கமல்ஹாசன் திமுக, அதிமுகவிற்கு சவாலாக இருப்பார்... தகவல் !

0
நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங் கினால் அவர் அதிமுக, திமுக கட்சிக ளுக்கு பெரும் சவாலாக இருப்பார் என்பது ஒரு கருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
கமல்ஹாசன் திமுக, அதிமுகவிற்கு  சவாலாக இருப்பார்... தகவல் !
தமிழக த்தில் உள்ள அனைத்து மாவ ட்டங்கள் மற்றும் புதுச்சேரி யில் பிரபல தனியார் தொலைக் காட்சி ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. அதில் பல்வேறு கேள்வி களுக்கு பொது மக்கள் பதில் அளித்தனர். 

அதில், கமல், ரஜினி, விஜய் மற்றும் மற்ற நடிகர்கள் கட்சி தொடங்கும் பட்சத்தில், இதில், அதிமுக விற்கு சவாலாக இருக்கும் நடிகர் யார்? என்ற கேள்விக்கு கமல்ஹாசன் என 45.3 சதவீத பேரும், 

ரஜினி என 18.2 சதவீதமும், விஜய் என 14.5 சதவீதமும் மற்றவர்கள் என 22 சதவீதம் பேரும் பதிலளித் தனர்.

அதே போல், திமுகவிற்கு யார் சவாலாக இருப் பார்கள் என்ற கேள்விக்கு கமல்ஹாசன் என 35.5 சதவீதமும், ரஜினி என 22.8 சதவீதமும், விஜய் என 16.5 சதவீதமும், மற்ற வர்கள் என 25.2 சதவீதமும் பதில ளித்தனர்.
இதிலிருந்து, நடிகர் கமல் ஹாசனுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித் திருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக பெண்கள் மத்தியில் அவருக்கு பெரும் ஆதரவு இருக்கிறது. 

ஏனெனில், ஆண்களை விட அதிகம் பெண்கள் கமல்ஹாசனு க்கு ஆதரவாக கருத்துக் கணிப்பில் பதிலளித் துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)