ஜெயலலிதா இறந்தது எப்போது? - திவாகரன் | When did Jayalalitha die? - Divakaran !

0
ஜெயலலிதா எப்போது இறந்தார் என்பது குறித்த அதிர்ச்சி தகவலைச் சசிகலா வின் சகோதரர் திவாகரன் இன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறார்.

ஜெயலலிதா இறந்தது எப்போது?

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவ மனையில் 2016-ம் தேதி செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப் பட்டிருந்த ஜெயலலிதா 75 நாள் சிகிச்சை க்குப் பின்னர், டிசம்பர் 5-ம் தேதி மாரடைப்பால் இறந்து விட்டதாக அப்போலோ மருத்துவ மனை அறிவித்தது. இதனிடையே, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்ப தாகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர் களும் தற்போது இருக்கிற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கூறினர். 


இதை யடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமை யில் விசாரணை ஆணைய த்தை அமைத்தது தமிழக அரசு. இந்த விசாரணை நடந்து கொண்டிரு க்கும் நிலையில் திடீரென, அப்போலோ வில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ காட்சியைத் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார்.

இந்த விவகாரம் அடங்குவ தற்குள் சசிகலாவின் சகோதரர் திவாகரன், ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்று புதிய தகவலை வெளியிட் டுள்ளார். மன்னார்குடி யில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவில் அவர் பேசும் போது, ஜெயலலிதா கடந்த 2016-ம் தேதி டிசம்பர் 4-ம் தேதியே இறந்து விட்டார். 

அப்போலோ மருத்துவ மனை பாதுகாப்புக் காக ஒரு நாள் தாமதமாக மரணம் அறிவிக்கப் பட்டது. உடனடி யாக ஏன் அறிவிக்க வில்லை என்று மருத்துவ மனை நிர்வாகத் திடம் விளக்கம் கேட்ட போது, எங்களது மருத்துவ மனையின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் எனக் கூறினார்கள்" என்று தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)