விட, பெண்களுக்கு தான் இது வரும். அதுவும், ஆண்களை விட நான்கு மடங்கு அதிகமாக வர வாய்ப்புண்டு.

4. இந்தியாவில் மொத்தம் மூன்று கோடி பெண்களுக்கு இந்த நோய், பல கட்டங்களில் உள்ளது.  அதுவும் 50 வயதான பெண்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது.
நொறுங்கும் எலும்புகள்.. ஆஸ்டியோ போரோசிஸ் !
5. நாம் உடலில் மொத்த 99 சதவீதம் கால்சியம் எலும்புகளில் தான் இருக்கிறது. அது ஆண்டுகள் கழிந்த பின், குறைய ஆரம்பிக்கும், அதனால், எலும்புகள் தேயும். இப்படி தேய்ந்தால் ஏற்படுவது தான் இந்த நோய்.
6. வாழ்க்கை முறை மாறிவிட்ட நிலையில், இப்போதுள்ள தலை முறையினர் பலருக்கும் அவர்கள் 50 வயதை தாண்டினால், இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

7. சிறிய வயதில் இருந்தே கால்சியம், நம் உணவுகளில் இருக்க வேண்டும். அப்போது தான் உடலுக்கு தேவையான கால்சியம் தொடர்ந்து கிடைத்து வரும்.  இல்லா விட்டால், எலும்பு களுக்கு கால்சியம் குறைந்து தேய ஆரம்பித்து விடும்.

8. மாதவிடாய் நின்ற பின்னர், பெண்களுக்கு எலும்பு தேய்மான பாதிப்பு ஆரம்பிக்கும். சிலருக்கு பரம்பரை மூலமும் இது ஏற்பட வாய்ப்புண்டு.
நொறுங்கும் எலும்புகள்.. ஆஸ்டியோ போரோசிஸ் !
9. கர்ப்பிணிகளில், தாங்கள் சுமக்கும் கருவுக்கு, 25 முதல் 30 கிராம் கால்சியம் தேவைப்படுகிறது. அதனால், கால்சியம் தேவை, பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. அதாவது, ஆஸ்டியோ போரோசிஸ் பாதிப்பு, இந்தியாவில் அதிகரிக்கும் என்று மதிப்பிடப் படுகிறது.
10. தொடர்ந்து பால் குடித்து வந்தாலே போதும், கால்சியம் சத்து உடலில் நீடித்து நிற்கும். கால்சியம் மாத்திரைகளும் பயன்தரும்.
Tags:
Privacy and cookie settings