சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி அளிப்பதை தடுப்பதாக சிரிய அரசின் மீது புகார் எழுந்துள்ளது.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அதிபரின் ஆதரவு படை களுக்கு எதிராக கிளர்ச்சி யாளர்கள் ஆயுதப் போராட்ட த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கடந்த 7 வருடங் களாக அதிபர் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சி படை களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
இந்த சண்டையில் லட்சக் கணக்கான மக்கள் கொல்லப் பட்டுள்ளனர். இதனிடையே, சிரியா நாட்டில் கிளர்ச்சி யாளர்களை குறி வைத்து,
அரசுப் படையினர் கடந்த 10 நாட்க ளுக்கும் மேலாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, நிகழ்த்தப்பட்டு வரும் விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல் களின் 1000க்கும் மேற் பட்டவர்கள் பலியாகி யுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் பலநூறு குழந்தை களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலை யில், தொடர்ந்து அதிகரித்த கண்டனங் களால் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்த வேண்டும் என ஆணை பிறப்பித்தார்.
மேலும், ரஷ்ய அரசு வான்வெளி தாக்குதல் எதையும் நடத்தாது எனவும் அறிவித்தார்.
இப்படி இருக்கை யில், சிரிய அரசு பல இடங்களில் தடுப்புகளை அமைத்து மருத்துவ உதவி அளிப்பதை தடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
வான்வெளி தாக்குதல் நிறுத்தப் பட்டாலும், தரைவழி தாக்குதல் தொடர்ந்து நடைபெறுவ தால் பல மக்கள் தொடர்ந்து பரிதாபமாக உயிரிழப்ப தாகவும் கூறப்பட்டு வருகிறது.
இதனிடையே, மருந்து களை கொண்டு செல்லும் சுரங்க வழி களையும் சிரிய அரசு அடைத்து விட்டதால், பெரும் பாலான பொது மக்கள் மருத்துவ வசதிகளை பெற முடியாத சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், மருத்துவ வசதிகள் தேவைப்படும் நபர்களை அடையாளம் காணவே 5 மணி நேரம் சரியாக இருப்ப தாகவும்,
போர் நிறுத்த நேரத்தை நீட்டிக்க வேண்டும் எனவும் போர் களத்தில் சேவை செய்யும் தன்னார்வ மற்றும் மருத்துவ குழுக்கள் வேண்டுகோள் விடுத்து ள்ளனர்.
Thanks for Your Comments