ஒரு விலைமாது தாயின் கண்ணீர் கதை.... என் வாழ்வில் நான் அவனுடன் மட்டும் தான் அச்சமின்றி பேசி வந்தேன்.
என் மகன் விபச்சாரியை காண... விலை மாதுவின் கண்ணீர் கதை !
என்னை பிரிய மாட்டேன் என்று வாக்குறுதி அளித்து, வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க செய்தவனும் அவன் மட்டுமே.

ஒரு நாள் என் மேடம் நான் கர்ப்பமாக இருப்பதை அறிந்து, என் வயிற்றில் வளரும் குழந்தையை கொன்று விட வேண்டும் என்று முயற்சி செய்து, அடித்து உதைத்தார்.
ஆனால் அப்போது நான் அவரது கால்களை விடாமல் பிடித்துக் கொண்டு அழுதேன், கெஞ்சினேன், நான் வாழ ஒரு வாய்ப்பு அளியுங்கள் என்று கேட்டு கொண்டேன்.

ஒரு அளவிற்கு மேல் என் மேடம், என்னை அடித்து தள்ளுவதை விட்டு, நான் கூறுவதை செவி கொடுத்து கேட்க ஆரம்பித்தார்.

நீ இந்த குழந்தையை பெற்றெடுத்தால் நிறைய வருத்தப் படுவாய், வாழ்நாள் முழுக்க இது உனக்கு வலியை தரும் என்று அவர் கூறினார்.

சில நாட்கள் சென்றதும் எனக்கு குழந்தை பிறந்தது. அப்போது எனக்கு ஈனு கால வலிப்பு ஏற்பட்டது. அதனால் நிறைய ரத்தபோக்கு உண்டானது.
அந்த கடுமையான நேரங்களிலும் கூட நான் என் குழந்தையுடன் பேசுவதை நிறுத்தவில்லை. அவனது காதருகே மெல்லிய குரலில் என்னால் முடிந்த வரை அவனுடன் பேசினேன்.

நீ பெரிய பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அவனுக்கு அறிவுரைத்தேன். அப்போது அவன் மூன்று மாத குழந்தை. அவனுக்கு பறவைகள் என்றால் மிகவும் பிரியம்.

ஆனால், நாங்கள் கூண்டில் அடைப்பட்டு கிடந்ததால், அவனுக்கு பறவைகளை காட்ட முடியாமல் போனது. 
அதனால் எனக்கான வாடிக்கையாளர்களை மீண்டும் எதிர்கொள்ள வேண்டிய சூழல், கட்டாயம் ஏற்பட்டது.

மீண்டும் பாலியல் தொழிலில் வேலை செய்ய ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும், என்றோ ஒரு நாள் என் குழந்தை என்னை மிகவும் வெறுக்க போகிறான் என்ற அச்சம் மட்டும் என்னை தொற்றிக் கொண்டே இருந்தது.
ஆனால், அவன் எனக்கு அப்போது அளித்த பரிசு அவனது புன்னகை தான். ஒவ்வொரு முறையும் என்னை பார்க்கும் போது, அவன் சிரிப்பான்.

மூன்று மாதம் 21 நாட்கள் ஆன நிலையில் அவனுக்கான வாழ்க்கை அவனை தேடி வந்தது. குழந்தைகள் இல்லாத ஒரு தம்பதி, எனது குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள கேட்டனர்.

ஆனால், எனது மேடம் அவர்களிடம் குழந்தையை கொடுக்காதே, உன்னால் அவன் இல்லாமல் வாழ முடியாது என கூறினார். 

ஆனால், எனக்கு குழந்தை இல்லாத அந்த தம்பதிகளிடம் என் குழந்தை செல்வது தான் சரி எனப்பட்டது.

அந்த பெண் எனது பையில் ஒரு கட்டு பணம் கொண்டு வந்து கொடுத்தார். அவர்கள் கடைசியாக ஒரு முறை என் குழந்தையை என்னிடம் காட்டினார்கள்.
எனது மகன் கூண்டில் பறவையாக இருப்பதை நான் விரும்பவில்லை. அவன் ஆகாயத்தில் பறக்க வேண்டும். உங்களால் முடிந்தால் அதை மட்டும் செய்யுங்கள் என அந்த தம்பதியிடம் நான் கேட்டுக் கொண்டேன்.
என் மகன் ஒரு விபச்சாரியை கண்டு சிரிப்பதில் எனக்கு விருப்பமில்லை.....