ஐ.பி.எல் பார்க்கலன்னா தலை வெடித்துடுமா? ஜெயக்குமார் !

0
ஐபிஎல் போட்டி களைக் காண பலத்த கட்டுப் பாடுகள் விதித்துள்ள நிலையில், அதை ஏன் சென்று பார்க்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி யுள்ளார்.
ஐ.பி.எல் பார்க்கலன்னா தலை வெடித்துடுமா? ஜெயக்குமார் !
இன்று காலை சென்னை யில் செய்தியாளர் களைச் சந்தித்த தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், காவிரி விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் அளித்து வருகிறது. 

நடுவர் மன்றத் தீர்ப்பாய த்தின் அடிப்படை யிலேயே தீர்ப்பு வழங்கப் பட்டது என்று நேற்று உச்ச நீதிமன்றம் கூறி யிருந்தது. 

எனவே, நடுவர் மன்றத்தீர்ப்பின் படி தமிழகத்தின் உரிமை நிலை நாட்டப்படும் என நம்புகிறோம்.

பிரதமர் மோடி வருகை யின் போது எதிர்க் கட்சிகள் 'கறுப்புக் கொடி காட்டுவோம்' என அறிவித்தி ருந்தார்கள். 

அதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நாங்கள் பச்சைக் கொடி காட்டுவோம் எனக் கூறியிருந்தார். 
இதற்கு உங்கள் கருத்து என்ற செய்தியாளர் களின் கேள்விக்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்த பச்சைக் கொடி என்பது பசுமை. 

விவசாயிகளைக் குறிக்கும். விவசாயிகளின் நலன் கருதி பிரதமர் நல்ல முடிவை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே பச்சைக்கொடி காட்டுவோம் என அமைச்சர் கூறியிருப்பார்.

பிற மாநிலங்களுக்கு, மத்திய அரசிடம் பேசி காரியத்தைச் சாதிக்கும் அளவுக்கு அறிவு இல்லை. 

ஆனால், நாங்கள் மத்திய அரசிடம் எப்படிப் பேச வேண்டுமோ அப்படி சாமர்த்தி யமாகப் பேசி, தமிழகத்துக் கான திட்டங் களையும் சலுகைக ளையும் நிறைவேற்றி வருகிறோம், 
எங்களுக்கு இருக்கும் சாமர்த்தி யமும் அறிவும் பிற மாநிலத்த வர்களுக்கு இல்லை. எனவே தான், அவர்கள் மத்திய அரசை எதிர்க் கிறார்கள்.

ஸ்டாலின், அ.தி.மு.க ஆட்சியைப் பற்றிக் குறை கூறுவது ஒன்றும் புதிதல்ல. ஸ்டாலின் வீட்டில் சமையல் செய்ய வில்லை என்றால் கூட அதற்கும் நாங்கள் தான் காரணம் எனக் கூறுவார். 

தமிழகத் தில் நடைபெற்ற பல முறை கேடுகளுக்கு தி.மு.க அரசுதான் காரணம் என்பதை ஸ்டாலின் மறந்து விட்டுப் பேசுகிறார். ஐபிஎல் தொடர்பாக எந்த நிலைப் பாட்டையும் அ.தி.மு.க அரசு வழங்க முடியாது. 

போட்டிகள் நடத்து வதும் நடத்தாமல் இருப்பதும் கிரிக்கெட் வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும். தமிழக த்தில் நடக்கும் நிலை குறித்து நாங்கள் ஏற்கெனவே கிரிகெட் வாரிய த்திடம் பேசி விட்டோம். 

அதற்கு அவர்கள், 'போட்டி ஏற்பாடுகள் முழுவதும் நிறைவடைந்து விட்டன. தற்போது அதை மாற்ற முடியாது' எனக் கூறி விட்டனர்.
இன்று, சென்னை யில் நடக்கும் ஐபிஎல் போட்டி களைக் காண பலத்த கட்டுப் பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. அவ்வளவு கட்டுப் பாடுகளுடன் அந்தப் போட்டியைப் பார்க்க வேண்டுமா? 

கிரிக்கெட் போட்டி களைப் பார்க்காமல் இருந்தால், உங்கள் தலை வெடித்து விடுமா? என்று கேள்வி எழுப்பி யுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings