இறப்பின் பின் அழுகும் மனித உடல் !

0
அழகு, கண்ணியம், பட்டம், பதவி எல்லாம் உயிர் உள்ளவரை தான். உயிர் பிரிந்ததும் அவை அனைத்தும் செல்லாக் காசாகின்றன.
இறப்பின் பின் அழுகும் மனித உடல் !
உயிர் பிரிந்ததும் யாரும் பெயர், பட்டம், பதவிகளைக் கூறி அழைப்ப தில்லை. ஜனாஸா அல்லது மைய்யித் தான். ஒரு நாளைக்கு மேல் வீட்டில் வைத்திருப்பது மில்லை. 

வைத்துக் கொள்ள விரும்புவது மில்லை. வைத்திருந் தாலும் நேரம் செல்லச் செல்ல உடற் பாகங்கள் அழுகி, பழுதடைந்து துர் நாற்றம் வீச ஆரம்பிக் கின்றது.

எதுவும் உடலினுள் இருக்கும் வரை தான் சுத்தம். வெளியேறி னால் அசுத்தம் தான்.  எச்சில் வாயினுள் இருக்கும் வரை சுத்தம் வெளியே துப்பி விட்டால் அசுத்தம். 

உணவு இரைப்பையில் இருக்கும் வரை  சுத்தம் வாந்தி யாகவோ, மலமாகவோ வெளியேறினால் அசிங்கம். நீர் உள்ளிருக்கும் வரை சுத்தம்.
சிறு நீராகவோ, வியர்வை யாகவோ, இரத்த மாகவோ வெளியேறி னால் அசுத்தம் தான். அதே போன்று உடலினுள் ரூஹும், உயிரும் இருக்கும்வர உடல் சுத்தம் தான். 

ஆனால் அவை பிரிந்து விட்டால் அந்த உடல் அசுத்தமாகி அழுக்குற்று பழுதடைய ஆரம்பிக்கின்றது. 

ரூஹ் உடலை விட்டுப் பிரிந்ததும் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு அவை உருக்குலைய ஆரம்பிக் கின்றன.

அறிவியலில் மரணம்.

இதய‌ம் துடி‌ப்பது ‌‌நி‌ன்று‌ வி‌ட்டா‌ல் அதை‌த்தா‌ன் மரண‌‌ம் எ‌ன்று பொதுவாக நா‌ம் நம்புகி ன்றோம்.  

ஆனா‌ல் மருத்துவ அறிவியலின் படி மரணம் என்பது “உடலிலுள்ள உயிர்க் கலங்களின் இயக்க மின்மை” என்று வரையறுக்கப் படுகின்றது. 
மருத்துவ அறிவியல் மரணத்தை இரு வகையாகப் பிரித்து நோக்குகின்றது. அவை மூளைச் சாவு (Cerebral death) மற்றும் மருத்துவச் சாவு (Clinical death) என்பன வாகும்.
இறப்பின் பின் அழுகும் மனித உடல் !
மருத்துவச் சாவு என்பது பல்வேறு காரணங் களினால் இதயம் இயங்காது நின்று விடுவதாகும். அப்பொழுது சுவாசித்தலும் இரத்த ஓட்டமும் நின்று விடுகின்றன. 

இதயம் நின்று போய் விட்டாலும், ஒரு சில நிமிடங்கள் வரை எமது மூளை தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும்.

அந்த சில நிமிடங் களுக்குப் பின்பு இருந்த ஒட்சிசன் வாயுவும் தீர்ந்து போவதால் மூளைக் கலங்களும் இறந்து மூளை இயக்க மற்று செயலிழந்து விடுகிறது. இதுவே மூளைச் சாவு எனப்படு கின்றது.

மூளைச் சாவே ஒரு மனிதனின் முடிவான இறப்பாகும். இதயம் நின்றாலும் அழுத் தங்கள் கொடுத்து அல்லது வேறு செயற்கை இயந்திர இதயங் களின் துணையோடு இயங்க வைக்கலாம். 

ஆனால் மூளை இறந்து விட்டால் அதன் பிறகு உயிரை மீட்டுப் பெறவே முடியாது. இ‌ப்போது தா‌ன் ஒருவ‌ர் உ‌ண்மை‌யிலேயே மரண‌ம் அடை‌ந்ததாக கருத‌ப் படு‌கிறார். 

எனவே அறிவிய லின்படி மூளையு‌ம், இதயமு‌ம் த‌ங்களது இய‌க்க‌த்தை ‌நிறு‌த்துவதே மரண மாகு‌ம்.

மரணித்த அடுத்த விணாடி…
இதயத்தின் துடிப்பு நின்று அதன் காரணமாக மூளையும் இறந்து விட்டால் உடலின் எப்பகுதி யாலும் இரத்த த்தையோ சுவாசிப்பதற்கு ஒட்சிசன் வாயுவையோ பெற்றுக் கொள்ள முடியாது போகின்றது. 

எனவே உடலில் உள்ள இலட்சக் கணக்கான கலங்களும் மூச்சுத் தினரி இறக்க ஆரம்பிக் கின்றன. 

சிலருக்கு உடலிலிருந்து மலமும், சிறு நீரும்கூட வெளியேறு கின்றது. இது ரூஹ் கைப்பற்றப் படும் ஸகராத்துடைய வேதனையினால் இருக்கலாம். முகத்தின் தோல்கள் இறுக்க மடைந்து முக சுருக்கங்கள் மறைந்து விடும்.

அவர் கடைசியாக சுவாசித்த மூச்சும் அவரது நுரையீரலில் ஏழவே இருந்த காற்றும் அப்படியே அவரது உடலில் தங்கியி ருப்பதால் 

இறந்தவரின் உடலை வேகமாக அழுத் தினாலோ அல்லது புரட்டினாலோ அவர்களிடம் இருந்து முனங்கள் சப்தம் கேட்கும். 

மூச்சு விடுவதுபோன்று நெஞ்சு ஏரி இறங்கும். சிலர் இதைதான் அவர்கள் இறந்த பிறகும் பேசினார்கள், மூச்சு விட்டார்கள் என்று கூறுவார்கள். 

நாம் இறந்த உடனே நமது உடல் உறுப்புகளும் இறந்து விடுவதில்லை. நமது இதயம், கண்கள், சிறுநீரகம் போன்ற சில உடல் உறுப்புகள் செயல்படும் திறனோடு தான் இருக்கும். 
எனவே, இறந்த அடுத்த சில வினாடி களிலேயே உறுப்பு மாற்றுச் சிகிச்சை யின் மூலம் அதை வேறு ஒருவருக்கு பொருத்த முடியும் என்கிறது மருத்துவம்.

உடல் குளிர்ச்சி யடைகின்றது.

ஒட்சிசன் இன்றி கலங்கள் மூச்சிரைத்து மூர்ச்சை யாவதால் படிப்படி யாக உடலின் வெப்பநிலை குறைய ஆரம்பிக் கின்றது.
இறப்பின் பின் அழுகும் மனித உடல் !
இதனை அல்கோர் மோர்டிஸ் (Algormortis) என்பர். மணித்தி யாளலத்திற்கு 1.5 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் வெப்பம் வெளியேறி உடல் குளிர்ச்சி யடையும். 

இந்நேரம் இறந்த ஒருவரின் உடலைத் தொட்டுப் பார்த்தால் அவ்வுடல் குளிர்ச்சியடைந் திருக்கும்.
உடலின் நிறம் மாறுகின்றது.

இரத்த ஓட்டம் நின்றிருப் பதாலும் புவியின் ஈர்ப்பு விசையாலும் உடலில் இருக்கும் மொத்த இரத்தமும் இரத்தக் குழாய்களி லிருந்து வடிந்து உடலின் கீழ்ப் பகுதியில் வந்துசேரும். 

இதனால் உடலின் மேல் பகுதி மங்களான வெளிர் நிறத்திலும் இரத்தம் திரட்ச்சி யடைந்தி ருக்கும் அடிப்பகுதி ஊதா நிறத்திற்கும் மாறும். 

ஊதா நிறத்தில் புள்ளிகளும் தோன்றி யிருக்கும். இது லிவர் மார்டிஸ் (livor mortis) என்று கூறப்படு கின்றது. 

இதனை வைத்துத் தான் உடலி லிருந்து எப்போது உயிர் பிரிந்துள்ளது என்பதை மறுத் துவர்கள் கண்டு பிடிக்கின்றனர்.

உடல் கணக்கின்றது.
சிலபோது பாரமான பொருட்களைத் தூக்கும் பொழுது நாம் விளையாட்டுக் காக “பொனப் பாரம் - பிணப் பாரம்” என்று கூறுவோம். 

இதில் உண்மை இருக்கின்றது. இறந்ததன் பின்னர் நமது உடலின் பாரம் கூடுகின்றது. அல்லது உடல் கணக் கின்றது. 

இது எப்படி நடக்கின்ற தென்றால்… நுரையீரல் சுவாசத்தை நிறுத்தியதும் ஒட்சிசன் நிறுத்தப் படுகின்றது. 

என்றாலும் உடனடியாக கலங்கள் தமது பணிகளை நிறுத்தாமல் வெறுமை யாக சுவாசிக் கின்றன. இதற்கு காற்றில்லா சுவாசம் என்பர்.

ஒட்சிசனைச் சுவாசித்தால் உடலுக்கு சக்தி கிடைக்கும். காற்றின்றி வெறுமை யாகச் சுவாசித்தால் உடற் பாகங்களில் இலக்ட்ரிக் அசிட் என்ற ஒரு வகை அமிலம்தான் உருவாகும். 

இந்த அமிலத்தால் உடலின் உறுப்புகளின் மென்மைத் தன்மை நீங்கி உடல் உறுப்புகள் கடினத் தன்மை பெறும். இறுகி கெட்டியாகி விடும். 
இதனை ரீகர் மார்டிஸ் (Rigor Mortis) என்பர். ஒருவர் மரணித்து ஆறு மணி நேரங்களில் இச் செயற்பாடுகள் ஆரம்பமாகி 48 மணி நேரம் வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும். 

நாம் உயிருடன் இருக்கையில் வேகமாக நீண்ட தூரம் ஓடினாலும் இந்த அமிலம் சுரக்கின்றது.  

ஆனால் அப்போது வேக வேகமாக மூச்சிரைப்ப தால் இரத்த ஓட்டத்துடன் இந்த அமிலம் கலந்து வீரியம் குறைந்து பாதிப்பிலாமல் செல்கின்றது. சிலவேலை தசைப் பிடிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

பக்டீரி யாக்களின் பணி ஆரம்பம்.

இரண்டு நாட்களோடு இந்த அமிலம் உடல் முழுக்கப் பரவி உடல் கெட்டியாகி இருப்பதனால் இனியும் பக்டீரியா மற்றும் ஏனைய கிருமிகளை எதிர்த்துப் போராடத் திராணியற்ற நிலைக்கு உடல் மாறி யிருக்கும். 

தற்போது இரத்தத்தில் உள்ள கார்பன் அணுக்கள் விரிவடைய ஆரம்பிக் கின்றன. இதனால் கலங்களும், திசுக்களும் பருத்து ஊதி வெடித்து, அதன் என்சைம்ஸ் களை வெளியேற்றும். 
இறப்பின் பின் அழுகும் மனித உடல் !
கணையமும் தனக்குள் உள்ள என்சைம்களை வெளியேற்றி விடும். எனவே மீண்டும் உடல் கடிணத் தன்மை இழந்து, மென்மையாகி விடும். 

இனி குடல், மலப் பை போன்ற இடங்களிலில் வாழும் பக்டீரி யாக்களும் இதர கிருமிகளும் குடல் களை கொஞ்ஞம்

கொஞ்சமாக சாப்பிட ஆரம்பிக்கும். குறுகிய நேரத்தில் அவை இண்ணும் இணத்தைப் பெருக்கிக் கொண்டு உடலின் ஏனைய அங்கங்களுக் குள்ளும் நுழைந்து பெரும் பகுதியைத் தின்று தீர்த்து விடும்.
துர் நாற்றம் வீசத் தொடங்கும்.

உடலில் சேர்ந்திருந்த திரவங்கள் இரத்தம், சிறுநீர், அமிலங்கள், நொதியங்கள் இன்னும் இது போன்ற திரவங்கள் எல்லாம் அதனதன் பகுதிகளி லிருந்து கசிந்து உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் வழிந்தோட ஆரம்பிக்கும். 

இது கிருமி களுக்கு இன்னும் இலகுவாக உடலைத் திண்பதற்கு உதவி புரியும். 

இத்திரவங்கள் புழுத்து வடிந்து கொண்டிருக்கும்  தசைப் பகுதிகளில் பட்டு, ஊரி காற்றுடன் கலந்து குறிப்பிட்ட தூரத்திற்கு சகிக்க முடியாத துர் நாற்றத்தைக் கிளப்பி விடும். 
உடலுக்குள் நச்சுகளை நீக்க தண்ணீர் போதும் 
உடல் அழுகும் போது பியுட்ரஸைன் (putrescine), கெடாவரைன் (cadaverine) காலரா நுண்ணுயிர் நச்சு போன்ற இரசாய னங்கள் வெளியேறும். இதன் காரணத் தால் தான் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.

மோப்பம் பிடிக்கும் ஈக்கள்.

இறந்த பிணங்களில் ஈக்கள் வந்து மூடுவதை நாம் கண்டிருப்போம். உடலி லிருந்து ஆன்மா பிரிந்தால் அது ஈக்களுக்குத் தெரிந்து விடும். 

எனவே ஒருவர் மரணித்து ஒரு மணி நேரம் கழிந்ததி லிருந்து அச்சடலத்தின் மேல் ஈக்கள் வந்து மொய்த்து முட்டையிட ஆரம்பிக் கின்றன. 

அனேகமாக அவை வாய், மூக்குத் துவாரம், கண்கள் திறந்திருப்பின் அதில், அக்குள் போன்ற இடங்களில் முட்டை களை இடுகின்றன. 

24 மணி நேரங்களில் முட்டைகள் பொரிக்கப்படும். முட்டையி லிருந்து குடம்பிப் புழுக்கள் (லாவாக்கள்) வெளி வருகின்றன.
பின்னர் அவை உடற் தசை களைத் தின்று தின்று அரை அங்குல நீளப் புழுக்களாக வளர்கின்றன. அதே நிலையில் இருந்து கொண்டு தொடர்ந்து 12 நாட்களுக்கு அவை சடலத்தை உண்ணு கின்றன. 

புழுக்கள் இறந்தவரின் 60% உடலை ஒரே வாரத்தில் தின்று செரித்து விடும். அதன் பின் அப்புழுக்கள் ஈக்களாக வளர் கின்றன. 

குறித்த சடலம் புதைக்கப் படாமல் வெளியிலேயே வைக்கப் பட்டிருந்தால் வளர்ச்சி யடைந்த அதே ஈக்கள் இணப் பெருக்கம் செய்து மீண்டும் அச்சடல த்தின் மீதே முட்டை யிடுகின்றன. 

இவ்வாறு ஒரு சடலத்தைச் சுற்றியே அது மனிதனா கவோ, விலங்கினங் களாகவோ இருக்கலாம் ஆயிரக்கணக் கான ஈக்களின் வாழ்க்கை வட்டம் ஆரம்பிக் கின்றன.

உக்கிப்போகும் உடல்
ஆக இத்தகைய பல்வேறு நிலைகளின் பின்பு படிப்படி யாக உடலை நுண் கிரிமிகளும், புழுக்களும் தின்று உடல் மக்கிப் போகும். 

நான்கு மாதங்களில் இறந்தவரின் உடலில் இருக்கும் மொத்த தசைகளும் அழுகி, வெறும் எலும்புக் கூடு மட்டும் தான் மிஞ்சும். 

எழும்புப் பகுதிகள் மாத்திரம் பல வருடங்கள் வரை அப்படியே எஞ்சி யிருக்கும். அதுவும் மிக மெதுவாக உக்கிக் கொண்டிரு க்கும்.
உடனே அடக்கிவிடுங்கள்.

பொதுவாக இன்று முஸ்லிம் அல்லா தவர்கள் அவர்களில் யாரும் இறந்து விட்டால் அவர்களது உடலை எம்பம் செய்து மூன்று நாட்களு க்கு வீட்டில் வைத்தி ருப்பார்கள். 

இதனால் இறந்திருக்கும் அவ்வுடலுக்கு மாத்திர மல்லாமல் சுற்றியிருப் பவர்களுக்கும் பெரியதொரு அநியாயம் இழைக்கப் படுகின்றது 

என்பதை மேற்கூறிய பந்திகளைப் படிக்கும் உங்களால் ஊகிக்க முடியுமாக இருக்கும். 
இறந்தவர் களை கால தாமதப் படுத்தாது உடனே புதைத்து விடுவது தான் அனை வருக்கும் சிறந்தது என்பது தான் நவீன மறுத்துவத்தின் முடிவு. இதனைத் தான் நபி (ஸல்) அவர்கள் அன்றே கூறி விட்டார்கள்.

“உங்களில் ஒருவர் இறந்து விட்டால் அவரது உடலை வீட்டில் வைத்துக் கொண்டிருக்க வேண்ட்டாம். அவரது உடலை உடனே கப்றுக்கு எடுத்துச் செல்லுங்கள்” (தபரானி)

படிப்பினை.

அழகான தோற்றத்தில் படைக்கப் பட்டிருக்கும் உயிரினங்கள் அனைத் தினதும் இறுதி நிலை இது தான். 

மனிதன் தனது அழகை வைத்து, கம்பீரமான தோற்றத்தை வைத்து, பட்டம், பதவி, அதிகாரம் என்ப வற்றை வைத்தெல்லாம் உலகில் பெருமை யடித்துத் திரிகின்றான். 

ஆனால் அவனது உடல் எத்தகைய அவலட்சன மானதொரு நிலைக்கு இருதியில் தள்ளப் படுகின்றது என்று அவன் பார்க்க மாட்டானா? உக்கி மண்ணோடு மண்ணா கியதன் பின்பும் மனிதன் விட்டு விடப் படுவானா?
இறப்பின் பின் அழுகும் மனித உடல் !
அல்லாஹ் கேட்கின்றான் மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணு கிறானா? (75:3) வெறுமனே விடப் படுவான் என்று மனிதன் எண்ணு கிறானா? (75:36) இல்லை 

யாவற்றிலும் அதிகாரம் மிக்க அல்லாஹ் உருக்குழைந்து சின்னா பின்னமாகி, அழுகி, மக்கி, உக்கிப் போன இந்த உடலை அது இறக்க முன்பு எப்படி இருந்த்தோ 

அதே அமைப்பில் எந்த வித்தி யாசங்களும் இன்றி மீண்டும் உயிர்ப்பித்து எழுப்புவான். அவன் அத்துனை சக்தியும் அதிகாரமும் வல்லமையும் மிக்கவன்.
(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்பு களை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?  அப்படியல்ல, 

அவனது விரல் நுனிகளையும் (அதன் இரேகை களையும் முன் பிருந்தவாறே) செவ்வையாக நாம் ஆக்க ஆற்றலுடையோம். (75:3)
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings