நசுக்கப்பட்ட முஸ்லிம்கள்... அதிர்ச்சியான உண்மைகள் !

முஸ்லிம்கள் கல்வியில் முன்னேறி விடக்கூடாது என்பதை அப்போதி லிருந்தே அதிகாரத்தில் இருந்தவர்கள் கவனமாகவே இருந்துள்ளனர்.
நசுக்கப்பட்ட முஸ்லிம்கள்... அதிர்ச்சியான உண்மைகள் !
ஆங்கிலேயரை எதிர்ப் பதற்காக ஆங்கிலேயரின் மெக்காலே வழிக் கல்வியைப் புறக் கணித்த முஸ்லிம் சமுதாயம், 

அரசு வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் பின் தங்கி இருப்பதை உணர்ந்து, ஆங்கில வழிக் கல்வியை முஸ்லிம்களும் கற்க பல்வேறு முயற்சி களை 19ஆம் நூற்றா ண்டின் மத்தி யிலேயே தொடங்கி விட்டது. 

ஆனாலும் முஸ்லிம்கள் கல்வி கற்பதை (குறைந்த பட்சம் அரசு செலவில் முஸ்லிம்கள் கல்வி கற்பதை) அரசுகள் விரும்ப வில்லையோ என்ற ரீதியி லேயே விடுதலைக்குப் பின்னரான சென்னை மாகாண அரசு நடந்து கொண்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் ஆற்காடு நவாப் குடும்பத்தின ரால் வழங்கப்பட்ட இடத்தில் மதரசாயே ஆஜம் பள்ளியும் அதனைத் தொடர்ந்து 
அதே இடத்தில் 1901ஆம் ஆண்டு அரசு முஹமதிய கல்லூரியும் தொடங்கப் பட்டது. இந்தக் கல்லூரியில் 25% முஸ்லிம் அல்லா தோருக்கும் ஒதுக்கப் பட்டது.

அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்துக்கு இணையாக முஸ்லிம் களால் கருதப்பட்டிருந்த அந்தக் கல்லூரியை செக்யூல ரிசத்தை நடைமுறைப் படுத்துவதாகக் கூறி 

அப்போதைய கல்வி அமைச்சர் மாதவ மேனன் அரசு கலைக் கல்லூரி என்று பெயர் மாற்றியதுடன் முஸ்லிம்கள் அனுபவித்து வந்த 75% ஒதுக் கீட்டையும் ரத்து செய்தார்.

அந்தக் கல்லூரி வளாகத்திலேயே அமைந்திருந்த அரசு முஸ்லிம் பெண்கள் கல்லூரி இழுத்து மூடப்பட்டது. 
முஸ்லிம் லீக் கட்சியின் சட்டமன்ற பெண் உறுப்பினரான பேகம் மீர் அமீரு த்தீன் அரசின் முடிவை எதிர்த்து சட்ட மன்றத்தில் மிக அழுத்தமாகப் பதிவு செய்தார். 

அதனால் எந்தப் பலனும் இருக்க வில்லை. அரசின் நடவடிக்கையால் அப்போதைய முஸ்லிம் தலை வர்களும் கல்வி யாளர்களும் சோர்ந்து விட வில்லை. 

தாங்களே சுயமாக நிதி திரட்டி ஆண்களுக்கு ஒன்றும் பெண்களுக்கு ஒன்றுமாக இரண்டு கல்லூரி களை நிறுவினார்கள். 

அந்தக் கல்லூரி களின் பெயர் களில் முகமதிய அல்லது "முஸ்லிம்" போன் றவை இடம் பெறாமல் பார்த்துக் கொண் டார்கள்.

1951ஆம் ஆண்டு ராயப் பேட்டையில் புதுக்கல்லூரியும் 1955ஆம் ஆண்டு தேனாம் பேட்டையில் எஸ்ஐஈடி (தற்போது ஜஸ்டிஸ் பஷீர் அஹமது செய்யது பெண்கள் கல்லூரியும் தான் அந்த இரண்டு கல்லூரிகள்.
இனியும் அரசை நம்பிக் கொண்டி ருந்தால் புதிய சமு தாயம் கல்வி யற்ற தாக மேலும் பின் தங்கி விடும் என்பதை உணர்ந்த தலை வர்கள், 

தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, அப்போதைய செல்வந் தர்களிடம் பேசி 11 புதிய கல்லூரி களை உருவாக் கினார்கள்.

1974ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியின் போது மதரசயே ஆஜம் பள்ளி வளாகத்தில் இருந்த அரசு கலைக் கல்லூரியை நந்தனத்துக்கு மாற்றி விட்டு, 

அந்த இடத்தில் காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரி யை கலைஞர் அரசு ஏற்படுத் தியது.
Tags: