நெட் சென்டரில் ஒழிந்துள்ள ஆபத்து... நித்யாவிற்கு ஏற்பட்ட பயங்கரம் !

நித்யா பிளஸ் ஒன் படிக்கும் அழகுப் பெண். பள்ளி விடுமுறை நாட்களில் பாடம் விஷயமாக தோழிகளுடன் சென்று இரண்டு, மூன்று மணி நேரங்கள் செலவிடுவாள்.
நெட் சென்டரில் ஒழிந்துள்ள ஆபத்து -  நித்யாவிற்கு ஏற்பட்ட பயங்கரம் !
அவளுக்கும் தோழிகளுக்கும் ஒரு அதிர்ச்சி. எதையாவது சர்ச் செய்தால் கூடவே சில ஆபாச வெப்சைட்களும் வந்து போகும். முதலில் வேகமாக அந்தப் சைட்களை கடந்து போய் விடுவார்கள். 
ஆனால் எதைத் தேடினாலும் ஆபாசக் குப்பைகள் வந்து கண் முன்னே நிற்கும். என்ன செய்வது? அது நித்யா மற்றும் தோழிகளை என்னவோ செய்தது. 

ஒரு நாள் அந்தப் பக்கத்தை ஒப்பன் செய்தார்கள். தலைக்குள் ஆயிரம் குண்டுகள் வெடித்ததைப் போல இருந்தது. மனது கெட்டுப் போனது. 

ஆனால், அந்த வயது மிக ஆபத்தான வயது. தேடச் சொல்லும் வயது. தேடி தேடித் பார்க்கச் சொன்னது அந்த வயது.
முற்றிலும் கெட்டுப் போனார்கள் தோழிகளும் நித்யாவும்…! அடுத்த ஆறே மாதத்தில் அந்தச் சிறுமிகள் ஆபாச வலைத் தளங்களுக்கு அடிமையானார்கள்.
22 ஆண்டுகள் காட்டில் வசிக்கும் விசித்திர மனிதன் !
நித்யா தனது வீட்டில் சண்டை போட்டு கம்ப்யூட்டர் கேட்டு வாங்கினாள். நெட் போட்டு தரச் சொன்னாள். படிப்பு தானே என்று கஷ்டப் பட்டு வாங்கிக் கொடுத்தார்கள்.

வார விடுமுறையில் தோழிகள் கூடினார்கள். படிப்பு கொஞ்சம் கொஞ்சமாக கெட்டது. மார்க் படு மோசமாக வாங்கினாள்.

பள்ளியில் இருந்து அப்பாவை அழைத்தார்கள். உங்கள் மகளிடம் என்னவோ தப்பு  இருக்கிறது. அவள் முன்பு போல இல்லை.

தோழிகள் சேர்க்கையும் சரி இல்லை. மாணவர்களுடன் மிக நெருங்கி பழகுகிறாள். கொஞ்சம் வாட்ச் பண்ணுங்கள் என்றார்கள்.

வாட்ச் பண்ண ஆரம்பித்தார்கள் வீட்டில். அப்போது தான் ஆபாச வலைத் தளங்களுக்கு மகள் நித்யா அடிமையாகிக் கிடப்பது தெரிந்தது. அதிர்ந்து போனார்கள். 
நெட் தொடர்பை கட் செய்தார்கள். ஆறு மாதங்கள் கவுன்சிலிங் செய்து மீட்டார்கள். அந்த வருட பொதுத் தேர்வில் அனைத்துப் பாடங் களிலும் நித்யா தோற்றுப் போனாள்.
இனி உலகில் கொசு என்ற உயிரினமே இருக்காது
பின்னர் நித்யாவை மீண்டும் தேர்வெழுத வைத்து நல்ல மாணவியாக மாற்றியது வேறு விஷயம்.

பெற்றவர்களே..! என்ன வேலையாக இருந் தாலும் உங்கள் பிள்ளை களின் நடவடிக்கை களில் கவனம் செலுத்துங்கள். நாம் சரியாக இருந்தாலும் நம்மைச் சுற்றி தீயவை நிரம்பிக் கிடக்கிறது.
Tags:
Privacy and cookie settings