சசிகலா மட்டும் தான் குற்றம் இழைத்தாரா? சீமான் !

0
சசிகலா குடும்பம் மட்டுமே குற்றம் இழைத்தி ருக்கிறது என்பதை நான் ஏற்க வில்லை. ஒரு பிரிவினரை மட்டும் குற்றவாளி ஆக்குவதா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி யுள்ளார்.
சசிகலா மட்டும் தான் குற்றம் இழைத்தாரா? சீமான் !
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் வெள்ளிக்கிழமை இரவு வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற் கொண்ட நிலையில், இது குறித்து சீமான் தனியார் தொலைக் காட்சிக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், இந்த ஆண்டு செய்த வருமான வரி சோதனையை ஏன் போன ஆண்டு செய்ய வில்லை? இப்போது சோதனை மேற்கொள்ள வேண்டிய தேவை என்ன இருக்கிறது?

இவ்வளவு சொத்தையும் சசிகலாவே சம்பாதித் தாரா? அதிமுக அமைச் சர்கள் வசூலித்துக் கொடுத்த, கட்டிய கப்பம்தான் இந்த சொத்துகள்.
எல்லோருமே புனிதர் போல, தீக்குளித்து தன்னை நிரூபித்துக் காட்டிய சீதை போல சசிகலா குடும்பம் மட்டுமே குற்றம் இழைத்தி ருக்கிறது என்பதை நான் ஏற்க வில்லை. 

நிறைய குற்ற வாளிகள் இங்கே இருக்கி றார்கள். அவர்கள் தண்டிக்கப் பட வேண்டாமா?'' என்று சீமான் கேள்வி எழுப்பி யுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings