தென் தமிழகத் தின் ஒரு மாநகரில் வசிக்கும் நடுத்தரக் குடும்பத்துப் பெண் அவர். சமீப நாள்களாக அவருக்கு ஒரு பிரச்னை. 


அவ்வப்போது அவர் மொபைல் போனில் திடீரென சில குரல்கள் கேட்கின்றன.

‘இன்னிக்கு கோயிலு க்குப் போகணும்னு சொன்னியே... இன்னுமா கிளம்பலை?’’ என்று அது கேட்கும். ஆம்... 
அன்று அவர் கோயிலு க்குப் போக வேண்டும் என்று தன் தோழியுடன் பேசிய போது சொல்லி யிருந்தார். 


அதைத் தான் அந்தக் குரல் சொன்னது. இப்படியாக, ‘பால் கொதிக்கிறது’, ‘மொட்டை மாடியில் துணி காய்ந்து விட்டது’ என 
அவரின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை அவருக்கு ஞாபகப் படுத்திக் கொண்டே இருந்தது அந்த