சினிமா துறையில் கந்து வட்டி... அமைச்சர் ஜெயக்குமார் !

0
சினிமா துறையில் கந்து வட்டி கொடுமையை ஒழிக்க வேண்டு மென்றால் நடிகர்களே நிதிதிரட்டி குறைந்த வட்டியில் பணம் கொடுக்கலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் நல்ல ஐடியாவை கொடுத்துள்ளார்.
சினிமா துறையில் கந்து வட்டி... அமைச்சர் ஜெயக்குமார் !
தயாரிப் பாளர்களாக உள்ளவர்கள் பொதுவாக கடன் வாங்கி சினிமா எடுப்பது வழக்கம். 

அதிலும் சில சிறு தயாரிப்பாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு முதலில் பணம் அளித்து விட்டு பின்னர் அவர்களுக்கு கொடுத்த கடனை காட்டிலும் அதிக மதிப்பிலான சொத்துகளை பறிக்கும் செயல்களில் கந்து வட்டி கும்பல் ஈடுபடுகின்றன.

இதனால் தயாரிப் பாளர்கள் சிலர் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். இது மட்டு மல்லாமல் அந்த கும்பல் சினிமா ரைட்ஸ் களையும் எழுதி வாங்கி கொள் கின்றன.

இது தமிழ் சினிமா வில் நீண்ட ஆண்டு களாக தொடர்ந்து வருகிறது. இதை மதுரையில் உள்ள அன்புச் செழியன் "வெற்றிக் கரமாக" செய்து வருகிறார்.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர் ஜிவி, அன்புச் செல்வனிடம் கடன் வாங்கி படம் சரியாக போகாததால் அவர் கடனில் தத்தளித்தார். 

இதைத் தொடர்ந்து அன்புச் செழியனின் மிரட்டலால் கடுமையாக மனமுடைந்த அவர் கடந்த 2003-இல் தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல் அன்புச் செழியனால் ஏராளமானோர் பாதிக்கப் பட்டுள்ளனர். நிழல் உலக தாதா போல் சினிமா துறையையே தனது கட்டுப்பாட்டில் அன்புச் செழியன் வைத்தி ருந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கம்பெனி ப்ரொடெக்ஷன் நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராக இருந்தார். 

அன்புச் செழியனிடம் கடன் பெற்றிருந்தாராம். அன்புச் செழியன் அதிக வட்டி கேட்டு அவரை மிரட்டியதால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனால் தலை மறைவாக உள்ள அன்பு செழியனை பிடிக்க தனிப்படை போலீஸார் மதுரைக்கு விரைந்துள்ளனர்.

ஆக்ரோஷம்
அசோக் குமாரின் மரணம் குறித்து நடிகர் விஷால் பேட்டி அளித்தார். அப்போது மிகவும் ஆக்ரோஷ மாக கந்து வட்டிக்கு முடிவு கட்டுவது குறித்து பேசினார். அப்போது அன்புச்செழியன் மீது கடுமை யாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போது தான் அசோக்குமார் ஆத்மா சாந்தி அடையும். ஆனால் அன்புச் செழியனை காப்பதற்காக அமைச்சரோ, எம்எல்வோ வந்தால் விட மாட்டோம் என்று விஷால்.

தனி அமைப்பு

விஷாலின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் ஆதார மில்லாமல் போகிற போக்கில் அரசு மீது புழுதிவாரி அடிக்க வேண்டாம். சினிமா துறைக்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கங்கள் உள்ளன.

நடிகர்கள் தலா ஒரு கோடி பணம் சேகரித்து சுழற்சி நிதி அடிப்படையில் ரூ.500 கோடி சேகரித்து சிறு தயாரிப் பாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கலாமே என்றார்.

நல்ல ஐடியா
அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்தது நல்ல ஐடியா தானே. இது போல் சினிமா துறையில் உள்ள சிறு தயாரிப் பாளர்களை கந்து வட்டி கும்பல் நசுக்குவதை தடுக்க இவர்களாகவே நிதியை திரட்டி சுழற்சி முறையில் கடன் வழங்கலாம்.

அரசும் சினிமா துறைக்கு தேவையான வற்றை செய்யும் போது நாங்கள் எல்லாம் ஒரு குடும்பம் என்று கூறிக் கொள்ளும் நடிகர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர் களை காக்க நிதி சேகரித்து கடன் வழங்கலாம்.

இதனால் இன்னொரு அசோக்குமார் உருவாவதை தடுக்க முடியும் என்பது நிதர்சனம். வீரவசனம் பேசிய விஷால் இதை கருத்தில் கொள்வாரா?
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings