தவளைகள் வெளிநாட்டிற்கு கடத்தப்படுவது எதற்காக? - EThanthi

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

தவளைகள் வெளிநாட்டிற்கு கடத்தப்படுவது எதற்காக?

கடத்தலில் சின்ன உயிரினம் பெரிய உயிரினம் என்கிற வேறு பாடுகளெல் லாம் இல்லை. பணமென்றால் எறும்பையும் கடத்து வார்கள். எருமையை யும் கடத்து வார்கள்.
பத்து யானைத் தந்தங்களின் பணத்தை ஒரு கிலோ எறும்புத் திண்ணி செதில்கள் பெற்றுக் கொடுத்து விடும். 
ஒரு கிலோ எறும்புத் திண்ணி செதில் பணத்தை 300 கிராம் மட்டுமே இருக்கிற தவளை சம்பாதித்து விடும். 

இங்கே யானைக்கும் மார்க்கெட் இருக்கிறது, தவளைக்கும் மார்கெட் இருக்கிறது. இன்றைய அத்தியாயம் கடத்தப்படும் டார்ட் தவளைகள் குறித்து பேசுகிறது.

கடத்தப்படும் தவளை பற்றிய சிறு அறிமுகம். அபகலிப்டோ என்கிற ஆங்கில திரைப் படத்தில், படத்தின் நாயகன் ஒரு கும்பலிட மிருந்து தப்பித்து ஓர் அடர் வனத்தி ற்குள் ஓடுவார். 
அவரை எதிர் கும்பல் துரத்திக் கொண்டே வரும். எதிரி கும்பலை வீழ்த்த அவர் காட்டிலுள்ள ஒரு தவளையைப் பிடிப்பார். 

சிறு ஈட்டி போல இருக்கும் நான்கைந்து மர முட்களைத் தவளையின் முதுகில் குத்தி எடுத்து வைத்துக் கொள்வார். 

மூங்கில் குச்சியைப் பயன்படுத்தி அந்த முள்ளை எதிரியின் உடலில் செலுத்துவார். எதிரி இறந்து விடுவதாகக் காட்சி அமைக்கப் பட்டிருக்கும். 
அந்த முள்ளிலி ருந்தது தவளையின் விஷம். அந்தத் தவளையின் பெயர் விஷ டார்ட் தவளை (Poison Dart Frog).
அபகலிப்டோ தவளைகள்

2017 அக்டோபர் 17 துருக்கியின் தெற்கில் இருக்கிற குல்செரி அச்பெக்டாஸ் தேசிய நெடுஞ் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபடு கிறார்கள் காவலர்கள். 

அந்த வழியாக வந்த பேருந்திலிருந்த ஒரு பையை சோதனை செய்கி றார்கள். HANDLE WITH CARE என்ற வார்த்தைகள் சந்தேகம் கிளப்ப, திறந்து பார்த்ததில் அதிலிருந்தவை தவளைகள். 

மொத்தம் 30 பைகளில் 7500 தவளைகள். குற்ற வாளிகளை விசாரித்ததில் 70 ஆயிரம் டாலர்களுக்கு ஆசைப் பட்டுக் கடத்தியதை ஒப்புக் கொண்டார்கள். 
கையூட்டு கேட்டதால் பாலியல் வன்கொடுமை !
எல்லாத் தவளைகளும் கப்பல் மூலமாக சீனாவிற்கு கடத்த விருந்தது விசாரணை யில் தெரிய வந்தது. 

2009 - ம் ஆண்டு இஸ்ரேல் விமான நிலைய த்தில் உயிருடன் பிடிபட்ட 5 டார்ட் தவளைகள் கடத்தலின் எல்லைகள் எவ்வளவு பறந்து விரிந்தி ருக்கிறது 

அபகலிப்டோ தவளைகள்
என்பதை உலகிற்குக் காட்டியது. கைப்பற்றப் பட்ட தவளை களின் சர்வதேச மதிப்பு இந்திய ரூபாயில் 80 லட்சங்கள்.
கறுப்பு சிவப்பு, மஞ்சள் பச்சை, ஆரஞ்சு சில்வர், நீலம் மஞ்சள், பச்சை கறுப்பு, எனப் பல வண்ணங் களில் காணப் படுவதால் மழைக் காடுகளின் ஆபரணம் என இவ்வகை தவளைகள் அழைக்கப் படுகின்றன. 

பார்க்க அழகாக இருக்கிற தென்று தொட்டு விட முடியாது காரணம் அவற்றின் முதுகுப் பகுதியில் வியர்வை போன்ற விஷம் ஒன்றை அவை எப்போதும் வைத்திருக் கின்றன. 
உலகில் இருக்கிற தவளை இனத்தில் அதி தீவிர விஷம் கொண்ட தவளை வகை கொலம்பியா வின் அடர்ந்த ஈர நிலக்காடுகளில் வசிக்கும் இவை தாம். 

மஞ்சள் டார்ட் தவளையின் ஒரு கிராம் விஷம் 10 மனிதர்களை கொல்லக் கூடியது. தவளை தனக்கு ஆபத்து என்று உணர்ந்தால், தன்னைக் காப்பாற்றி கொள்வதற் காகத் தோலிலிருந்து விஷத்தை வெளியேற்று கிறது. 

‘அல்கலாய்ட்’ என்ற விஷம் தவளையின் தோல் முழுவதும் பரவியிருக் கிறது. இந்த விஷம் நரம்பு மண்டலத்தின் செயல்களை முழுமை யாகச் செயலிழக்கச் செய்து விடும். 
கடைசியில் உயிருக்கே உலை வைத்து விடும். உள்ளூர் பழங்குடி மக்கள் இதன் நஞ்சைச் சேகரித்து வேட்டை க்குப் பயன்படுத்து கின்றனர். 
திருமணத்திற்கு பின் ஆண்களின் உடலில் ஏற்பட கூடிய மாற்றங்கள்?
ஓராண்டு வரை விஷத்தைச் சேமித்து வைத்தி ருப்பார்கள். எல்லாக் கடத்தல் களுக்குப் பின்னாலும் ஒரு மருத்துவ காரண மிருக்கிறது. தவளை கடத்தலு க்கும் அதுவே காரணமாக இருக்கிறது.

கொலம்பியா

2001 ஆண்டிற்கு பிறகே தவளை கடத்தல் சர்வதேச அளவில் முக்கிய இடத்தைப் பிடித்தது. 

கடத்தப்படும் மொத்த தவளை களின் 70% கொலம்பியா வில் இருந்தே கடத்தப் படுகிறது. 
தலையின்றி நடந்து வந்த சிறுமி அதிர வைத்த நிமிடங்கள் !
கொக்கைன், கஞ்சா, அபின் எனக் கடத்தல் தொடர்பான எல்லா நெட்வொர் க்கும் கொலம்பி யாவை கடந்தே பயணிக்க வேண்டி யிருக்கிறது. 

கொலம்பியா விலிருந்து மற்ற நாடுகளுக்குக் கிளம்புகிற பத்தில் ஒரு பயணியிடம் விஷத் தவளை இருக்கிறது என அதிர வைக்கிறது 

கொலம்பிய வன கடத்தல் அமைப்பான ProAves தரும் அறிக்கைகள். 2016 ம் ஆண்டில் மட்டும் 5000 வன விலங்கு கடத்தல் சம்பவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. 
கொலம்பியா வில் கடத்தல் தொடர்பாக நடக்கிற கொலைகளின் சதவிகிதம் 24.4. 20000 மெக்ஸிகோ பெசோ நாணயங் களுக்கு (இந்திய மதிப்பில் 70000) 
பிடிக்கப் படுகிற தவளைகள் வெனிசுலா நெட் வொர்க்கில் வரும் பொழுது 2000 அமெரிக்க டாலர் களுக்கு (ரூ 130000) விற்கப்படு கின்றன. 

கொலம்பியா வின் பக்கத்து நாடுகளான பெரு, வெனிசுலா, மெக்ஸிகோ நாடுகளில் இதற்கென டீலர்கள் தவளைக் கான விலையைத் தினமும் தீர்மானிக் கிறார்கள். 

அவை சர்வதேச மார்க்கெட்டில் நுழையும் பொழுது 4500 அமெரிக்க டாலர்கள் வரை விலை நிர்ணயிக்கப் படுகிறது.

மஞ்சள் டார்ட் தவளை

2015-ம் ஆண்டு துணி மற்றும் பரிசுப் பொருள்கள் என ஒட்டியிருந்த அட்டைப் பெட்டியை திறந்து பார்த்ததில் ஆறு ஃபிலிம் டப்பாக் களில் சுமார் பத்து டார்ட் தவளைகள் இருந்தன. 
ஹாங்காங் விமான நிலையத்தில் அவற்றை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். 

தாய்லாந்தின் பட்டாயா விமான நிலைய த்தில் புத்தகத்தின் உள் பகுதியில் இருக்கிற பக்கங்களை, சதுர அளவாக வெட்டி எடுத்து விட்டு அதனுள் தவளை களை வைத்து கடத்தி னார்கள். 
ஆண்மைக் குறைவுக்கு மருந்து என்கிற விதி தவளை களையும் விட்டு வைக்க வில்லை. அமெரிக்கா, சீனா, தாய்லாந்து, மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் இவை உண வாகவும் இருக்கிறது. 
அமெரிக்கா வில் வருடத் திற்கு ஒரு மில்லியனு க்கும் மேலான தவளை களை உணவாக எடுத்துக் கொள்கிறார்கள். சீனாவில் தண்ணீரில் கோழி (Swie kee) என்கிற பெயரில் முக்கிய உண வாகவும் இருக்கிறது. 

பெரு நாட்டில் தவளையின் ஜூஸ் “வயாகரா ஜூஸ்” என்கிற பெயரில் விற்கப் படுகிறது. ஆண்மை க்கு மிகச் சிறந்த மருந்து என்று பெரு நாட்டினர் நம்பு கிறார்கள்.
காலிபிளவரால் கிடைக்கும் நன்மைகள் !
தவளைக்கறி

இந்த விஷத்தி லிருந்து மருந்துகள் தயாரிக்கப் படுகின்றன. கொடிய புற்று நோய்க்கும், மயக்க வியலுக்கும், பக்க வாதத்தி ற்கும், 

தவளைக்கறி
வலி நிவாரணி யாகவும் ரசாயன மாற்றத் திற்கு உட்படுத்தி மருத்துவத் துறையில் பயன் படுத்தப் படுகிறது. 
திடீரென்று உடல் பாகங்கள் ஏன் மரத்துப் போகிறது?
பச்சை மரத் தவளை, போதையில் இருந்து விடுபட நிவாரணி யாகவும் அதன் விஷம் ஆண்மைக் குறைவிற்கு “கம்போ” (KAMBO) என்கிற பெயரிலும் பயன் படுகிறது. 

குறிப்பிட்டத் தவளை என்றி ல்லாமல் உலகம் முழுக்க எல்லாத் தவளை களுக்கும் மார்கெட் வைத்திருக் கிறார்கள். 

மேற்குத் தொடர்ச்சி மலையி லிருக்கும் நம்மூர் சாதாரண தவளை F1 ஃப்ளூ காய்ச்சல் வைரஸுக்கு மருந்து என்று 2017 ம் ஆண்டு கண்டு பிடித்திருக் கிறார்கள். 
பொய்கை அணையில் காம களியாட்டம் - இளம் பெண்களை மிரட்டி பலாத்காரம் !
ஒரு வேளை மருத்துவ உலகில் நம்மூர் தவளைகள் அங்கீகரிக்கப் பட்டால் இன்னொரு கடத்தல் இங்கிருந்தே நடக்கும். கடத்துவதற்கு எடை யெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. 

போதைப் பொருள், ஆயுதம், விலங்குகள் எனக் கடத்து வதற்குச் சொந்தமாக "ஹோம் மேட் சப்மரின்" (நீர் மூழ்கிக் கப்பல்) வைத்திருக் கிறார்கள்.

2015 ம் ஆண்டு கொலம்பியா வில் கைப்பற்றப் பட்ட சப்மரினை பார்த்து அதிர்ந்து போனது கடற்படை. ரேடார், சோனார், இன்ப்ராரெட் என எந்தத் தொழில் நுட்பங் களாலும் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு அப்டேட் செய்து வைத்திருக் கிறார்கள். 
இதுவரை சர்வதேச அளவில் விலங்குகள் கடத்தலில் முக்கிய மான நபராக யாரையும் கைது செய்ய வில்லை. 
பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி !
ஏன் சர்வதேச போலீஸால் நெருங்கக் கூட முடிய வில்லை. அவ்வளவு எளிதில் நெருங்கி விட முடியாத அளவிற்குக் கடத்தல் நெட்வொர்க் செயல் படுகிறது. 

மஞ்சள் டார்ட் தவளை

ஆன்லைன் பணப் பரிவர்த்தனை, கொரியர் சர்விஸ், ஸ்லீப்பர் செல்ஸ் என இருக்கிற நெட்வொர்க் கின் அடுத்த கடத்தல் எலி யாகவோ, 
எறும் பாகவோ கூட இருக்கலாம், ஏனெனில் கறுப்புச் சந்தை தனக்கு வேண்டிய எதை வேண்டு மானாலும் உருவாக்கும். எப்படி வேண்டு மானாலும் அழிக்கும்.