கருணை கொலைக்கு அனுமதி - உச்ச நீதிமன்றம் - ஓர் அலசல் !

0
கருணைக் கொலை’… இதை ஆங்கில த்தில் `Euthanasia’ என்கிறார்கள். கிரீஸி லிருந்து வந்த இந்த வார்த்தையின் பொருள் என்ன தெரியுமா?
கருணை கொலைக்கு அனுமதி - உச்ச நீதிமன்றம் - ஓர் அலசல் !
`நல்ல மரணம்’ அல்லது `நல்ல சாவு.’ ஒருவர் வாழ்வதற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே அளவுக்கு கௌரவத் தோடு இறப்பதற்கும் உரிமை உண்டு. 

குணப்படுத்தவே முடியாத நோயால் பாதிக்கப் பட்டு, பல ஆண்டு களாக மீள முடியாத கோமா நிலையில் கிடந்து
அவதிப்படு பவர்களைக் கருணைக் கொலை செய்யலாமா, வேண்டாமா என்று இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன. 

ஆனாலும், இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜே கருணைக் கொலைக்கு உட்படுத்தப் பட்டார் என்கிறது வரலாறு. 

பலர் கருணைக் கொலை செய்ய நீதிமன்றங் களையும் குடியரசுத் தலை வரையும் அணுகி கோரிக்கை விடுக்கவும் செய் கிறார்கள். 

கருணைக் கொலை குறித்த பல செய்திகளை அவ்வப் போது தொலைக் காட்சிகளில் பார்க்கிறோம்; செய்தித் தாள்களில் படிக்கிறோம். 

இந்த நிலையில் தான், மார்ச் 9-ம் தேதியன்று ஒரு கருணைக் கொலைக்கு அனுமதி கொடுத்து உத்தர விட்டிருக் கிறது உச்ச நீதிமன்றம்.

`தீரா நோயுடனும், மீண்டு வரவே முடியாத கோமா நிலையில் அவதிப் பட்டுக் கொண்டிருப் பவர்களை `பாசிவ் யூதனேஷியா’ (Passive Euthanasia) என்று 
சொல்லப் படும் உயிரைச் செயற்கை யாகப் பிடித்து வைத்தி ருக்கும் மருத்துவ இயந்திர ங்களின் சிகிச்சை களை நிறுத்தி, கருணைக் கொலை செய்வதற்கு அனுமதிக்க லாம். 

இதை நடை முறைக்குக் கொண்டு வருவதற் கான சட்டங்கள் விரைவில் உருவாக்கப் படும்’ என்று உச்ச நீதிமன்றம் கூறியி ருக்கிறது.
நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ - இந்தியாவில் எங்கே தெரியுமா?
கருணைக் கொலை தொடர்பான இந்தத் தீர்ப்பு, இந்திய நீதி வரலாற்றில் மிக முக்கிய மான ஒன்று. 

மானுட நெறிகளின் படி கருணைக் கொலை என்பது சரியானது தானா என்ற விவாதம் தொடர்ந்து நடைபெற்று கொண்டே தான் இருக்கிறது. 

42 வருடங் களாக கோமாவில் இருந்து, 2015-ம் ஆண்டு மே 18-ம் தேதி உயிர் நீத்த அருணா ஷான் பாக்கின் மரணத்துக் குப் 

பிறகு தான் இந்தியா வில் கருணைக் கொலை குறித்துப் பரவலாகப் பேசவும் விவாதிக் கவும் ஆரம்பித் தார்கள்.

உலகில் இந்தியா உள்பட மொத்தம் 27 நாடுகளில் கருணைக் கொலை சட்டப் பூர்வமாக்கப் பட்டிருக் கிறது. 

2002-ம் ஆண்டு, முதன் முதலாக கருணைக் கொலை எனப்படும் ஆக்டிவ் மற்றும் பாசிவ் யூதனேஷியா வை (Active and passive Euthanasia) சட்ட பூர்வமாக்கிய நாடு நெதர்லாந்து. இதை, பல நாடுகளும் வரவேற்றன. 

பொதுவாக, பல ஆண்டு களாகக் கடுமை யான நோயால் பாதிக்கப் பட்ட ஒருவரு க்குக் கொடுக்கப் படும் சிகிச்சை நிறுத்தப் பட்டோ 

அல்லது விஷ மருந்து களைச் செலுத்தியோ கருணைக் கொலை செய்யப் படுகிறது.

`தீராத நோயுடன் மிகுந்த வலியால் துடித்துக் கொண்டிரு க்கும் பிறந்த குழந்தையை, பெற்றோர் களின் ஒப்புதலுடன், 

மருத்து வர்களின் ஆலோச னையைப் பெற்று கருணைக் கொலை செய்யலாம்’ என்கிறது 
நெதர்லாந்து சட்டம். நெதர்லாந்தைத் தொடர்ந்து, அதே ஆண்டில் பெல்ஜிய த்திலும் இது சட்டப் பூர்வ மாக்கப் பட்டது. 
தங்கம் விலை உயர்வை கொண்டாடிய நகைக்கடை ஊழியர்கள் !
2014-ம் ஆண்டு, `18 வயதுக்குக் கீழிருக்கும் குழந்தை களும் தங்களின் மரணத்தைத் தீர்மானிக் கலாம்’ என்று நெதர்லாந்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. 

ஒருவர் தன் கடுமை யான நோயி லிருந்து விடுபட, மருத்து வரின் துணை யுடன் தற்கொலை செய்து கொள்ள கனடாவும் 

2016-ம் ஆண்டு அனுமதி வழங்கி யிருக்கிறது. பின்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில், மருத்துவர் களின் துணை யுடன், 

விஷ மருந்தோ, வலியை ஏற்படுத்தாத முறைகள் மூலமாகவோ கருணைக் கொலை செய்ய அனுமதி உண்டு.

அமெரிக்காவைப் பொறுத்த வரை, ஓரிகான் மாகாண த்தில் `ஆறு மாதங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும்’ என

 மருத்துவச் சான்றிதழ் பெற்றவர் களை கருணைக் கொலை செய்யும் சட்டம் 1997-ம் ஆண்டே அமலுக்கு வந்து விட்டது. 

பின்னர், கலிஃபோர்னியா, வெர்மோன்ட் (Vermont), நியூ மெக்ஸிகோ, மோன்டானா (Montana) ஆகிய மாகாணங் களிலும் அது சட்ட பூர்வமாக்கப் பட்டது. இப்போதும் நடை முறை யில் இருக்கிறது. 

ஜெர்மனி யில் கருணைக் கொலை என்பது பலவித எதிர்ப்பு களுக்குப் பின்னரே சட்ட மாக்கப் பட்டது. இதற்குக் காரணமும் உண்டு. 

கருணை கொலைக்கு அனுமதி
இரண்டாம் உலகப்போர் நடந்த கால கட்டத்தில், உடல் குறை பாட்டுடன் பிறந்த குழந்தை களை, `கருணைக் கொலை’ என்ற பெயரில் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவித் தார்கள். 

பிறர் துணை யின்றி தானாக மருந்துகள் மூலம் தற்கொலை செய்துகொள்ள, 2015-ம் ஆண்டில் சட்டம் கொண்டு வந்தது ஜெர்மனி. 
கொத்து, வீச்சு, சில்லி பரோட்டா - சிறுநீரகம், கல்லீரல் கவனம் !
சீனா, இங்கிலாந்து, அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி நாடுகளில் கருணைக் கொலை களுக்கு அனுமதி யில்லை.

`கடுமை யான, மீண்டு வர முடியாத நோயால் பாதிக்கப் பட்டிருக்கும் நமக்கு நெருக்க மானவர்கள் படும் அவதியைச் சகித்துக் கொள்ள முடியாத தால், 

அவர்களைக் கருணைக் கொலை செய்வதே நல்லது’ என்று தங்கள் பக்கத்து வாதத்தை வைக்கிறார்கள் இதற்கு ஆதரவு தெரிவிப் பவர்கள். 

ஆனால், கருணைக் கொலைக்கு எதிராகப் பேசுபவர்கள், என்ன தான் ஒருவர் நோய் வாய்ப்பட்டு துன்பங் களை அனுபவித் தாலும், மரணம் என்பது இயற்கை யாகத் தான் இருக்க வேண்டும். 

`கருணைக் கொலை’ என்று சொல்லி ஒருவரின் உயிரை எடுத்தாலும் அது கொலை தான்’ என்கிறார்கள். 

உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித் திருந்தாலும், கருணைக் கொலை சரியா, தவறா என்பது விவாதிக்கப் பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

உலகளவில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, கொலம்பியா, டென்மார்க், ஃபின்லாந்து, ஃபிரான்ஸ், அயர்லாந்து, இஸ்ரேல், ஜப்பான், லாத்வியா, லித்துவேனியா, லக்ஸம்பர்க், 
பாக். டாக்டர்கள் வெளியேரும்படி சவுதி அரசு உத்தரவு !
மெக்ஸிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, பெரு, சவுத் கொரியா, பிலிப்பைன்ஸ், சுவிட்சர்லாந்து, சுவீடன், துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, உருகுவே 

மற்றும் இந்தியா ஆகிய இருபத்தியேழு நாடுகளில் கருணைக் கொலைக்கு சட்டப் பூர்வமான அனுமதி யிருக்கிறது.

அதேசமயம், கனடா, நெதர்லாந்து போன்ற நாடுகளில் ஆக்டிவ் யூதனேஷியா (Active Euthanasia) அதாவது, விஷஊசி மூலமாகவோ 
அல்லது வேறு மருத்துவ முயற்சி களின் மூலமாக மரணிக்கச் செய்வதற் கான அனுமதி இருக்கிறது. 

ஆனால், இந்தியாவில் தற்போது அனுமதி வழங்கி யிருப்பது பாசிவ் யூதனேஷியா வுக்கு மட்டும்தான். ஒருவர் இனி வாழ வழி யில்லை 

எனத் தெரிந்தால், அவருக்கு வழங்கப் படும் மருத்துவச் சிகிச்சை களை நிறுத்தி மரணிக்கச் செய்வது. அந்த வகையில் இது பெரிய பாதிப்பு களை ஏற்படுத் தாது. 
நம் உடல் எலும்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !
இருந்த போதும் ஒவ்வொரு கருணைக் கொலை க்கும் தனிப்பட்ட முறையில் நீதிமன்ற த்தின் ஒப்புதல் பெற வேண்டியதைக் கட்டாய மாக்கலாம். 

அது தவிர, மருத்துவக் குழுவின் பரிந்துரை இதற்கு அவசியம். நீதிமன்றம் சில வழிமுறை களை வகுத்துள்ளது, அதைப் பின்பற்ற வேண்டி யதும் மிக அவசியம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings