தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இளம்பெண் ஒருவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத் தியது.
சென்னையி லிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த தமிழிசை, அதே விமானத்தில் வந்த இளம்பெண் ஒருவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக என்று அந்தப் பெண் விமானத்துக் குள்ளேயும், தூத்துக்குடி விமான நிலையத்தி லும் முழக்க மிட்டதாக தமிழிசை குற்றம் சாட்டினார்.
வாக்கு வாதத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விமான நிலைய போலீசார் தமிழிசையை சமாதானப் படுத்தினர்.
பின்னர் அந்த இளம் பெண் மீது புகார் அளித்த தமிழிசை அங்கிருந்து தென்காசி புறப்பட்டு சென்றார்.
விசாரணை யில், அந்த பெண் தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவரின் மகள் சோபியா என்பதும்,
கனடாவில் பயின்று வரும் அவர் சென்னை யிலிருந்து தூத்துக்குடி க்கு விமானத்தில் பயணித்ததும் தெரிய வந்தது.
Thanks for Your Comments