மறைந்த ராணுவ வீரரின் மனைவி மறுமணம்... புதிய சலுகை !

0
ராணுவத்தில் வீரதீர செயல்களுக்கான விருது பெற்ற மறைந்த வீரர்களின் மனைவிகள் மறுமணம் செய்து கொண்டாலும் அவர்களுக்கு வழங்கப்படும் பணப்படிகள் தொடரும் என்று ராணுவ அமைச்சகம் அறிவித் துள்ளது.
மறைந்த ராணுவ வீரரின் மனைவி மறுமணம்... புதிய சலுகை !
ராணுவத்தில் போரின் போதோ எதிரிகள் தாக்குதலின் போதோ துணிச்சலான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரதீரச் செயல்களுக்கான விருது வழங்கப்படுகிறது. 

இந்த விருதைப் பெறும் வீரர்களின் மனைவி களுக்கு பணப் படிகள் சலுகை வழங்கப் படுகிறது. 

வீரரின் மனைவி உயிரோடு இருக்கும் வரை அல்லது மறுமணம் செய்து கொள்ளும் வரை இந்த பணப் படிகள் வழங்கப் படும். 

மறுமணம் செய்தால் சலுகை கிடைக்காது என்ற விதி இருந் தாலும், இறந்த வீரரின் சகோதாரரை வீரரின் மனைவி மறுமணம் செய்து கொண்டால் குடும்ப ஓய்வூதிய த்துக்கு அவர் தகுதியு டையவர் ஆவார்.
இந்நிலையில், பல்வேறு தரப்பு கோரிக்கை களை ஏற்று வீரதீரச் செயல் விருது பெற்ற இறந்த ராணுவ வீரர்களின் மனைவி களுக்கு 

அவர்கள் மறுமணம் செய்து கொண்டாலும் பணப் படிகள் சலுகை தொடரும் என்றும் மனைவி இறக்கும் வரை 

சலுகைகள் வழங்கப் படும் என்றும் இதற்கேற்ப விதிகள் திருத்தி யமைக்கப் பட்டுள்ள தாக வும் ராணுவ அமைச்சகம் தெரிவித் துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings