ஸ்டிரைக்கின் போது விஜய் பட ஷுட்டிங் அனுமதி எப்படி?

0
கியூப் கட்டணப் பிரச்னை, தியேட்டர் பராமரிப்புக் கட்டண உயர்வு, உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி ரத்து போன்ற பல்வேறு கோரிக்கை களை முன்வைத்து தமிழ் சினிமாவில் ஸ்டிரைக் நடந்து கொண்டி ருக்கிறது. 
ஸ்டிரைக்கின் போது விஜய் பட ஷுட்டிங் அனுமதி எப்படி?
சில வாரங்க ளாகவே எந்த தமிழ்ப் படங்களும் ரிலீஸாக வில்லை. மேலும், தற்போது படப்பிடிப் புகளும் நடை பெறக்கூடாது என்றொரு அறிக்கை யையும் வெளியிட் டுள்ளனர். 

இதன் காரண மாக மார்ச் 16-ஆம் தேதி முதல் உள்ளூர் படப்பிடி ப்புகள் நிறுத்தப் பட்டன. 

வெளி நாடுகளில் நடந்து கொண்டிருந்த தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு வருகின்ற 23-ஆம் தேதியோடு நிறுத்தப்பட இருக்கின்றன. 

இந்த சினிமா ஸ்டிரைக் தயாரிப்பாளர் சங்கம், ஃபெப்சி அமைப்பு, இயக்குநர்கள் சங்கம் என அனைத்து சங்கங் களின் சம்மதத் துடன் நடைபெற்று வருகிறது. 

இதனால், கியூப் பிரச்னைகள், தியேட்டரில் நடக்கும் முறை கேடுகள், நடிகர் களின் சம்பளம், சிறிய பட்ஜெட் படங்க ளுக்குத் தியேட்டர்கள் ஒதுக்கீடு... 

எனப் பல்வேறு பிரச்னை களுக்குத் தீர்வு கிடைக்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது. 

இதற்கிடையே தான், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னை விக்டோரியா ஹாலில் நடை பெற்று வருவதாக தகவல்கள் கசிந்தன. 

'அனைத்து படப்பிடிப்பு களும் நிறுத்தப் பட்ட நிலையில், விஜய் படத்துக் கான படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக் கிறது. 
ஸ்டிரைக் நடந்து கொண்டிருக்கும் போது எப்படி படப்பிடிப்பை நடத்தலாம்?' என்று தயாரிப் பாளர் ஜே.எஸ்.கே டிவிட்டரில் தனது ஆதங்கத்தை வெளிப் படுத்தியிருக் கிறார்.

இது பற்றி ஜே.எஸ்.கே- விடம் கேட்ட போது, ''ஃபெப்சி அமைப்பில் வேலை செய்கிற தொழிலா ளர்கள், விஜய் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்ல வேலை செய்றாங்க. 

அவங்க தான் என்கிட்ட, அங்கே ஷூட்டிங் நடக்கிற விஷய த்தைச் சொன்னாங்க. சினிமா ஸ்டிரைக் எல்லோரு க்கும் பொதுவானது. 

அதை மீறி இந்த மாதிரியான விஷயங் களை செய்வது சரி கிடையாது. இதுல ரெண்டு விஷயங் களைக் கவனிக் கணும்.
விஜய் படத்துல வேலை செஞ்சிட்டு இருக்கிற சிலர், ஃபெப்சி அமைப்பைச் சேர்ந்தவங்க. இவங்க மற்ற சில படங்களிலும் வேலை பார்க்கிறாங்க. 

இந்த ஸ்டிரைக் காரணமா ஃபெப்சி அமைப்பினர் பலபேர் வேலை யில்லாம முடங்கிப் போயிருக் காங்க. 

இவ்வளவு சீரியஸா சினிமா ஸ்டிரைக் நடந்துக் கிட்டு இருக்கும் போது, பொறுப் பான இடத்துல இருக்கிற நாம படப்பிடிப்பை நடத்தக் கூடாதுனு விஜய்க்குத் தெரியதா என்ன...

தயாரிப்பாளர் சங்கத்தி லிருந்து, 'நாங்கதான் விஜய் படத்துக்கு ஸ்பெஷல் பெர்மிஷன் கொடுத்தோம். ஏன்னா, அவங்க பெரிய லெவல்ல செட் போட்டிருந் தாங்க'னு சொல்றாங்க. 

ஆனா, இந்தத் தகவல் வெளிவந்ததே தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த துரைராஜ் கிட்ட இருந்து தான். 

விஜய் படத்துக்கு மட்டும் ஸ்பெஷல் பெர்மிஷன் கொடுத்தா, பிரச்னை வரும்ங்கிற தால வேறு சில சின்னப் படங்களு க்கும் அனுமதி கொடுத்தி ருக்காங்க. 

இதுக்குப் பதிலா, ஷூட்டிங் பாதியில நிற்கிற 40 படங்களு க்கும் சேர்த்து அனுமதி கொடுத்தி ருக்கலாமே?

இதைப் பத்தி நான் கவுன்சில் பொறுப்புல இருக்கிற தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கிட்ட பேசினேன். 
'அப்படியா, இதைப் பத்தி எனக்கு எந்தத் தகவலும் தெரிய லையே!'னு சொன்னார். இன்னும் சிலபேர் என் போனைக் கூட எடுக்கலை. 

என்னைப் பொருத்த வரைக்கும் சினிமா ஸ்டிரைக் நடந்துட்டு இருக்கும் போது, படப்பிடிப்பு நடக்க கூடாது, எல்லா த்தையும் நிறுத்தணும். 

எல்லோருடைய உணர்வுக்கும் மரியாதை கொடுக்கணும் என்று முடித்தார், ஜே.எஸ்.கே. தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே வின் குற்றச் சாட்டு குறித்து கவுன்சிலின் செயலாளர் எஸ்.எஸ். துரைராஜிடம் பேசிய போது, 

சென்னைக்கு மார்ச் 16-ஆம் தேதியிலிருந்தும், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் நடக்கும்  படப்பிடிப்பு களுக்கு 23-ஆம் தேதியிலிருந்தும் ஷூட்டிங்கை ரத்து செய்யணும்னு முடிவு செய்ய பட்டிருந்தது. 

'ஷூட்டிங்கை ஒத்தி வைப்பதில் ஒன்றிரண்டு நாள்கள் முன்னப் பின்னே ஆச்சுனா, அதுக்கான அனுமதி களைக் கேட்டு வாங்கிட்டு ஷூட்டிங்கை நடத்தலாம்' னு முடிவு எடுத்தி ருந்தாங்க. 

சமுத்திரக்கனி சார் இயக்குற 'நாடோடிகள் 2' படத்துக் கான ஷூட்டிங் மதுரையில நடந்திட்டு இருக்கு. 
அவங்க கூடுதலா சில நாள்கள் அனுமதி கேட்டிருந் ததுனால, 23-ஆம் தேதி வரை ஷூட்டிங்கை நடத்திக்க அனுமதி கொடுத்தி ருந்தோம். 

மேலும், ஈ.சி.ஆர்ல நடக்குற ஒரு ஷூட்டு க்கும், டெல்லியில நடந்துக் கிட்டு இருக்கிற ஒரு ஷூட்டு க்கும் தேதிகளை 23-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்தி ருந்தோம். 

நாங்க எல்லாப் படப்பிடிப்பு களையும் கண்காணி ச்சுக் கிட்டு தான் இருக்கோம். சில பேரால டக்குனு ஷூட்டிங்கை ரத்து செய்திட முடியாது. 

அதுக்காக மட்டும் தான் சில படக்குழுவின ருக்கு தேதிகளை நீட்டிச் சிருக்கோம். விஜய் படத்து க்கும் அந்த அடிப்படை யில் தான் மூன்று நாள்கள் அனுமதி கொடுத்தி ருந்தோம். 

விஜய்க்கு வெளி நாட்டுல இருந்து ஸ்டன்ட் மாஸ்டர் வந்து பயிற்சி தர்றதா சொல்லி யிருந்தாங்க. தவிர, படத்துக் காக பெரிய தொகையை செலவு செஞ்சு செட் போட்டிருக் காங்க. 

அவங்களோட கோரிக்கைகள் நியாய மானதா, இல்லை யானு பரிசீலனை பண்ணிப் பார்த்த பிறகு தான், மூன்று நாள்கள் அனுமதி கொடுக்கப் பட்டிருக்கு. 
இந்த வாரத்துலேயே விஜய் படத்துக் கான ஷூட்டிங் கட்டாயம் முடிஞ்சிடும். தேவை யில்லாம யார்மேலேயும் குறைகூற வேண்டாம்" என்று கூறினார், எஸ்.எஸ்.துரைராஜ்.

ஸ்டிரைக் முடிவால், இது போன்ற சூழல்களை எப்படிச் சமாளிப்பது என முடிவெடுத் தவர்கள், அதை முறையாக விளக்கிக் கூறாதது தான், இது போன்ற வாதங்க ளுக்குக் காரணம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)