அடிமையாக இருக்க முடியாது... தமீமுன் அன்சாரி !

0
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடுரில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அடிமையாக இருக்க முடியாது... தமீமுன் அன்சாரி !

ஆர்கே நகர் இடைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை. கடந்த தேர்தலில் இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்றதற்காக அதிமுக வுக்கு அடிமை யாக இருக்க முடியாது; 


ஆதரவும் தர முடியாது. ம.ஜ.கவுக்கு தனி கொள்கைகள், கோட்பாடுகள் உள்ளது. 

கடந்து முறை போட்டி யிட்டது அது தேர்தல் யுக்தி.

மத்திய அரசு தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, மத்திய புலனாய்வு துறை உள்ளிட்ட இந்த முன்று அமைப்புகளும் பாரதிய ஜனதா கட்சியின் கிளை அமைப்பாக மாறி வருகிறது. 

மீனவர்கள் எவ்வளவு பேர் மாயமாகி இருக்கிறார்கள் என்ற முழுமையான விபரமே தெரியவில்லை. முப்படைகளை கொண்டு மீனவர்களை தேடி வருகின்றனர். 

இந்நிலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவை கொண்டு உடனடியாக மாயமான மீனவர்களை தேடும் பணியை தொடங்க வேண்டும்.

திருமாவளவன் பேசாத ஒன்றை பேசியதாக சித்தரித்து அவரது தலைக்கு விலை வைத்து பேசியிருப்பது கண்டிக்கத் தக்கது. 

இது போன்ற பேச்சு தமிழகத்தில் அமைதியை சீர் குலைக்கும் பதற்ற த்தை உருவாக் கும். ஜிஎஸ்டி பாஜக அரசிற்கு படுதோல்வி யை ஏற்படுத்தி யுள்ளது. 


அதனால் தான் பிரதமர் மோடி குஜராத் தேர்தலில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யரை பற்றி விமர்சித்து வருகிறார் என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings