சசிகலா வின் உறவினர், நண்பர்கள் வீடுகள் உள்ளிட்ட 187 இடங் களில் நேற்று அதிகாலை தொடங்கிய 


வருமான வரித்துறை யின் சோதனை 35 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து நடை பெற்று வருகிறது. 

இதில் 40 இடங்களில் சோதனை முடிந்து கைப்பற்றப் பட்ட ஆவணங் களை சரி பார்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட் டுள்ளனர்.

இன்றைய தினத்தில் மட்டும் திருவாரூர் மாவட்ட த்தில் சுந்தரக் கோட்டை யிலுள்ள திவாகரனின் வீடு, 

அவரது செங்கமலத் தாயார் கல்லூரி உள்ளிட்ட 20க்கும் அதிகமான இடங் களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. 

கல்லூரி யில் நடைபெற்ற சோதனையின் போது கல்லூரிக்கு உள்ளே செல்லும் வாகனங் களை 

சோதனை க்குப் பிறகே அனுப்பு வோம் என்று கூறி திவாகரன் ஆதர வாளர்கள் வாக்கு வாதத்தில் ஈடு பட்டனர். 

ஏனென்றால் கல்லூரிக்கு உள்ளே வரும் வாகனங் களில் ஏதாவது ஒரு ஆவண த்தை எடுத்து வந்து விட்டு பிறகு, 

கல்லூரியில் கைப்பற்றி னோம் என்று கூறுவார்கள் என்று குற்றச் சாட்டையும் அவர்கள் முன் வைத்தனர்.

தொடர்ந்து வருமான வரித்துறை யினர், கல்லூரி யில் நடத்தப் பட்ட சோதனை யில் கைப்பற்றப் பட்ட ஆவணங் களை எடுத்துக் கொண்டு காரில் புறப் பட்டனர். 

அப்போது காரை முற்றுகை யிட்ட திவாகரன் ஆதரவா ளர்கள், "ஆவணங் களை எங்களிடம் காட்டி விட்டுத் தான் எடுத்துச் செல்ல வேண்டும்" என்று கூறிய தால், 

வருமான வரித்துறை யினருக்கும், திவாகரன் ஆதரவாளர் களுக்கும் கடுமை யான வார்த்தை மோதல் ஏற்பட்டது. 

இதைத் தொடர்ந்து அதிகாரி களின் காரை மறித்த திவாகரன் ஆதரவா ளர்களை காவல் துறையினர் கைது செய்து அப்புறப் படுத்தினர்.

கல்லூரி மற்றும் வீடுகளில் நடந்த சோதனை யில் கைப்பற்றப் பட்ட ஆவணங் களுடன் விலையு யர்ந்த ரோலக்ஸ் வாட்ச்கள், தங்க நகைகள், வைரங்கள் 

உள்ளிட்டவை கைப்பற்றப் பட்டுள்ள தாக வருமான வரித்துறை அதிகாரிகள் வட்டாரத்தி லிருந்து தகவல்கள் வெளியாகி யுள்ளன.

தொடர்ந்து ஈக்காட்டுத் தாங்கலி லுள்ள ஜெயா டிவி அலுவலகம், பழைய ஜெ ஜெ டிவி அலுவ லகம் இருந்த 

போயஸ் கார்டன், நீலாங்கரையி லுள்ள பாஸ்கரன் இல்லம், மிடாஸ் மதுபான ஆலை, 

ஆலைக்கு பாட்டில்கள் சப்ளை செய்யும் கம்பெனி உள்ளிட்டவற்றில் சோதனை நடை பெற்று வருகிறது. 

பல இடங்களில் இன்றும் சோதனை முடியாத தால் நாளையும் சோதனையை தொடர வருமான வரித்துறை அதிகாரிகள் திட்ட மிட்டுள்ள தாக கூறப் படுகிறது. 

சுமார் 1800 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.