கேரளாவில் நிபா வைரஸ்... நர்ஸ் உட்பட 10 பேர் பரிதாப பலி !

0
கேரளாவில், நிபா வைரஸ் தாக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் யாரும் அஞ்ச வேண்டாம் என அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில் நிபா வைரஸ்... நர்ஸ் உட்பட 10 பேர் பரிதாப பலி !
பன்றிக் காய்ச்சல், பறவைக் காச்சல், கொசுக்களால் பரவும் டெங்கு காய்சல் ஆகியவை கேரளத்தி லிருந்து தான் தமிழகத்துக்கு பரவி யுள்ளன. 

அந்த வகையில் புது வரவாக, வௌவால் மூலம் பரவும் நிபா வைரஸ் காய்ச்சல் கேரளத்தை ஆட்டிப் படைக்கிறது. இந்த வைரஸை தமிழகத் துக்குள் நுழைய விடாமல் தடுக்க, சுகாதாரத் துறை அலெர்ட்டாக இருக்க வேண்டும்.

நிப்பா வைரஸ்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில், முகமது ஸாலிஹ், அவரின் சகோதரர் முகமது ஸாபித் மற்றும் அவர்களின் உறவினர் மரியம் ஆகியோர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர். 

அவர்களைப் பரிசோதித்த டாக்டர்கள், நிபா வைரஸ் தாக்கியதால் இறந்திருப்பதை நேற்று உறுதி செய்தனர். 

மரண மடைந்த முகமது ஸாலிஹ் சகோதரர்களின் தந்தை மூஸக்கையும் நிபா வைரஸ் காய்ச்சல் தொற்றி யுள்ளது. டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள், அருகில் இருப்பவர் களிடம் தொற்றாது. 

ஆனால், நிபா வைரஸ் தாக்கிய வர்களின் அருகில் இருப்பவர் களை அது, எளிதில் தாக்குகிறது. நிபா காய்ச்சலால் இறந்த முகமது ஸாபித்தை பராமரித்த நர்ஸ் லினியும் (31) இறந்தார். 
நிபா வைரஸ் மேலும் பரவக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக லினியின் உடல் அவரின் உறவினர் களிடம் ஒப்படைக்கப் படவில்லை.

பெரம்பாரா கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாகப் பலியானார்கள். மலப்புரம் மாவட்ட த்தில் 7 பேர் இறந்தனர். கோழிக்கோடு மாவட்ட தலைமை சுகாதார அலுவலர் ஜெயஸ்ரீ கூறுகையில், 

''பெரம்பாரா கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் இறந்து போனார்கள். அவர்களின் ரத்த மாதிரியில் நிபா வைரஸ் இருப்பதை புனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனம் உறுதி செய்துள்ளது. 

தகுந்த பாதுகாப்புடன் நோயாளி களுக்கு சிகிச்சைளிக்கு மாறு மருத்துவர்கள், நர்ஸ்களை அறிவுறுத் தியுள்ளோம்'' என்றார்.
கேரளாவில் நிபா வைரஸ்... நர்ஸ் உட்பட 10 பேர் பரிதாப பலி !
வௌவால் களிடமிருந்து விலங்கு களுக்கும், மனிதர்களுக்கும் நிபா வைரஸ் பரவுகிறது. இந்த வைரஸ் தாக்கிய விலங்குகள் மற்றும் பறவை களிடமிருந்தும் மனிதர் களுக்கு பரவுவதாக டாக்டர்கள் தெரிவித் துள்ளனர். 

வௌவால் கடித்த பழங்களைச் சாப்பிடக் கூடாது எனவும், மாம்பழங் களை நன்கு கழுவிய பிறகே சாப்பிட வேண்டும் எனவும் டாக்டர்கள் எச்சரித் துள்ளனர். 

லேசான காய்ச்சலுடன் இதன் அறிகுறிகள் தொடங்கு கிறது. பிறகு, மூச்சு விடுவதில் சிரமம், கடின தலைவலி ஏற்பட்டு அது மூளைக் காய்ச்சலாக மாறுகிறது. 
இந்த வைரஸ் தாக்கினால், 75 சதவிகிதம் இறப்பு உறுதி எனக் கூறப்படு கிறது.கேரளத்தில் வேகமாகப் பரவும் நிபா வைரஸ் காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் இருக்க, 

சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை களில் துரிதமாக இறங்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings