பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றிய சில விஷயம் !

நல்லதோ, கெட்டதோ... இந்தியாவைப் பொறுத்த வரை எப்போதுமே டிரெண்டி ங்கில் இருக்கும் ஒரே நபர் நம் பிரதமர் நரேந்திர மோடி தான். 

பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றிய சில விஷயம் !
அவ்வப் போது ஏலியன் லெவலில் ஏதாவது அறிவிப்பை வெளியிட்டு தமிழர் களைத் திகில் ஆக்குவார். இவற்றைத் தாண்டி அவரை பற்றி நாம் அறியாத சில சுவாரஸ்யமான விஷயங்களும் இருக் கின்றன. சொல்லட்டுமா...

* மோடி திருமணம் ஆனவரா, இல்லையா என்று பலருக்கும் தெரியாமல் இருந்தது. 2014 பொதுத் தேர்தலில் குஜராத் மாநிலம், வதோதரா தொகுதியில் போட்டி யிட்டார். 

அப்போது வேட்புமனு தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரத்தில் மனைவி என்ற இடத்தில் யசோதாபென் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பிறகு தான் அவர் திருமண மானவர் என்பதே பெரும் பாலானோருக்குத் தெரிய வந்தது. 

இருவரு க்கும் 1968-ல் திருமணம் முடிந்துள்ளது. அப்போது அவர்களுக்கு 20 வயது கூட முடிந்திருக்க வில்லை. 

திருமணம் முடிந்த கொஞ்ச நாட்களிலேயே பெர்சனல் காரணங்களாலும், அரசிய லின் மீதுள்ள ஈர்ப்பினாலும், வீட்டை விட்டே கிளம்பி விட்டார்.

* நம்ம நரேந்திர மோடியும் ட்விட்டரில் இருக்கிறார் என்பது சமூக வலை தளங்களில் இயங்கும் மக்களுக்குத் தெரியும். அவரது ட்விட்டர் பக்கத்துக்கு 30 மில்லியன் களுக்கும் மேல் ஃபாலோயர்ஸ் இருக் கின்றனர். 

உலக அரசியல் தலைவர்களுள் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு பிறகு மோடிக்கு தான் ஃபாலோ யர்ஸ் அதிகம். எல்லோரும் அவரை திட்டிட்டே தான் இருக்காங்க, அப்புறம் எதுக்கு தான்யா ஃபாலோ பண்றாங்க..?

* இவர் எப்போதுமே சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருப்பாராம். காலையில் கண் விழிப்பதே ட்விட்டரில் தான். அதற்குக் காரணம், 

பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றிய சில விஷயம் !
இவரைப் பற்றிப் பாராட்டு வதை அறிந்து கொள்ளும் ஆர்வம், அதை விட முக்கியமாக இவர் மேல் முன் வைக்கும் விமர்சனங்களை நோட் பண்ணிக் கிட்டே தான் இருப்பாராம். 

அது மட்டுமின்றி தேர்தல் நேரங்களில் லைவில் பிரச்சாரம் செய்யத் தொடங்கிய முதல் ஆளே நம்ம மோடி தான். ஷ்ஷ்ஷ்... இந்த கட்டுரை யையும் மோடி படித்துக் கொண்டிருக்கிறார்.

* அவர் ஸ்கூல் படிக்கும் போது நடிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளார், பல ட்ராமாக்களிலும் நடித்துள்ளார். சிறு வயதில் அவரது ஊரில் இருக்கும் 'ஷர்மிஷ்தா' எனும் ஏரியில் விளையாடுவது வழக்கம். 

அதே ஏரியில் முதலைகள் நட மாட்டமும் காணப்படும், இது அங்குள்ள மக்களுக்கே தெரிந்த விஷயம். 

ஒரு நாள் எதிர்பாராத விதமாக அங்குள்ள முதலையின் வால் பகுதி மோடியின் மேல் பட்டு பயங்கரமான காயத்துக்கு ஆளானார். இன்னமும் அவரது கால்களில் போட்ட தையலின் தழும்புகளைக் காண முடியும்.

* இளம் வயதிலிருந்தே மோடிக்கு ஊர் சுற்றுவது மிகவும் பிடிக்குமாம். எதற்காகப் போகிறோம் என்று தெரியா மலேயே பல இடங்களுக்கும் பயணித் திருக்கிறார். 

அப்படி அமைந்த பயணத்துள் இமயமலைப் பயணமும் ஒன்று. அங்கு சில காலம் சந்நியாசி வாழ்க்கை கூட வாழ்ந்திருக்கிறார். 
மோடியைப் பற்றிய சில விஷயம் !
சின்ன வயசுல ஊர் சுத்துனா அது அறியாத வயசு, மனசு அங்கிட்டும் இங்கிட்டும் அலை பாயுற வயசுன்னு ஒப்புக் கொள்ளலாம். அதுக்காக இப்பவுமா மோடிஜி நாடு நாடா சுத்துவீங்க?

* பல பேட்டிகளில் இவர் டெம்ப்ளேட்டாகச் சொல்வது, 'காலையில் அதிக நேரம் தூங்க மாட்டேன், இரவில் அதிக நேரம் விழித்திருக்க மாட்டேன்'. 

தவறாமல் இந்த வாக்கியத்தை எல்லாப் பேட்டிகளிலும் சொல்லிக் கொண்டே தான் இருப்பார். அதே மாதிரி காலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்து விடுவார். 

அவருடன் பேச நினைக்கும் ஆட்கள் காலையில் 5 மணிக்கு ட்விட்டர் பக்கம் ஆன்லைன் வந்தால் மோடியோடு சாட் பண்ணலாம். அவர் கண் விழிப்பதே ட்விட்டரில் தானே..!
Tags:
Privacy and cookie settings