துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆளுநர் இரங்கல் | Governor's condolences to the families of the dead !

0
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பலியான வர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித் துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இன்றைய போராட்ட த்தின் போது ஏற்பட்ட கலவரத்தை 

அடக்க நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 10க்கும் மேற் பட்டவர்கள் உயிரிழந் துள்ளனர். 

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகத்தைப் பரபரக்க வைத்துள்ளது. மேலும் பலரும் இந்தச் சம்பவத் துக்குக் கண்டனங்கள் தெரிவித் துள்ளனர். 

பலியான வர்களின் குடும்பங் களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் அளிக்க வேண்டும் என 

எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில் அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என நிவாரணம் அளிக்க ப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குடும்பங் களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித் துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில், ``தூத்துக் குடியில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அறிந்து எனது மனம் துக்கத்தால் நிறைந்துள்ளது. 

உயிரிழந்த வர்களை இழந்து வாடும் குடும்பங் களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். 

இந்த இக்கட்டான நேரத்தில் பொது மக்கள் அனைவரும் மாநிலத்தில் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும்" எனக் கூறி யுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)