மீனவர்களின் சாவுக்கு தமிழக அரசே பொறுப்பு... அன்புமணி !

0
ஒக்கி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்கள் அனைவரும் பத்திரமாக கரை திரும்ப வேண்டும் என ஒட்டு மொத்த தமிழகமும் வேண்டிக் கொண்டிருந்த நிலையில், 
மீனவர்களின் சாவுக்கு தமிழக அரசே பொறுப்பு... அன்புமணி !

நீரோடியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 13 மீனவர் களின் உடல்கள் கடலில் மிதப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சியும், வேதனை யும் அளிக்கிறது. 

மீனவர் களைக் காப்பாற்ற வேண்டும் என்று அனைவரும் கதறிய நிலையில், அதற்காக எந்த நடவடி க்கையும் எடுக்கா ததன் மூலம் இந்த மீனவர்களை தமிழக அரசு கொலை செய்திருக்கிறது.

கன்னியா குமரி மாவட்டம் தூத்தூரைச் சேர்ந்த மீனவர்கள், காணாமல் போனவர்களை தேடி கடல் மைல் தொலைவுக்கு அப்பால் சென்ற போது, மீனவர்கள் உடல்கள் மிதப்பதை கண்டு பிடித்துள்ளனர்.  

அவர்களின் உடல் களுக்கு அருகில் மிதந்த செல்பேசிகள், அடையாள அட்டைகள் ஆகிய வற்றின் மூலம் அவர்களின் அடையாளம் கண்டறியப் பட்டுள்ளது. 

கன்னியா குமரி மாவட்டத்தை கடந்த மாதம் 29, 30 ஆகிய தேதிகளில் ஒக்கி புயல் சூறையாடிய நிலையில், அதற்கு முன்னதாக கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஆயிரத் திற்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை என்றும், 

அவர்களை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசும், மத்திய அரசும் மேற்கொள்ள வேண்டும் என்றும் மீனவ சொந்தங்கள் வேண்டுகோள் விடுத்தனர். 

கன்னியா குமரி மாவட்டத்தில் பாதிக்கப் பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற நானும் இது தொடர்பாக கோரிக்கை விடுத்ததுடன், குமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத் தினேன். 

ஆனால், அரசுகள் அதை ஏற்கவில்லை. அப்போதே மீனவர்களை தேடும் பணியை கடலோரக் காவல் படையும், கடற்படையும் முறை யாக மேற்கொண் டிருந்தால் கானாமல் போன மீனவர் களைக் காப்பாற்றி யிருக்கலாம். 

ஆனால், ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் 100 கடல் மைல் தொலை வுக்கு அப்பால் தான் தங்கி மீன் பிடிப்பர் என்ற  அடிப்ப டையை உணராமல் 30 முதல் 60 கடல் மைல் பகுதியில் மட்டுமே தேடுதல் வேட்டை நடத்தப் பட்டது. 

அதனால் தான் புயலில் சிக்கி நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்க முடிய வில்லை. 100 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் தேடுதல் வேட்டை நடத்தப் பட்டிருந்தால் இப்போது உயிரிழந்ததாக கூறப்படும் 13 மீனவர் களைக் காப்பாற்றி யிருக்க முடியும். 

ஆனால் அதை செய்ய அரசு தவறி விட்டது. அந்த வகையில் 13 மீனவர்களின் உயிரி ழப்புக்கு தமிழக ஆட்சியாளர்களே பொறுப்பேற்க வேண்டும்.

இப்போது கூட உயிரிழந்த மீனவர் களின் உடல்கள் மிதப்பதை மீனவர்கள் தான் தேடிக் கண்டு பிடித்து இருக்கி றார்களே தவிர மீட்புக் குழுக்கள் செய்ய வில்லை.

மீனவர்களின் உடல்கள் மீட்க முடியாத அளவுக்கு சிதைந்தி ருப்பதாகக் கூறப்படும் நிலையில் அவற்றை மீட்டு முறைப்படி இறுதிச் சடங்குகளை நடத்த அரசு உதவ வேண்டும். 

இவர்கள் தவிர இன்னும் சுமார் 600 மீனவர்கள் என்ன ஆனார்கள்? என்பது தெரிய வில்லை. அவர்களைக் கண்டு பிடிக்கவும் தீவிரமான முயற்சிகள் மேற் கொள்ளப் படவில்லை.

காணாமல் போன மீனவர் களை மீட்க வேண்டும் என்று வலி யுறுத்தி கடந்த 7-ஆம் தேதி தொடர் வண்டி மறியல் போராட்ட மும், கடந்த 3 நாட்களாக சாலை மறியல் போராட்ட மும் மேற்கொண்டு வருகின்றனர். 

இவ்வளவுக்குப் பிறகு கடலில் மீனவர் களின் படகு களையோ, உடல் களையோ காணவில்லை என்ற பதில் தான் கடலோரக் காவல் படையிடமிருந்து கிடைக்கிறது. 

அதே நேரத்தில் மீனவர்கள் தங்களின் படகுகளில் சென்று மீனவர் களின் உடல் களை கண்டு பிடித்துள்ளனர். இதிலி ருந்தே அரசு சார்பில் மேற் கொள்ளப் படும் மீட்புப் பணிகளின் தன்மையை அறிய முடியும். 

இது காணாமல் போன மீனவர் களை மீட்பது குறித்த அச்சத்தை அதிகரிக் கிறது. எப்பாடு பட்டாவது நமது மீனவர்கள் மீட்கப்பட வேண்டும்.

எனவே, நவீன கப்பல்கள் மற்றும் உலங்கு ஊர்தி களை பயன் படுத்தி 100 கடல் மைல் தொலை வுக்கு அப்பால் மீனவர் களை தேடும் பணி முடுக்கி விடப்பட வேண்டும். 

அரசின் அலட்சிய த்தால் உயிரிழந்த மீனவர் குடும்பங் களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத் துகிறேன்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings