கன்னியாகுமரியில் காதலிக்காக பைக் திருடிய திருடன் !

0
இதயத்தைத் திருடுவது தான் காதல் என்பார்கள். ஆனால் காதலியின் இதயத்தில் இடம் பிடிக்க, தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்ட பலே கொள்ளை யனைப் போலீஸார் கைது செய்தனர்.
கன்னியாகுமரியில் காதலிக்காக பைக் திருடிய திருடன் !
கன்னியா குமரி மாவட்ட த்தில் நாகர்கோவில், ஆரல் வாய்மொழி சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ச்சியாக மோட்டார் சைக்கிள்கள் திருடு போய் வந்தன. நாகர் கோவிலில் உள்ள வடசேரி, கோட்டார், 

நேசமணி நகர் காவல் நிலையங் களிலும், ஆரல் வாய்மொழி காவல் நிலையத் திலும் அடிக்கடி இது தொடர் பான வழக்குகள் பதிவாகி வந்தன. 

இது போலீஸா ருக்கும் பெரும் தலை வலியாய் இருந்து வந்தது. இந்நிலையில் தொடர் பைக் திருட்டுச் சம்பவங்கள் குறித்து குமரி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் துரை தனிப்படை அமைத்து உத்தர விட்டார். 

தனிப்படை போலீஸார் இது குறித்து சல்லடை போட்டு பைக் திருட்டு ஆசாமியைத் தேடினர். இந்த நிலையில் வடசேரி பகுதியில் போலீஸார் சோதனை யில் ஈடு பட்டனர். 

அப்போது அந்த வழியாக சந்தேகத்துக் கிடமான வகையில் வாலிபர் ஒருவர் பைக்கில் வந்தார். 

போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் திருநெல்வேலி மாவட்டம், வெள்ளாங்குழி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற கருத்தப் பாண்டி (24) என்பது தெரிய வந்தது.

போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னு க்கு, பின் முரணாக பேசினார். இதனைத் தொடர்ந்து அவரை வடசேரி காவல் நிலைய த்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 
இதில் அவருக்கு பல்வேறு பைக் திருட்டுச் சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. 

இதனைத் தொடர்ந்து ஆரல்வாய் மொழி சோதனைச் சாவடி, வடசேரி பகுதி உள்ளிட்ட பல பகுதிகளிலும் நிகழ்ந்த பைக் திருட்டுகள் சம்பந்த மாக கண் காணிப்புக் கேமராக் களில் பதிவான காட்சிகளும் பார்க்கப் பட்டன.

கருத்தப் பாண்டியிடம் இருந்து மட்டும், அவர் கொடுத்த தகவல் களின் அடிப்படையில் 21 பைக்குகள் மீட்கப்பட்டன.

கருத்த பாண்டியனின் காதல் பக்கங்கள்..

கருத்தப் பாண்டியன் அவருடைய சில நண்பர் களையும் கூட்டு சேர்த்து கொண்டு குமரி மாவட்ட த்தில் திருடப்படும் பைக்கை திருநெல்வேலி, 

தூத்துக்குடி மாவட்டங் களில் உள்ள பழைய இருசக்கர வாகனம் வாங்கி, விற்கும் கன்சல்டிங் கடை களுக்கு விற்பது வழக்க மாம். 
குறைந்த பட்சம் 20 ஆயிரம் ரூபாயாவது கிடைக்கும் என மதிப்பிடக் கூடிய அளவுக்கு உள்ள மோட்டார் சைக்கிளைத் தான் இவர்கள் கை வைப்பார்கள். 

ஒவ்வொரு வருக்கும் தலா ரூ.5 ஆயிரம் என்ற கணக்கில் வாரத்துக்கு 2 பைக் திருடுவது என்பதை லட்சியமாய் (!) கொண்டு இயங்கி வந்துள்ளனர்.

கருத்தப் பாண்டி இத்தனை யும் செய்தது காதலிக் காக என்பது தான் அதில் கூடுதல் விஷயம். கருத்தப் பாண்டியின் காதலி நாகர் கோவிலில் உள்ள கலை அறிவியல் கல்லூரி யில் பிகாம் படித்து வருகிறார். 

வெள்ளாங் குழியில் இருந்து தன் காதலியைச் சந்திக்க, அரசுப் பேருந்தில் நாகர்கோவில் வரும் கருத்தப் பாண்டி நாகர்கோவிலில் இருந்து கிளம்பும் போது ஏதாவது ஒரு பைக்கை திருடிச் செல்வது வழக்கமாம். 

இதை சக நண்பர்களோடு சேர்ந்து செய்துள்ளார் கருத்தப் பாண்டி. இது குறித்து பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், கருத்தப்பாண்டி திருடிய பைக்குள் பெரும் பாலும் சாவியை மறந்து வைத்து விட்டு சென்றவர்களும், 

அவசரத்தில் பைக்கில் லாக் போடாமல் சென்ற வர்களும் தான். கூ ட்டம் அதிகமாக இருக்கும் இடத்தை தனக்குச் சாதகமாக பயன் படுத்தியுள்ளார்.
இவர் மீது திருச்சி ஜீயபுரத்தில் நடந்த இரட்டைக் கொலை வழக்கு உள்பட பல வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இதை யெல்லாம் விட ஒரு பெரிய விஷயம்... காதலியை மகிழ்விக்க திருடித் திருடியே பெரிய வீடு கட்ட வேண்டும் என்பது உள்பட அடுத்த பத்து ஆண்டுக ளுக்கான திட்ட மிடலோடு இயங்கி இருக்கிறார் கருத்தப் பாண்டி. 

இவருடைய கூட்டாளி களைப் பிடிக்கவும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம்” என்றார் அவர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings