ஷாப்பிங் மால் பற்றிய ஒரு ஷாக்கிங் ரிப்போர்ட் !

சென்னை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் ஷாப்பிங் மால்களின் எண்ணிக்கை சமீப காலமாக வேகமாக அதிகரித்து வருகிறது.
ஷாப்பிங் மால்.. ஷாக்கிங் ரிப்போர்ட் !
துணிக் கடைகள், புத்தகங்கள் மற்றும் ஸ்டேஷனரிஸ், ஃபுட் கோர்ட், குழந்தைகள் விளையாட பொழுது போக்கு அம்சங்கள்,

சினிமா தியேட்டர்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பதால், பார்த்த மாத்திரத்திலேயே அனைவரையும் கவர்ந்து இழுத்து விடுகிறது.   

ஆப்பிரிக்காவில் வைரங்கள் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது?

சும்மா பார்க்க வருபவர் களைக்கூட சுண்டி இழுத்து வாங்க வைத்து விடும் அளவுக்கு மால்களில் ஈர்ப்பு ஏற்படுகிறது என்றால், அதற்கு என்ன காரணம் தெரியுமா? 
ஷாப்பிங் மால்.. ஷாக்கிங் ரிப்போர்ட் !
தெரிந்தால் ஷாக்காகி விடுவீர்கள்... வர்மக் கலை தெரிந்தவர் களுக்கு ஒருவனை எந்த இடத்தில் எப்படித் தாக்கினால் அவன் வழிக்கு வருவான் என்பது நன்றாகத் தெரியும்.

கிட்டத்தட்ட அந்த வர்மக் கலைக்கு ஈடாக ஒருவரை எப்படி எங்கே அசத்தினால் வலையில் வீழ்வார் என்பதை அறிந்து, அதற்கேற்ப கடைகளை அமைக்கிறார்கள் வல்லுநர்கள். 

துணிக்கடைகள் !  
ஷாப்பிங் மால் பற்றிய ஒரு ஷாக்கிங் ரிப்போர்ட் !
கடைசியாக நீங்கள் சென்ற மாலில் மார்க்ஸ் அண்ட் ஸ்பென்ஸர், லைஃப் ஸ்டைல், கெஸ் போன்ற கடைகள் எங்கே இருந்தது என்று நினைவு படுத்திப் பாருங்கள்...

நிச்சயமாக அவை மால்களுக்குள் நுழைந்த வுடனேயே இருக்கும். பெரிய பிராண்ட் எல்லாம் தங்கள் கடைகளை தரை தளத்தில் தான் வைக்கிறார்கள். 

அதே போல் ஆண்களுக்கான டிரஸ் கடைகளும் நிச்சயமாக கீழ் தளத்தில் தான் இருக்கும். அதுவே, பெண்களுக்கான கடைகளை நான்காவது, ஐந்தாவது மாடிகளில் கூட வைத்திருப்பார்கள்!

மூட்டை பூச்சியை விரட்ட சில சுலபமான வழிகள் !

இதற்கு என்ன காரணம்? ஆண்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அதிக பொறுமை இருக்காது. வந்த வேகத்தில் ஏதோ ஒரு டிரஸை எடுத்து விட்டு கிளம்பி விடுவார்கள். 

மூன்றாவது தளம் ஐந்தாவது தளம் என்று அவர்களுக்கான கடைகளை வைத்தால் வந்த வேகத்தில் வெளியேறி வேறு ஏதாவது ஒரு கடையில் எடுத்துக் கொண்டு சென்று விடுவார்கள்.

அதனால் தான் அவர்களுக்கான கடைகளு க்கு தரைத் தளத்திலோ முதல் தளத்திலோ இடம் ஒதுக்கி விடுவார்கள்.

பெண்கள் மணிக்கணக்கில் ஷாப்பிங் செய்வதாக இருந்தாலும், அசரக் கூடியவர்கள் இல்லை என்பதால் நான்காவது, ஐந்தாவது மாடிகளில் தான் அவர்களுக்கான கடைகளை வைத்திருப்பார்கள்.

காஸ்மெட்டிக் ஐட்டங்கள் !
ஷாப்பிங் மால்.. ஷாக்கிங் ரிப்போர்ட் !
விலை உயர்ந்த வாட்சுகள், பெல்ட்டுகள், லிப்ஸ்டிக் மற்றும் பெர்ஃபியூம் போன்றவற்றை முகப்பில் தான் வைத்திருப் பார்கள். 

உள்ளே நுழையும் நிமிடத்திலேயே அவை நம் கவனத்தை ஈர்த்து விடும். அதே சமயம் நுழைந்த வேகத்தில் அதை யாரும் வாங்குவதில்லை. 

அவர்களும் வாங்கச் சொல்லி அழைப்பதில்லை. எல்லா வற்றையும் சுற்றிப் பார்த்து விட்டு வெளியே வரும் போது, முதலில் நம் கவனத்தை ஈர்த்த

நம் உடல் சூடாக காரணம் என்ன?

இந்த ஐயிட்டங்கள் நம்மை மேற்கொண்டு செல்ல விடாமல் செய்து விடும். அந்த தடுமாற்றம் ஒன்று போதாதா பிஸினஸ் செய்பவர் களுக்கு!

ஃபுட் கோர்ட் !
ஷாப்பிங் மால் பற்றிய ஒரு ஷாக்கிங் ரிப்போர்ட் !
சாட் அயிட்டங்கள், காபி ஷாப், ஐஸ்கிரீம் ஷாப் போன்ற விஷயங்கள் பெரும்பாலும் மேல் தளத்தில் இருக்காது; கீழ் தளத்தில் தான் இருக்கும். 

விலையுயர்ந்த சாக்லேட்டுகள், பிஸ்கெட்டுகள் மேல் டிராக்கிலும், விலை குறைவான ஐயிட்டங்கள் கீழ் டிராக்கிலும் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும்.

கோதுமையில் உள்ள சத்துக்கள் !

விலை அதிகமான பொருட்களை மேல் டிராக்கில் வைப்பதற்குக் காரணம், அவைதான் சட்டென கண்ணில் படும்.

அது மட்டுமல்ல, பெரும் பாலானவர்கள் பொருட்களைக் குனிந்து  எடுத்துப் பார்ப்பதைத் தவிர்க்கவே விரும்புவார்கள். அதனால் கீழ் டிராக்கில் விலை குறைவானதை அடுக்கி வைத்து விடுவார்கள்!

எஸ்கலேட்டர் கவர்ச்சி ! 
ஷாப்பிங் மால்.. ஷாக்கிங் ரிப்போர்ட் !
நிறைய மால்களில் ஏறுவதற்கு ஒரு இடத்திலும், இறங்குவதற்கு இன்னொரு இடத்திலும் எஸ்கலேட்டர்கள் இருக்கும்.

ஒரு பக்கம் ஏறி அடுத்த பக்கம் இறங்கும் போது தான் எல்லா பக்கமும் இருக்கிற கடைகளும் நம் கண்ணில் படும். இல்லா விட்டால், சில கடைகள் கண்ணில் படாமலேயே போய் விடும்.

இன்னொரு சுவாரஸ்யமான டெக்னிக்... படி ஏறியிறங்காமல் எஸ்கலேட்டரை உபயோகிக்கும் போது நிறைய பேர் மனதில் ஆரோக்கியம் குறித்த எண்ணம் சில நொடியாவது எழுந்து மறையும். 

அந்த சமயத்தை சரியாகப் பயன்படுத்தும் விதமாக எஸ்கலேட்டர் களுக்கு அருகில் தான் உடற்பயிற்சிக் கூடம், உடற்பயிற்சி கருவிகள் போன்ற வற்றை வைத்திருப்பார்கள்! 

பொழுது போக்கு !
ஷாப்பிங் மால் பற்றிய ஒரு ஷாக்கிங் ரிப்போர்ட் !
குழந்தைகளுக் கான கேம்ஸ் பகுதியில் பெரும்பாலும் ஸ்மார்ட் கார்டை உபயோகிக்கும் படி தான் வைத்திருப்பார்கள். குறைந்த பட்சம் 200 ரூபாயாவது கொடுத்து தான் கார்டு வாங்க வேண்டிய திருக்கும்.
மூட்டு வலியை போக்க வர்ம புள்ளிகள் !
அந்த தொகை காலியாகி விட்டால் அடுத்து டாப் அப் செய்ய வேண்டும். விளையாடியது போக பாக்கி பணம் மீண்டும் ரொக்கமாகக் கிடைக்காது. 

அடுத்த முறை வரும் போது அந்தப் பணத்தை உபயோகித்துக் கொள்ளலாம்.  இதற்காகவே அடுத்த முறை வேறு மால்களுக்குச் செல்லாமல் அதே மாலுக்கு திரும்பத் திரும்ப வருவார்கள். 

இதே கதை தான் ஃபுட் மாலிலும். அடுத்த முறை மாலுக்குள் நுழையும் போது மேலே சொன்ன விஷயங்களை 
மனதில் வைத்துக் கொண்டு தேவையான வற்றை மட்டும் வாங்கி சந்தோஷமாக உங்கள் பட்ஜெட்டுக்குள் ஷாப்பிங் செய்யுங்கள்.....  விகடன்  
Tags: