அமெரிக்காவில் உலகின் முதல் தாய்ப்பால் வங்கி !

உலகின் முதல் தாய்ப்பால் வங்கி, வட அமெரிக்காவில், போஸ்டன் மாநகர த்தில் 1910 ஆம் ஆண்டு துவங்கப் பட்டது. இந்தியாவில் முதல் தாய்ப்பால் வங்கி மும்பை தாராவியில் 1989 ஆம் ஆண்டு, 
அமெரிக்காவில் உலகின் முதல் தாய்ப்பால் வங்கி !
அர்மேதா ஃபெர்னாண்டஸ் என்பவரால் தொடங்கப் பட்டது. தமிழ் நாட்டில் சென்னை எழும்பூர் அரசினர் குழந்தை நல மருத்துவ மனையில் கடந்த 2014 ஆம் ஆண்டு துவங்கப் பட்டது.

இந்த ஆண்டு உலகத் தாய்ப் பாலூட்டும் தினத்தின் குறிக்கோள் - தாய்ப்பால் ஊட்டு தலும் வேலையும் ஆகிய இரண் டையும் திறம்படச் செய்வோம்.

இதனை யொட்டி தாய்ப்பால் வங்கிகள் திருச்சி, மதுரை, கோவை, சேலம், தேனி என 5 மாவட்ட மருத்துவ மனைகளில் துவங்கப் பட்டன. 

தமிழகம் முழுவதும் உள்ள 352 பெரிய பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறைகளும் அமைக்கப் பட்டுள்ளன.

தாய்ப் பாலைத் திரவத் தங்கம் என்று அழைப்பர். இது மிகையான வார்த்தை இல்லை. தாய்ப்பால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் அற்புத உணவு. 
குழந்தை களுக்கு இதை மருந்தாக கூட பயன்படுத்த இயலும். குழந்தைகளை நோய்த் தொற்று களிடம் இருந்து காக்கும். தாய்ப்பால் பெறும் குழந்தை களிடம் நல்ல மூளை மற்றும் உடல் வளர்ச்சியை காண முடியும்.

இந்தியாவில் தினமும் ஆயிரக் கணக்கான குழந்தைகள் குறை மாதத்தில் பிறக்கி ன்றனர்.

இவர்கள் போதிய தாய்ப்பால் இல்லாமல், ஊட்டச் சத்தின்மையால் பாதிக்கப் படுகின்றனர். இது போன்ற குழந்தை களுக்கு தாய்ப்பால் வங்கி தரக்கூடிய நன்மைகள் பல.

அதனால் தாய்ப்பால் வங்கியைப் பயன்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க் கையை நம் அடுத்த தலை முறைக்கு கொடுப்போம்.
Tags:
Privacy and cookie settings