தாயை கொலை செய்த தஷ்வந்த் தந்தையையும் கொலை செய்ய திட்ட மிட்டிருந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை போரூரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 7 வயதுச் சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்ற தஷ்வந்த், நகைக்காக தாய் சரளாவைக் கொன்று விட்டு மும்பை க்குத் தப்பி யோடினான்.
மும்பையில் குதிரைப் பந்தய மைதான த்தில் இருந்து வெளியே வந்த தஷ்வந்தை தமிழக காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
கழிவறை செல்வ தற்காக, ஒரு கைவிலங்கு கழற்றப் பட்டதைப் பயன் படுத்தி தப்பியோடிய தஷ்வந்தை அந்தேரியில் போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
மும்பை நீதிமன்ற த்தில் ஆஜர் படுத்தப் பட்ட தஷ்வந்தை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்த நீதிபதி, வரும் செவ்வாய்க் கிழமை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்த உத்தர விட்டார்.
இதை யடுத்து மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்ட தஷ்வந்தை நேற்று இரவு முழுவதும் போலீசார் விசாரணை நடத்தினார்.
இதில், தாய் சரளா கொல்லப் பட்டது தொடர்பாக போலீசார் வாக்கு மூலம் பெற்றனர். அப்போது அடிக்கடி திட்டிய தாலும், செலவுக்கு பணம் தராத தாலும் தாய் சரளாவை கொலை செய்ததாக ஒப்பு கொண்டுள்ள தஷ்வந்த்,
அதோபோல் செலவுக்கு பணம் தர மறுத்ததால் தந்தையை யும் கொலை செய்ய திட்ட மிட்டிருந்த தாக போலீசாரிடம் வாக்கு மூலம் அளித் துள்ளார்.
மேலும் கொலைக்கு உதவிய தஷ்வந்தின் நண்பர்கள், தாஸ், டேவிட் ஆகியோ ரிடம் விசாரணை நடந்து வருகிறது.
தஷ்வந்த் தப்பிச்செல்வ தற்கு பயன் படுத்திய இருசக்கர வாகன த்தை கோயம்பேட்டில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Thanks for Your Comments