கேன் தண்ணீரை நாம் அருந்தலாமா?

ஆற்று நீரை குடத்தில் சுமந்து வந்து குடித்தது ஒரு காலம். பின்னர் கிணற்று நீரை சில்லென்று இறைத்து பானையில் வைத்து குடித்த தெல்லாம் அந்த காலம்.
கேன் தண்ணீரை நாம் அருந்தலாமா?
அப்புறம் போர்வெல் தண்ணீர், கார்ப்பரேஷன் குழாயில் வந்த தண்ணீர் எல்லாவ ற்றையும் கடந்து விட்டு

இப்போது மிஸ்டர் நடுத்தரம் கேனில் அடைத்து விற்கப்படும் தண்ணீரை தான் பெரும்பாலும் குடிக்கிறார்.

இம்மாதிரி கேன்களில் அடைத்து விற்கப்படும் நீரை சுத்தப் படுத்துவ தற்கு பல ரசாய னங்கள் பயன் படுத்தப் படுகின்றன.
தன்னை வளர்த்த முதலாளிக்கு வேலை செய்து சோறு போடும் நாய் !
நீரை சுத்தி கரித்த பிறகு இவற்றை முறையாக நீக்க வேண்டி யது அவசியம். செலவுக்கு பயந்து கொண்டு அதை பலரும் செய்வ தில்லை.

எனவே, இதுபோன்ற நீரை அருந்து பவர்களுக்கு, இந்த வேதிப் பொருட்கள் உடலி லேயே படிந்து சிறுநீரக

மற்றும் நரம்புகள் தொடர் பான பிரச்னைகள் வருவதற் கான வாய்ப்புகள் அதிகம் என்று அலாரம் அடிக் கிறார்கள் மருத்து வர்கள்.

இதுவும் தவிர, வைரஸ், பாக்டீரியா, ஸ்போர்ஸ் (நுண்ணு யிரிகள் அவற்றிற்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் தங்களைச் சுற்றி ஒரு கூட்டை (spores) ஏற்படுத்தி அதனுள் இருந்து கொள்ளும்.
சாதகமான சூழல் இருந்தால் அதை உடைத்துக் கொண்டு வெளியில் வரும்) போன்ற நுண்ணு யிரிகள் முறையாக நீக்கப் பட்டுள்ளதா என்பதற்கு எந்த உத்திர வாதமும் கிடையாது. 
80 அடி உயரத்தில் தலைகீழாகத் தொங்கிய பெண்
இதனால் தொற்று நோய்கள் பாதிப்பும் வரலாம் என்கி றார்கள். உங்களை பயமுறுத்து வதற்காக இதை சொல்ல வில்லை. இதற்கு தீர்வும் இருக்கிறது.

சில பெரிய நிறுவ னங்கள் ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் செய்து விற்பனை செய்யும் நீரை பயன் படுத்தலாம்.

நாம் வாங்கும் கேன் தண்ணீர், இந்த முறையில் சுத்தி கரிக்கப் படுகிறதா என்பதை கேட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கேன் தண்ணீரை கொதிக்க வைத்து பயன் படுத்தினால் நல்லது என்றொரு நம்பிக்கை உள்ளது. அதிலும் பிரச்சினை இருக்கிறது.

நாம் அதிக பட்சமாக 100 டிகிரி தான் கொதிக்க வைக்க முடியும். 150 டிகிரி கொதி நிலையிலும் உயிர் வாழும் நுண்ணு யிரிகளும் நீரில் உண்டு.
கழுத்தில் தண்டுவட நரம்பு பாதிப்புகள் !
100 சதவீதம் பாது காப்பான நீர் என்றால் அது பாது காப்பான நிலையில் இருக்கும் போர்வெல் நீர் தான். 

மழை நீர் பூமிக்கடி யில் செல்லச் செல்ல அதில் உள்ள எல்லா கிருமிகளும் அழிந்து சுத்தமான நீராகி விடும்.

நிலத்தடி நீர் மாசடை யாமல் இருந்தால் அதை விட பாது காப்பான நீர் நாம் பயன்படுத்த வேறு எதுவும் இல்லை.
ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலுக்கு எவ்வளவு செலவு?

மூடி: 25 பைசா

பாட்டில்: ரூ 1.50 முதல் ரூ. 2.50

நீர் சுத்திகரிப்பு : 10 பைசா முதல் 25 பைசா

லேபிள்: 15 பைசா முதல் 50 பைசா

அட்டைப்பெட்டி : 50 பைசா

போக்கு வரத்து: 10 பைசா முதல் 25 பைசா

மற்றவை: 25 பைசா

மொத்தச் செலவு : ரூ.2.85 முதல் 4.25 வரை

(லேபர், மார்க்கெட்டிங் செலவுகள் மற்றும் வரி தவிர்த்து)
செல்போன் திருட்டில் சிக்கிய கல்லூரி மாணவியின் வாக்குமூலம் !

கடைசி யில் நாம் வாங்குவது : ரூ. 10 முதல்

Source: Centre for Science and Environment தரும் தகவல் களிலிருந்து பல்வேறு இடங்களில் திரட்டியது. 

இது தோராய மான தொகை. இடத்துக்கு இடம் பல்வேறு காரணங் களால் ஓரளவுக்கு கூடுத லாகவோ, குறை வாகவோ வேறு படலாம்.
Tags: