அலுவலகம் செல்ல 600 கிலோ மீட்டர் விமானத்தில் பயணம் !

0
அலுவலகத்திற்காக நாள்தோறும் இளைஞர் ஒருவர் 600 கி.மீ தூரம் பயணிக்கிறார். அமெரிக்காவின் லாஞ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகே வசிப்பவர் கர்ட் வோன் படின்ஸ்கி.
அலுவலகம் செல்ல 600 கிலோ மீட்டர் விமானத்தில் பயணம் !
இவரது அலுவலகம், முதலில் வீட்டிற்கு அருகே தான் இருந்தது. ஆனால் நிறுவனம் வளர்ச்சி அடைந்து, சான் பிரான்சிஸ்கோவி ற்கு மாற்றப் பட்டது. 

கர்ட் வோன் உயர் பதவியில் இருப்பதால், வேலையை விட மனமில்லை.எனவே வீட்டில் இருந்தே அலுவலகம் சென்று வர முடிவு செய்தார்.

இதற்காக விமானப் பயணத்தை தேர்ந்தெடுத்தார். அதற்காக ரூ.1,48,000 அளித்து மாத பாஸ் வாங்கிக் கொண்டார்.

லாஸ் ஏஞ்சல்ஸிற்கும், சான் பிரான்ஸிகோவிற்கும் இடையே யான தூரம் 568 கி.மீ. இதனை விமானம் மூலம் 90 நிமிடங்களில் கடந்து விடலாம்.
முதலில் வீட்டில் இருந்து 15 நிமிட கார் பயணம். பின்னர் விமானத்தில் 90 நிமிட பயணம். அங்கிருந்து அலுவல கத்திற்கு 30 நிமிட கார் பயணம்.

ஒட்டு மொத்தமாக 2.30 மணி பயண நேரமாகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் 3 மணி நேரமாகி விடும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings