நாளை காலை 09.30AM மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகிறது !

0
நாளை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப் படவுள்ளன. மாணவர்கள் கீழ்க்கண்ட வகையில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 
நாளை காலை 09.30AM மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகிறது !
நாளை வெளியிடப் படவுள்ள தேர்வு முடிவுகளை மாணவ மாணவிகள் இணைய தளம் வாயிலாக காலை 9.30 மணியி லிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இது பற்றி, கரூர் மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில், கரூர் மாவட்ட த்தில், 10-ம் வகுப்புக்கான அரசு பொதுத்தேர்வு 16.3.2018 அன்று தொடங்கி 20.4.2018 வரை நடைபெற்றது. 

கரூர் மாவட்டத்தில், 58 மாற்றுத் திறனாளி பள்ளி மாணவர்கள் உட்பட 192 பள்ளிகளைச் சார்ந்த 6,338 மாணவர்கள், 6,180 மாணவிகள் ஆக மொத்தம் 12,514 பள்ளி மாணவ மாணவிகள் 53 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். 

இதற்கான தேர்வு முடிவுகள் நாளை (23.5.2018) வெளியிடப்பட உள்ளது. மாணவ, மாணவிகள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம் மற்றும் வருடத்தைப் பதிவு செய்து 

தேர்வு முடிவு களை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் காலை 9.30 மணியி லிருந்து மாணவ, மாணவிகள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங் களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 

தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண் களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 

பள்ளி மாணவர் களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். 

தனித் தேர்வர் களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைபேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ் செய்தியாக அனுப்பப்படும். 

28.5.2018 பிற்பகல் முதல் தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமை யாசிரியர் மூலமாகத் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் தங்களுக் கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, 

பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

பத்திரிகை மற்றும் ஊடகத்துக்கு உதவிட ஏதுவாகத் தேர்வு முடிவு களை www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணைய தளங்களி லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)