காவல் துறையினருக்கு முழு உடல் பரிசோதனை... பழனிசாமி !

0
தமிழகத்தில் காவல் துறையில் பணியாற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட காவல் துறையினருக்கு முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்தார்.
காவல் துறையினருக்கு முழு உடல் பரிசோதனை... பழனிசாமி !
காவல் துறையினருக் கான அறிவிப்பு களை சட்டப் பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

அதில், 30 வயதுக்கு மேற்பட்ட காவல் ஆளிநர்களுக்கு முழு உடல் பரிசோதனை, ஓய்வு பெற்ற காவல் அதிகாரி களுக்கான நலவாரியம் 

ஆகிய காவலர் நலன் காக்கும் திட்டங்கள் செயல் படுத்தப்படும் என்ற முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

முக்கிய அறிவிப்புகள்..

30 வயதுக்கு மேற்பட்ட ஆளிநர்களுக்கு முழு உடல் பரிசோதனை இலவச மாக மேற்கொள்ளப் படும். ஓய்வு பெற்ற காவல் அதிகாரி களுக்கான நலவாரியம் ஒன்று உருவாக்கப் படும்.

காவல் துறையில் புதிய பதவிகள் 13.51 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும். 

44.71 இலட்சம் ரூபாய் செலவில், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் (அலுவலக கணிணி மயமாக்கல்) பதவி ஒன்று புதிதாக தோற்று விக்கப்படும்.
12.02 கோடி ரூபாய் செலவில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு புதியதாக 3 கூடுதல் ஆயுதப் படை பிரிவுகள் உருவாக்கப்படும்.

1.04 கோடி ரூபாய் செலவில், உயர்நீதி மன்ற மதுரைக் கிளைக்குப் புதியதாக உருவாக்கப் படவுள்ள 3 கூடுதல் ஆயுதப் படை பிரிவு களுக்கு அமைச்சுப் பணி யாளர்கள் பதவி உருவாக்கப் படும்.

1397 புதிய காவல் வாகனங்கள் 119.73 கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும். 2.20 கோடி ரூபாய் செலவில், 10 கலவர தடுப்பு வஜ்ரா வாகனங்கள் காவல் துறையின் சிறப்பு பயன் பாட்டிற்காக வாங்கப்படும்.

1.76 கோடி ரூபாய் செலவில், 8 கலவர தடுப்பு வஜ்ரா வாகனங்கள் காவல் துறை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் காவல் துறையின் சிறப்பு பயன் பாட்டிற்காக வாங்கப்படும்.

6.50 கோடி ரூபாய் செலவில், 10 கலவர தடுப்பு வருண் வாகனங்கள் காவல் துறையின் சிறப்பு பயன்பாட்டிற்காக வாங்கப்படும்.
3.25 கோடி ரூபாய் செலவில், 5 கலவர தடுப்பு வருண் வாகனங்கள் காவல் துறை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் காவல் துறையின் 

சிறப்பு பயன் பாட்டிற்காக வாங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங் களை முதல்வர் பழனிசாமி அறிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings