ஐ.பி.எல். புறக்கணிப்பு பற்றி சுமந்த் சி. ராமன் !

0
சென்னையில் ஐபிஎல் போட்டிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று பலரும் குரல் எழுப்பி வரும் நிலையில் 
ஐ.பி.எல். புறக்கணிப்பு பற்றி சுமந்த் சி. ராமன் !
சமூக வலைத் தளங்களில் அதிக கவனம் ஈர்த்தது கிரிக்கெட் வர்ணனையாளர் சுமந்த் சி.ராமனின் ஸ்டேட்டஸ் தான். 11-வது ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்க வுள்ளது. 

மொத்தம் 60 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 7 போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தி லுள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடிய த்தில் நடைபெற உள்ளது. 

இந்தச் சென்னைப் போட்டிகளைத் தான் புறக்கணிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார் சுமந்த் ராமன்.

ட்விட்டரில் அவர் இட்டப் பதிவு இது தான். இந்த சீசனில் நடைபெற வுள்ள ஐபிஎல் போட்டிகளில் நான் பங்கேற்கப் போவதில்லை. 

போட்டியைக் காண மட்டுமல்ல, ஐபிஎல் போட்டி குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி களிலும், வர்ணனை களிலும் பங்கேற்கப் போவதில்லை. 

காவிரி மேலாண்மை வாரியம் அல்லது அதற்கு நிகரான அமைப்பு உருவாக் கப்படும் வரை இது தொடரும். வாழ்க்கை யில் விளையாட்டை விட முக்கியமான விஷய ங்களும் உண்டு. 
இந்த நேரத்தில் நாம் விவசாயி களின் பக்கம் நிற்க வேண்டும் என நம்புகிறேன்" எனப் பதிவிட்டி ருந்தார் சுமந்த்.

தீவிர கிரிக்கெட் ரசிகரும், வர்ணனை யாளருமான சுமந்த் ராமனின் இந்தத் திடீர் உக்கிர ஸ்டேட்டஸுக்கு என்ன காரணம் என அவரிடமே கேட்டோம்.

முதல்ல ஒரு விஷயத்தை தெளிவு படுத்திடுறேன். அந்த ட்வீட்டைப் போட்டது நான் தான். சிலர் நான் தான் அந்த ட்வீட் போட்டேன்னே நம்ப மாட்றாங்க. நம்புங்கப்பா அது நான் தான்.

கிரிக்கெட்டின் மிகப்பெரிய ரசிகன். அதுலயும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோட வெறித்தன மான ஃபேன். 

இருந்தாலும் உச்ச நீதிமன்றம் சொன்னதுக்குப் பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருக்கு றதுக்கு எதிர்ப்பு காட்ற விதமா தான் நான் அந்த ட்வீட் போட்டேன். 
நான் இந்த ஐபிஎல் போட்டிகள்லயும் சரி, ஐபிஎல் சார்ந்த டிவி நிகழ்ச்சி கள்லயும் சரி கலந்துக்க மாட்டேன். இந்த முடிவை எடுக்குறதுக்கு முன்னாடி சில டிவி நிகழ்ச்சிகள்ல பேசியிரு க்கேன். 

அதை இனிமேல் தான் டிவில ஒளிபரப்பு வாங்க. அதையும் ஒளிபரப் பாதீங்கன்னு அந்த டிவி நிர்வாகி களிடம் சொல்லிட்டேன்.

நிறைய பேர் கிரிக்கெட் வீரர்களை விளையாட விடாமல் அவங்களை முற்றுகை பண்ணு வோம்னு சொல்றாங்க. ஆனா அப்படி பண்ணறதுல எனக்கு உடன்பாடில்ல. 

அதே மாதிரி, ஸ்டேடியம்ல மேட்ச நடக்குறப்ப சார்ட்ல எழுதி எதிர்ப்பைக் காட்டுவோம்னு சிலர் சொல்றாங்க. அதுக்குச் சாத்திய க்கூறுகள் ரொம்பக் கம்மி.

மேட்ச் நடக்குறப்ப யாரும் கிரவுண்டு க்குப் போய் பார்க்காம இருக்கணும்னு தான் நான் சொல்றேன். 
அப்ப தான் அந்த மேட்ச் இந்தியா முழுக்க ஒளிபரப்பு ஆகுறப்ப ஆடியன்ஸ் இல்லாத காலி கிரவுண்ட் பதிவாகும். 

ஐ.பி.எல். புறக்கணிப்பு பற்றி சுமந்த் சி. ராமன் !
அது மேட்ச் பாக்குற பல கோடி பேருக்கு நம் நோக்க த்தைக் கொண்டு போய் சேர்க்கும். இன்னைக்கு நடக்குற பந்த், கடையடைப்பு இது எல்லாமே நம்ம ஊர் மீடியால மட்டும் தான் நியூஸாகும். 

ஆனா, நான் சொல்ற மாதிரி நடந்தா அது இந்தியா முழுக்க உள்ள பல மீடியாவுலயும் பதிவாகும். அது மிக மிக முக்கிய மான ஓர் எதிர்ப்பா பதிவாகும். 

இப்படி நம்மளோட எதிர்ப்பை வெளிப் படுத்திப் போராட்டம் பண்ணினா, அது பொது மக்களு க்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கும். 

அதே சமயம் விவசாயி களுக்கான நம் குரலாவும் இருக்கும் எனப் படபடவெனப் பேசினார் சுமந்த்.இப்பவாவது நம்புங்கப்பா.... சுமந்த் ராமனு க்கு அட்மின் எல்லாம் யாரும் இல்லயாம்!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings