இணை சேரும் காலம் மாறியதால் யானைக்கு மதம் பிடித்தது !

0
திருச்சி சமய புரத்தில் அமைந் திருக்கும் மாரியம்மன் கோயில் யானைக்கு மதம் பிடித்து, மூத்த பாகன் கஜேந்திரனை மிதித்துக் கொன்றி ருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. 
இணை சேரும் காலம் மாறியதால் யானைக்கு மதம் பிடித்தது !
பொதுவாக, `ஆண் யானை களுக்குத் தான் மதம் பிடிக்கும்’ என்பார்கள். ஆனால், சமய புரத்தில் பெண் யானைக்கு மதம் பிடித்தி ருக்கிறது. 

இந்தப் பரபரப்பு காரணமாக, சமயபுரம் கோயிலில் இன்று தரிசனம் ரத்து செய்யப் பட்டிருக்கிறது.

கோயில் யானை

மதம் பிடித்த யானை, கோயில் வளாகத் துக்குள் சுற்றி வந்ததால் கோயில் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு பக்தர்கள் வெளியேற்றப் பட்டார்கள். 
இப்போது யானை ஓரிடத்தில் நின்றுகொண்டிருக்கிறது. ஆனால், யாராலும் அதை நெருங்க முடிய வில்லை. 
உதவிப் பாகன்கள் கோயில் யானையை அமைதிப் படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டிருக் கிறார்கள். 

யானையை அமைதிப் படுத்த ஜெயா என்ற பெண் யானையும் ஓர் ஆண் யானையும் வர வழைக்கப் பட்டிருக் கின்றன. 

மயக்க ஊசி செலுத்தாமல் யானையை அமைதிப் படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டிருக் கிறது.

மதம் பிடித்த பெண் யானையின் பெயர் மசினி. அதற்கு வயது ஒன்பது. 

2008-ம் ஆண்டு முதுமலை கார்குடி வனப் பகுதியில் பெய்த பெரு மழையின் காரண மாகப் பெருக்கெடுத்து வந்த ஆற்று நீரில் அடித்து வரப்பட்ட குட்டி இது. 
முது மலையில் மசினி அம்மன் கோயிலுக்கு அருகில் மீட்கப் பட்டதால், இந்த யானைக்கு `மசினி’ என்று பெயர் வைத்தார்கள். 

இந்த யானையை மீண்டும் வனத்துக்குள் அனுப்பாமல் தெப்பக்காடு முகாமில் வைத்துப் பராமரித்து வந்தார்கள். 

2016-ம் ஆண்டு சமயபுரம் கோயிலி லில் இருந்த மாரியப்பன் என்ற யானைக்கு மதம் பிடித்தது. 

அதைக் கட்டுப் படுத்த முடியாத தால், டாப்சிலிப் முகாமுக்கு அனுப்பி வைத்தார்கள். 
மாரியப்பன் யானைக்குப் பதிலாக மசினி யானையை சமயபுரம் கோயிலுக்கு வழங்க உத்தர விட்டார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.

மசினி யானைக்கு மதம் பிடித்தது ஏன்?

`வழக்கமாக பெண் யானை களுக்கு மதம் பிடிப்ப தில்லை. யானைக்கு மதம் பிடிப்ப தென்பது, நோய் அல்ல.
அது, ஆரோக்கிய மான ஆண் யானையின் இயல்புகளில் ஒன்று. மத நீர் ஒழுகும் காலம் என்பது இணை சேரும் காலத்தைக் குறிக்கும். 

இந்தக் காலம் பத்து நாளி லிருந்து ஒரு மாதம் வரை கூட நீடிக்கும். சமயபுரம் பெண் யானைக்கு ஏற்பட்டி ருப்பது மதம் அல்ல. 

ஒரு வித மன அழுத்தம். அதன் வெளிப்பாடு தான் இந்த ஆவேசம். யானை களுக்கு வியர்வைச் சுரப்பி கிடையாது. 
அதனால் அது வெயிலில் சுற்றாது. உணவைக் கூட, காலை, மாலை, இரவு வேளைகளில் தான் தேடும். ஆனால், கோயில் யானைகள் நீண்ட நேரம் வெயிலில் நிற்க வைக்கப்படு கின்றன. 

தார்ச் சாலையில் அவற்றை நடக்க வைக்கிறார்கள். யானையின் இயல் பென்பது நடந்து கொண்டே இருப்பது. ஓரிடத்தில் நிற்கவே நிற்காது. கோயில் யானைகள் ஒரே இடத்தில் நிற்க வைக்கப் படுகின்றன. 
அதனால், யானை களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. வருடத்துக்கு ஒரு முறை புத்துணர்ச்சி முகாமுக்கு அனுப்பி வைத்தால் மட்டும் போதாது. 

கோயில் யானை களைப் பராமரிப்பதில் கடுமையான விதி முறைகளை உருவாக்க வேண்டும். 

வியர்வைச் சுரப்பியே இல்லாத யானை மீது போர்வை போர்த்தி, அலங்காரம் செய்வது தவறு. 

தொடர்ச்சி யாக அது அனுபவிக்கும் வேதனை தான் இப்படி மன அழுத்த மாகவும் கோப மாகவும் வெளிப் படுகிறது" என்கிறார் 'ஓசை சுற்றுச் சூழல் அமைப்பின்' தலைவர் காளிதாஸ்.

கோயில் யானை

கோயில் களில் `கோபூஜை’, `கஜபூஜை’ போன்ற பூஜைகளைச் செய்வது மிகவும் விசேஷம். அதன் காரணமாகத் தான் கோயில் களில் பசுக்களும், யானைகளும் வளர்க்கப் படுகின்றன. 
பெரும் பாலான கோயில் களில் பசுக்கள் வளர்க்கப் பட்டாலும், குறிப்பிடத்தக்க சில கோயில் களில் மட்டுமே யானைகள் வளர்க்கப் படுகின்றன. 
கோயில் களுக்கு யானைகளை நன்கொடை யாகத் தரவிரும்பும் நபர்கள், வனத்துறை யினரிடம் உரிய அனுமதி பெறுவதுடன், யானைகளை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று வனத்துறை யினர் விதிக்கும் 

நிபந்தனை களுக்கு உட்பட்டுத் தான் யானை களைப் பெற்று கோயில் களுக்கு வழங்க வேண்டும் என்பது நியதி. 
ஆனால், யானை களைப் பராமரிப்பதில் வனத்துறை யினர் விதித்தி ருக்கும் நிபந்தனை களை மீறுவதால் தான், கோயில் யானை களுக்கு மதம் பிடிக்கிறது.

உரிய முறையில் பராமரித்தால், இது போன்ற அசம்பாவிதங் களைத் தவிர்த்து விடலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings