மாடுகளைக் காப்பாற்ற சில யோசனைகள் !

மாடுகளை இந்த நாட்டு மக்களிடம் இருந்து எப்படி யாவது காப்பாற்றி விட வேண்டுமென மத்திய அரசு தீவிரமாகச் சிந்தித்து, பல புதுப்புது அறிவிப்பு களை வெளியிட்டு வருகிறது. 
மாடுகளைக் காப்பாற்ற சில யோசனைகள் !
இந்த அளவிற்கு யோசிப்பது சிறு மூளை சுருங்கிப் போகவும், பெரு மூளை பிதுங்கிப் போகவும் வாய்ப்பாக அமையும் என்பதால், ஏதோ எங்களால் முடிந்த சில யோசனைகள்...

இறைச்சிக் காக மாடுகள், ஒட்டகங்கள் விற்கக் கூடாதென மட்டும் சொல்லி யிருப்பது எந்தள விற்கு பலன் தரும் எனத் தெரிய வில்லை. 

அதனால், இறைச்சி சமைக்கப் பயன்படும் மட்டன், சிக்கன் மசாலா தூள் பாக்கெட்டுகள் விற்கத் தடை கொண்டு வரலாம். 

பதிலாக தொலைக் காட்சி களில் `பீஃப்கறி பீஃப்கறி குருமா... இட்லி வடகறி போல வருமா...' என விளம்பரங்கள் எடுத்து ஒளிபரப்பிப் பிரசாரம் செய்ய லாம்.

`கோமாதா எங்கள் குலமாதா', `முரட்டு காளை', `அண்ணாமலை' போன்று மாடுகளைப் பெருமைப் படுத்தும் விதமாக வந்த திரைப் படங்களை, 

மீண்டும் அரசே தனது சொந்தச் செலவில் ரீமேக் செய்யலாம். `எங்க ஊரு பாட்டுக் காரன்' படத்தை 

`எங்கள் ஊரு மாட்டுக் காரன்' எனப் பெயர் மாற்றி ரீமேக்கி ஹெச். ராஜாவை ஹீரோவாக நடிக்க வைக்க லாம். ஏத்துக்க முடி யலையா? யூ ஆர் ஆன்ட்டி இந்தியன்.

மாடுகளைக் காப்பாற்ற சில யோசனைகள் !
அதிக மாகச் சாணம் போடும் மாடு, அதிக மாகக் கோமியம் தரும் மாடு, பாடினாலே பால் தரும் மாடு என மாடுகளுக் கிடையே விதவித மான போட்டிகள் வைக்கலாம். 

அதை நாடு முழுவதும் பிரபலப் படுத்த `மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா' போன்று `கொவ் இந்தியா' என்ற கேம்ப்பயன் நடத்தலாம்.

`முத்து' படத்தில் ராதாரவி தனது காரின் பேனட்டில் மாட்டுக் கொம்பை மாற்றி வைத்திருப் பாரே, 

அவரைப் போன்ற ஆட்களைத் தேடிப் பிடித்துக் கூட்டி வந்து `தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு, அதற்கு கருட புராணத்தின் படி என்ன தண்டனை, 

அன்று அப்படிச் செய்த தால் இன்று எந்தளவு அவர் மனம் துன்பப் படுகிறது' போன்ற தலைப்பு களில் மக்கள் முன்னர் பேச வைத்து டர்ர் கிளப்பலாம்.

ரோட்டில் சுற்றித் திரியும் மாடுகளின் அவல நிலையைக் கருத்தில் கொண்டு, அவை களுக்கு அடுக்கு மாடித் தொழுவங்களை கட்டித் தரலாம். 
நடை பாதையில் வாழும் மக்கள் அனுப விக்கும் கொடுமையை எக்காரணம் கொண்டும் மாடு களை அனுபவிக்க விட வேண்டாம். பிளீஸ்...

மாடுகள் மற்றும் ஒட்டகங் களைக் காப்பாற்றப் பாதுகாப்பு ஆணையம் அமைக் கலாம். 2000 ரூபாய் நோட்டில் `சிப்' வைத்தது போன்று 

மாடு களுக்கும், ஒட்டகங் களுக்கும் தீவனத்தில் `சிப்' மற்றும் `மெமரி கார்டு' கலந்து ஊட்டி விடலாம். 

இதனால், அவைகள் பாது காப்பாக இருக்கின் றனவா என்பதைக் கண் காணிக்க முடியும். அதற்கான `சிப்' மற்றும் `மெமரி கார்டு' -களை மேக் இன் இந்தியா திட்டம் மூலம் செய்யலாம்.

ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக் கிலும் போடுவ தாகச் சொல்லிச் சூடம் அடித்துச் சத்தியம் செய்த அந்த 15 லட்ச ரூபாயை, சொன்ன சொல் தவறாமல் போட்டு விடலாம். 

ஆனால், அந்தக் காசைக் கொண்டு மாடுகளு க்குத் தொழுவம் கட்டுவது, வைக்கோல் வாங்கி கொடுப்பது, புத்தாடை எடுத்துத் தருவது போன்ற செலவு களைத் தான் செய்ய வேண்டும் எனச் சட்டம் இயற்ற லாம்.

நமது தேசிய விலங்கான புலி, மாடுகளை வேட்டை யாடி தின்னக் கூடியது என்பதால் `தேசிய விலங்கு' எனும் உயர் பொறுப்பி லிருந்து ராஜினாமா செய்ய வைக்கலாம்.
மாடுகளைக் காப்பாற்ற சில யோசனைகள் !
`இந்தியன்' படத்தில் கவுண்ட மணியை ஒட்டகம் கடிக்கும் காட்சி மற்றும் `அந்நியன்' படத்தில் ஹனிபாவை எருமை மாடுகள் விரட்டும் காட்சி ஆகிய வற்றைத் திரைய ரங்கில் ஒளிப் பரப்பலாம். 

புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு' போன்று `பீஃப் சாப்பிடுவது இந்த நாட்டிற்குக் கேடு' என வார்னிங்கும் போடலாம்.

அடுத்து எப்படியும் `குளத்தி லிருந்து தாமரைப்பூ பறிக்கத் தடை' என அறிவிப்பு வரும். அதற்கும் இதே மாதிரி கண்டிப்பா யோசனை சொல்றேன்.
Tags:
Privacy and cookie settings