சிரியாவில் ரசாயண குண்டு... ஐ.நா புகாருக்கு வடகொரியா மறுப்பு !

0
சிரியாவிற்கு ரசாயன குண்டு தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்களை கொடுத்து உதவிய தாக ஐ.நா சபை புகார் கூறியிருந்த நிலையில், அதனை வடகொரியா மறுத்துள்ளது.
சிரியாவில் ரசாயண குண்டு... ஐ.நா புகாருக்கு வடகொரியா மறுப்பு !
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமை யிலான அரசுக்கும், கிளர்ச்சி யாளர்களு க்கும் இடையே கடந்த 7 ஆண்டு களாக உள்நாட்டு போர் நடை பெற்று வருகிறது. 

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம், மீண்டும் சிரியா நாட்டில் கிளர்ச்சி யாளர்களை குறி வைத்து அரசுப் படையினர் கடந்த தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

ரஷிய ராணுவத் துடன் இணைந்து சிரியா நடத்திய குண்டு வீச்சில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர். 

இந்நிலை யில், ரசாயன குண்டு தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்களை சிரியாவு க்கு வடகொரியா வழங்கிய தாக தகவல் வெளி யாகியது.

இது குறித்து ஐ. நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டுள்ள தாவது குளோரின் குண்டு தயாரிக்கும் போது 
ஆசிட்டின் தாக்கத்தை தாங்கும் வகையில் கட்டிடம் அமைய பலம் வாய்ந்த செங்கற்கள் மற்றும் வால்வு குழாய்கள் கப்பல் மூலம் அனுப்பப் பட்டன. 

மேலும் ரசாயன குண்டு எனப்படும் குளோரின் குண்டு தயாரிக்கும் தொழில் நுட்பத்தை வடகொரியா வின் ஏவுகணை நிபுணர்கள் நேரில் சென்று வழங்கி யுள்ளனர். 

இவை சீன வர்த்தக நிறுவனம் மூலம் சட்ட விரோத மாக 2016 மற்றும் 2017-ம் ஆண்டின் தொடக்க த்தில் பல தடவை கப்பல்களில் அனுப்பப் பட்டுள்ளன.

இவை தவிர பல ஆண்டு களாக ரசாயன குண்டு தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்கள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இத்தகவல் ஐ.நா.சபையின் ஆய்வு அறிக்கை யில் குறிப்பிடப் பட்டுள்ளது. 
சிரியாவில் ரசாயண குண்டு... ஐ.நா புகாருக்கு வடகொரியா மறுப்பு !
இதனை அடுத்து, அமெரிக்கா வும் ஐ.நா.வின் குற்றச் சாட்டை ஆமோதித்தது. இந்நிலை யில், ஐ.நா.வின் குற்றச் சாட்டை வடகொரியா மறுத்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வடகொரிய வெளியுறவு செய்தி தொடர் பாளர், “அமெரிக்கா எல்லா போர் நெறி முறைகளையும் மீறி நடந்து கொண்டுள்ளது. 

அதனால் தான், தன் மீதான தவறுகளை மறைக்க அடுத்தவர்கள் மீது பிரச்சனையை திருப்பி விடுகிறது. 

சிரியா மற்றும் ரஷ்யா உடன் எவ்வித ஆயுத ஒப்பந்த ங்களும் வடகொரியா செய்து கொள்ள வில்லை” என கூறியுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings