வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தத் தயார் விஜய் மல்லையா !

0
பொதுத்துறை வங்கிகளில் தாம் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தும் நல்லெண்ணமும், தொடர்ச்சியான முயற்சிகளும் தம்மிடம் இருப்பதாக தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தத் தயார் விஜய் மல்லையா !
ஆனால், அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட, வெளியில் இருக்கும் சக்திகளின் தலையீடு இருக்கு மானால் தம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்றும் அவர் கூறியுள்ளார்.

கிங்பிஷர் விமான போக்கு வரத்து சேவை, மதுபான உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடு பட்டிருந்த விஜய் மல்லையா, 

வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் பெற்று வேண்டு மென்றே திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அவர் லண்டனுக்கு தப்பி யோடினார். 

அவரை இந்தியா கொண்டு வருவதற் கான சட்ட நடவடி க்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 

இதற்கிடையே, தம்மை சுற்றி சுழலும் சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கும் விதமாக, விஜய் மல்லையா கூறியிருப்பதாவது:
நான் எனது நிலை என்ன வென்பதை விளக்கு வதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், நிதியமைச் சருக்கும் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி கடிதம் எழுதினேன். 

ஆனால், அவர்கள் இருவரிடம் இருந்தும் இது வரை எந்தவித பதிலும் வரவில்லை.

கிங்பிஷர் நிறுவன த்துக்காக கடனாகப் பெறப்பட்ட ரூ.9,000 கோடியை நான் திருடிக் கொண்டு ஓடிப் போய் விட்டதைப் போல அரசியல் வாதிகளும், ஊடகங் களும் குற்றம் சாட்டி வருகின்றனர். 

கடன் வழங்கிய சில வங்கிகள் என்னை வங்கி மோசடியாளர் என முத்திரை குத்தியுள்ளன.

உச்ச நீதிமன்றத்தில் எனக்கு எதிராக வங்கிகள் தொடர்ந்த வழக்கு, 2016 மார்ச் 29-ஆம் தேதி, 2016 ஏப்ரல் 6-ஆம் தேதி ஆகிய காலங்களில் விசாரணைக்கு வந்த போது, 

கடனை திருப்பிச் செலுத்து வதற்கான இரண்டு யோசனை களை நான் முன் வைத்தேன். ஆனால், வங்கிகள் அதை ஏற்க மறுத்து விட்டன. 

வங்கி மோசடியாளர் என முத்திரை குத்தப்பட்டுள்ளதால், நான் பொது மக்களின் கோபத்திற்கு ஆளாகி யுள்ளேன். 
வங்கி மோசடி யாளர் என முத்திரை குத்தும் அளவுக்கு எனது நடத்தை மோசமானது அல்ல என்பதை தெளிவு படுத்த விரும்பு கிறேன்.

சிபிஐ-யும், அமலாக்கத் துறையும் நீதி மன்றத்தில் எனக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளன. 

அதில் கூறப் பட்டுள்ள குற்றச் சாட்டுகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. அவை பொய்யானது. வங்கிகள் மற்றும் அரசுக்கு ஆதரவாக அந்தக் குற்றச் சாட்டுகள் என் மீது சுமத்தப் பட்டுள்ளன.

தற்போது என்னுடைய சொத்துகள், எனது நிறுவனங் களின் சொத்துகள் மற்றும் எனது குடும்பத்தி னரால் 

நிர்வகிக்கப் படும் நிறுவனங் களின் சொத்துகள் அனைத்தையும் அமலாக்கத் துறை முடக்கி வைத்துள்ளது. அந்த சொத்துகளின் தற்போதைய மதிப்பு ரூ.13,900 கோடி ஆகும்.

எனது சொத்துகளை விற்பதன் மூலமாக நிதி திரட்டலாம் என்ற வங்கிகளின் முயற்சி களுக்கு அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படு கிறது. 
அரசியல் ரீதியாக தூண்டப் பட்டதன் விளைவாக அதிகாரம் தவறாக பயன்படுத்தப் படுகிறது என்பதற்கு இதுவே சாட்சி. 

நான் வங்கி களுக்கு கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என அரசு விரும்புகிறதா, இல்லையா? என்பதே தற்போதைய கேள்வி.

பொதுத்துறை வங்கி களுக்கு கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நல்லெண்ணமும், தொடர்ச்சி யான முயற்சிகள் என்னிடம் இருந்தன. 

இனியும் அது தொடரும். ஆனால், அரசியல் ரீதியாக தூண்டப்படும், வெளியில் இருக்கும் சக்திகளின் தலையீடு இருக்கு மானால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்றார் மல்லையா.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)