உடல் பருமனைக் குறைக்கும் லவங்கப் பட்டை !

0
லவங்கப் பட்டையில் உள்ள Cinnamaldehyde என்கிற எண்ணெய்ப் பொருள், உடல் கொழுப்பை அதிகரிக்கும் செல்களுக்கு எதிராக செயல்பட்டு உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது என்பது கண்டறியப் பட்டுள்ளது. 
உடல் பருமனைக் குறைக்கும் லவங்கப் பட்டை !
லவங்கப் பட்டையின் சுவை மற்றும் நறுமணத்துக்கு அதிலுள்ள Cinnamaldehyde என்ற எண்ணெய்ப் பொருளே காரணமாக இருக்கிறது. 

இது நம் உடலிலுள்ள கொழுப்பு செல்களை சூடாக்கி, அதன் மூலம் உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக் கிறது. 
இப்படி மனிதர்கள் அல்லது மிருகங்களின் உடலில் உண்டாகும் வெப்ப ஆற்றலுக்கு Thermogenesis என்று பெயர். 

இந்த எண்ணெய் பொருளானது தெர்மோ ஜெனிசிஸ் இயக்கத்தை நொதிகள் மற்றும் மரபணுக்களில் அதிகரிக்கச் செய்து உடல் வளர்சிதை மாற்ற த்துக்கு உதவுகிறது.

சின்னமால் டிஹைடு பரிசோத னையை சுண்டெலி களில் மேற்கொண்ட போது உடல் பருமன் பிரச்னைக்கு எதிராக செயல் பட்டது தெரிய வந்தது. 
இதே பரிசோதனையை மனிதர்களில் செய்த போதும் அதே மாதிரியான ஆய்வு முடிவுகள் கிடைத் துள்ளது. 

ஆயிரக்கணக் கான ஆண்டுகளாக நமது உணவில் பயன்படுத்திவரும் லவங்கப் பட்டையிலுள்ள Cinnamaldehyde என்ற 

எண்ணெய்ப் பொருள் உடல் பருமன் பிரச்னையைத் தடுக்க உதவுகிறது என்பது மகிழ்ச்சிக் குரிய செய்தி தான்.

உடல் பருமனைக் குறைக்க லவங்கப் பட்டையை உணவில் சரியான அளவு சேர்த்துக் கொள்ளலாம் என்று இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படை யில் பரிந்துரைக்கலாம். 

அப்பளம் விற்ற சிறுவனுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அனுமதி !

அதே நேரத்தில் ஆய்வு இன்னும் முழுமையாக முடிந்த பிறகு தான் இன்னும் லவங்கப் பட்டையைப் பயன் படுத்தும் விதம் பற்றியும் 
ஒரு முடிவுக்கு வர முடியும்’’ என்கிறார் அமெரிக்கன் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி யாளரான ஜீன் வூ. - கௌதம்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings