சென்னை மெரினா கடற்கரையில் எவ்வித போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்ட ங்கள் நடத்த அனுமதி யில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னை மெரினாவில் 90 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி,
தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி, ஒரு நாள் போராட்டம் நடத்த அனுமதி தந்து உத்தர விட்டார்.
அதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உடனடியாக மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப் பட்டது.
அதை அவசர வழக்காக ஏற்று விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு, அன்றையே தேதியே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தர விட்டது.
பின்னர், இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் சசிதரன், சுப்பிரமணியன் அமர்வில் நடைபெற்றது.
அப்போது, மெரினாவில் போராட்டங்கள் நடத்த அனுமதித்தால், தேவை யில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
மேலும், வள்ளுவர் கோட்டம், அண்ணா சாலை மின்வாரிய அலுவலகத்து க்கு பின்புறம்
மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளிட்ட இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்தலாம் என்றும் தமிழக அரசு வாதிட்டது.
தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அரசின் மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்டனர்.
மெரினாவில் எவ்விதப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங் களையும் நடத்த அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தனர்.
Thanks for Your Comments