கடை திறப்பு விழாவில் மயங்கி விழுந்த நடிகை !

செல்போன் கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை ஷாலினி பாண்டே மயங்கி விழுந்துள்ளார். தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படம் மூலம் தெலுங்கு ரசிகர் களின் ஆதரவைப் பெற்றவர் நடிகை ஷாலினி பாண்டே.
இந்தப் படத்தை யடுத்து இவர் தமிழ் மற்றும் கன்னடத்தின் அதிக படங்களில் நடிக்க வுள்ளார். இந்த நிலையில் ஷாலினி பாண்டே, ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஒரு செல்போன் கடையை திறந்து வைக்கச் சென்று ள்ளார். 

நடிகை ஷாலினி வருவதை அறிந்த ஆயிரக் கணக்கான ரசிகர்கள் அங்கு கூடியிருந்தனர். ஏற்கெனவே சற்று காய்ச்சலால் பாதிக்கப் பட்டிருந்த ஷாலினி தன்னை பார்க்க வந்த கூட்டத்தை பார்த்து மயங்கி விழுந்தார். 

உடனே அருகில் உள்ள மருத்துவ மனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. சிறிது நேரம் ஓய்வெ டுத்த ஷாலினி. அதன் பிறகு திறப்பு விழாவில் கலந்து கொண்டு விட்டு ஐதராபாத் திரும்பினார்.
Tags:
Privacy and cookie settings