மன உளைச்சல் ஏற்படுத்தியவர்களை மன்னிக்க மாட்டேன்... அசாஞ்சே !

என் மீதான விசாரணையை கைவிட்டாலும், கடந்த 7 வருடங்களாக எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய ஸ்வீடன் அதிகாரிகளை மறக்கவும் மாட்டேன்.
மன உளைச்சல் ஏற்படுத்தியவர்களை மன்னிக்க மாட்டேன்... அசாஞ்சே !
மன்னிக் கவும் மாட்டேன் என்று விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே கடுமை யாகக் கருத்து தெரிவித் துள்ளார்.

அமெரிக்காவின் முக்கியமான ரகசிய ஆவணங்கள் பலவற்றை விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே வெளியிட்ட தையடுத்து அவர் மீது பல விதமான குற்றச் சாட்டுகள் சுமத்தப் பட்டன.

இதை யடுத்து அவரை கைது செய்ய அமெரிக்கா முயற்சித்தது. இந்நிலையில், ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகருக்குச் சென்ற அசாஞ்சே மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப் பட்டது.

இதனால், கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக லண்டன் சென்று அங்குள்ள ஈக்வடார் தூதரகத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு அரசியல் தஞ்சம் புகுந்தார். இதனால் அவரை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. 

இந்நிலையில், அசாஞ்சே மீது 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பலாத்கார குற்றச் சாட்டுகள் தொடர்பான விசாரணையை கைவிடப் போவதாக சுவீடன் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த தகவல் வெளியானதும், அசாஞ்சே தன் கோபத்தை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டார்.
என் மீது அவதூறு சுமத்தி 7 ஆண்டு களாக தடுத்து வைத் திருந்த ஸ்வீடன் அதிகாரிகளின் செயலை மறக்கவும் மாட்டேன், மன்னிக்கவும் மாட்டேன் என்று டுவிட்டரில் பதிவு செய்தார்.
பாலியல் வழக்கு விசார ணையை ஸ்வீடன் கைவிடும் முடிவை ஈக்வடார் வரவேற்றுள்ளது. அவரை பாதுகாப்பாக வெளியே அனுப்பவும் நடவடி க்கை எடுத்து வருகிறது.

ஈக்வடார் தூதரகத்தை விட்டு வெளியேறும் அசாஞ்சே, பிரான்ஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் அடைய விரும்புவ தாக அவரின் வழக்கறிஞர் தெரிவித் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings