கண்ணீர் விட்ட ஐஸ்வர்யா ராய்... நடந்தது என்ன?

0
பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யாராயின் மகள் ஆராத்யாவுக்கு கடந்த 16ம் தேதி 6வது பிறந்த நாள் கொண்டாடப் பட்டது. இதற்கு முன்பு ஆராத்யாவின் பிறந்த நாளை எளிமை யாக ஐஸ்வர்யா ராய் கொண்டாடினர். 
கண்ணீர்விட்ட ஐஸ்வர்யா ராய்... நடந்தது என்ன?
ஆனால், இந்த ஆண்டு ஆராத்யாவின் பிறந்தநாளை மிகவும் பிரமாண்டமாக கொண்டாடி யுள்ளனர். ஆராத்யாவின் பிறந்த நாளை யொட்டி திரையுலக பிரபலங்களுக்கு விருந்து கொடுக்கப் பட்டது. 

பிரபலங்கள் தங்களின் குழந்தைகளுடன் வந்து ஆராத்யாவை வாழ்த்தினர். நடிகர் ஷாருக்கான் தனது இளைய மகன் ஆப்ராமுடன் வந்து ஆராத்யாவின் பார்ட்டியில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், ஐஸ்வர்யா மற்றும் அவரது மகள் இருவரும் ஸ்மைல் ட்ரெயின் ஃபவுண் டேஷனின் (Smile Train Foundation) ல் உள்ள குழந்தைகளை பார்க்க சென்றுள்ளனர்.

ஐஸ்வர்யாராய் வருவதை அறிந்த பத்திரிக்கை யாளர்கள் அங்கு கூடினார்கள். இதனால் அங்கு மிகவும் மோசமான சூழுல் நிலவியிருக்கிறது.
கண்ணீர்விட்ட ஐஸ்வர்யா ராய்... நடந்தது என்ன?
அங்கிருந்த குழந்தைகள் அனைவரும் பத்திரிக்கை யாளர்களால் கொஞ்சம் கஷ்டப் பட்டுள்ளனர்.

இதனை பார்த்த ஐஸ்வர்யா பத்திரிக்கை யாளர்களை புகைப்படம் எடுக்க வேண்டாம், குழந்தைகள் பயப்படுகிறார்கள் என்று எவ்வளவோ கூறியுள்ளார்.

ஆனால் யாரும் கேட்பதாக இல்லை. அந்த நிமிடத்தில் இருந்த சூழலை பார்த்த ஐஸ்வர்யா அனைவர் முன்னிலையிலும் கண் கலங்கி யுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings