முதியவர்களை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை | Life imprisonment for killing elderly !

கனடா நாட்டில் 8 முதியவ ர்களை கொலை செய்த குற்றத் திற்காக செவிலியப் பெண் ஒருவ ருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு ள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.


ஒன்டாரியோ மாகாண த்தில் உள்ள மருத்துவ மனை ஒன்றில் Elizabeth Wettlaufer (49) என்பவர் செவிலிய ராக பணி யாற்றி வந்துள்ளார்.

இந்நிலை யில், இவர் கடுமை யான மன அழுத்த நோயால் பாதிக்கப் பட்டதாக கூறப் படுகிறது.

இதனை தொடர்ந்து தனது கண்காணி ப்பிற்கு வரும் நோயாளி களிடம் மோச மாக நடந்து கொண் டுள்ளார்.

ஒரு கட்டத் தில் வயது மூத்த நோயாளி களை ஒன்றன் பின் ஒன்றாக கொலை செய்யவும் முடிவு செய்து அதற்கான பணியில் இறங்கி யுள்ளார்.

2007 மற்றும் 2014 ஆகிய காலக் கட்டங் களில் இவரது கண் காணிப் பிற்கு வந்த 8 நோயா ளிகள் மர்மமான முறையில் உயிரிழந் தனர்.

ஆனால், அப்போது செவிலியர் மீது சந்தேகம் ஏற்பட வில்லை. கடந்தாண்டு மருந்தகம் ஒன்றிற்கு சென்ற அப்பெண் தனது முந்திய நடவடிக் கைகளை எடுத்துக் கூறி யுள்ளார்.

இவ்விவ காரம் வெளி யானதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப் பட்டார்.

இவ்வழக்கு தொடர் பான விசாரணை நேற்று முன் தினம் நீதிமன்ற த்திற்கு வந்தபோது செவிலியர் அனைத்துக் குற்றங் களையும் ஒப்புக் கொண் டுள்ளார்.

மேலும், கொலை யாளி தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட தால் அவருக்கு 25 ஆண்டுகள் வரை வெளியே வர முடியாத ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு ள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.
Tags: