ஐபிஎஸ் அதிகாரி தவறு செய்யவில்லை... வழக்கறிஞர் !

0
தேர்வில் காப்பி அடித்து கைதான ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீம் நீதிமன்ற நிபந்த னைப்படி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
ஐபிஎஸ் அதிகாரி தவறு செய்யவில்லை... வழக்கறிஞர் !
சபீர் கரீமை தவறான புரிதலின் பேரில் போலீஸார் கைது செய்து ள்ளனர், அவர் காப்பி அடிக்க வில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரி வித்தார்.

காப்பி யடித்த விவகா ரத்தில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப் பட்டிருந்த ஐ.பி.எஸ் அதிகாரி சபீர் கரீம் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப் பட்டார்.

சென்னை யில் கடந்த அக்டோபர் 30-ம் தேதி நடந்த ஐ.ஏ.எஸ் பணிக்கான தேர்வில் ஐ.பி.எஸ் அதிகாரி யான சபீர் கரீம் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்.

ப்ளூடூத் வைத்து நூதன முறையில் காப்பி அடித்த தாக அவர் கைது செய்யப் பட்டார். தொடர்ந்து சிறையில் அடைக்கப் பட்டார்

இவருக்கு உதவி செய்ததாக மனைவி ஜாய்சி அவருடைய நண்பர் சம்ஜத், ஐ.ஏ.எஸ் அகடமி ஊழியர் சபீப் மற்றும் தனியார் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநர் ராம் பாபு ஆகியோரும் கைது செய்யப் பட்டனர்.
பின்னர் சபீர் கரீம் தவிர, அவர் மனைவி உட்பட மற்ற வர்கள் ஜாமீனில் விடுவிக்கப் பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றம் சபீர் கரீமுக்கு நிபந்தனை யுடன் கூடிய ஜாமின் அளித்தது.

நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ஐ.பி.எஸ் அதிகாரி சபீர் கரீம் இன்று தனது மனைவியுடன் சி.பி.சி.ஐ.டி அலுவல கத்தில் டி.எஸ்.பி சத்திய மூர்த்தி முன்பு ஆஜராகி கையெழுத்திட்டார். 

பிறகு வெளியே வந்த அவர் செய்தி யாளர்களை தவிர்த்துச் சென்றார். பின்னர் சபீர் கரீமின் வழக்கறிஞரான பால் கனகராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

செய்தியா ளர்களிடம் சபீர் கரீமின் வழக்கறிஞர் பால்கனகராஜ் கூறிய தாவது: 

இந்த விவகார த்தில் தவறாகப் புரிந்து கொண்டு போலீஸா ரால் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. தேர்வு அறையில் சபீர் எந்த தகவல் தொடர்பு உபகரண ங்களையும் பயன் படுத்த வில்லை.
மேலும் 9 மணி தேர்விற்கு 8.55 மணிக்கு அவரிட மிருந்து செல்போன், ப்ளூடூத் ஆகியவை பறிமுதல் செய்யப் பட்டுள்ள தால் தேர்வில் அவர் எப்படி முறைகேடு செய்தார் என கூற முடியும். 

இது பொய்யான வழக்கு" என தெரிவி த்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)