சி.டி. ஸ்கேன். எக்ஸ்ரே ஓர் ஒற்றைப் பரிமாண பரிசோதனை !

உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டும் எக்ஸ்ரேவின் அடுத்த அவதாரம் தான் சி.டி.ஸ்கேன். எக்ஸ்ரே ஓர் ஒற்றைப் பரிமாண பரிசோதனை முறை. 
சி.டி. ஸ்கேன். எக்ஸ்ரே ஓர் ஒற்றைப் பரிமாண பரிசோதனை !
இதனால், ஒரு நோயாளியைப் பற்றிய தெளிவான தகவல் களுக்கு இரண்டு கோணங்களில், இரண்டு முறை பரிசோதிக்க வேண்டி யிருக்கும்.

இதில் கதிர் வீச்சின் அளவும் அதிகம் என்பதால் பரிசோதனை செய்து கொள்ப வருக்கு ரிஸ்க்கும் அதிகம். 

இந்தப் பிரச்னையைக் கவனத்தில் கொண்டு, ஒரு முறை பரிசோதிக்கும் போதே இரண்டு பரிமாணத்தில் (2டி முறை) கண்டு பிடிக்கும் வகையில் சி.டி. ஸ்கேன் வடிவமைக்கப் பட்டது.

Computerized Tomography Scan என்ற பெயரில் இருக்கும் டோமோ என்ற கிரேக்க வார்த்தை க்கு Slice என்றே அர்த்தம்.

அதாவது, ஒரு பிரெட் துண்டின் ஸ்லைஸை இரண்டு பக்கமும் பார்க்க முடி வதைப் போல சி.டி. ஸ்கேன் கருவி யின் உதவியால்

இரண்டு பக்க த்தின் நிலவர த்தையும் தெரிந்து கொள்ள முடியும். எக்ஸ்ரேவை விட இன்னும் தெளி வாக, விரை வாக முடிவு களைப் பெற முடியும் என்பதும் சி.டி. ஸ்கேனின் இன்னொரு சிறப்பு.
இந்த சி.டி. ஸ்கேன், இங்கிலாந்து இன்ஜினி யரான காட்ஃப்ரே ஹான்ஸ்ஃபீல்ட் மற்றும் தென் ஆப்ரிக் காவைச் சேர்ந்த மருத்துவர் அலன் கார்மாக் ஆகிய இரு வரின் கூட்டு முயற்சி. 

சி.டி. ஸ்கேன் கருவி க்குள் இருக்கும் டிடெக்டர், உடலின் உள் பகுதி களை படம் பிடித்து கம்ப்யூ ட்டருக்கு அனுப்பு வதன் மூலம் முடிவு களைத் திரை யில் கண் கூடாகப் பார்க் கும் வகை யில் இருவரும் உருவாக் கினார்கள்.

1972ம் ஆண்டே சி.டி. ஸ்கேன் கண்டு பிடிக்கப் பட்டு விட்டா லும் 1974ம் ஆண்டு தான் அதிகாரப் பூர்வ மாக நடை முறைக்கு வந்தது. 

அப்போது தலைப் பகுதியை மட் டுமே பரிசோதி க்கும் வகையில் இருந்த சி.டி. ஸ்கேன், 1976ம் ஆண்டு மொத்த உடலையும் பரிசோதிக்கும் முறையில் வளர்ச்சி யடைந்தது. 
இன்று மூளையில் ஏற்படும் காயம், புற்று நோய், எலும்புகளின் நிலைமை, நுரையீரல் மற்றும் நுரையீரலுக்கு இடைப்பட்ட பகுதிகளைக் கண்டறிய சி.டி. ஸ்கேன் முறை பெரிதும் உதவுகிறது.

கருவில் இருக்கும் குழந்தையின் செயல் பாடுகள் நன்றாக இருக் கிறதா என்பதைப் பரிசோதிப்ப தற்காகவும் இந்த முறையைக் கையாள் கிறார்கள்.

மனித சமூக த்துக்கு உதவும் அரும் கண்டு பிடிப்புகளுக்கு வழங்கப்படும் நோபல் பரிசை இந்த சி.டி. ஸ்கேனும் இரட்டைப் பரிசாகத் தட்டிச் சென்றது.

இத்தனை பெருமை கொண்ட சி.டி. ஸ்கேன் ஒரு பெரும் பிரச்னை யையும் தனக் குள் கொண்டி ருக்கிறது. 
எக்ஸ் கதிர்களை அடிப்படையாகக் கொண்டே சி.டி. ஸ்கேன் பரிசோதனையும் செயல்படுவதால் புற்று நோய் உள்ளிட்ட பல அபாயங்கள் இதில் இருக்கிறது என்கின்றன 

சமீபத்திய ஆய்வுகள். அதனால், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், அவசியம் ஏற்பட்டால் தவிர, சி.டி. ஸ்கேன் பரிசோதனையை செய்து கொள்ளக் கூடாது!
Tags: