கஞ்சா பயன்படுத்தினால் சிறை தண்டனையிலிருந்து விலக்கு !

பிரான்ஸில் கஞ்சா பயன் படுத்தினால் சிறை தண்டனை யிலிருந்து விலக்கு அளிக்கக் கூடிய சட்டம் இந்த வருட இறுதிக்குள் அமுலுக்கு வரவுள்ளது.
கஞ்சா பயன்படுத்தினால் சிறை தண்டனையிலிருந்து விலக்கு !
பிரான்ஸில் கஞ்சா பயன் படுத்தும் நபர்க ளுக்கு €3,750 வரை அபராதமும், ஒரு வருடம் வரை சிறை தண்ட னையும் தற்போது உள்ள சட்டத்தின் படி வழங்கப் படுகிறது. 

கடந்தாண்டு மட்டும் 180,000 மக்கள் மீது கஞ்சா சட்டத்தின் விதிமுறை மீறல் வழக்கு பதிவுசெய்யபட்டது.

சமீபத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி யாக பொறுப் பேற்ற மேக்ரோன் தனது தேர்தல் அறிக்கையில், தான் ஆட்சிக்கு வந்தால் கஞ்சா உபயோகப் படுத்தும் சட்டத் தில் திருத்தம் கொண்டு வரப்படும் என கூறியிருந்தார்.

அதன்படி, கஞ்சா உபயோகப் படுத்தும் நபர்களுக் கான சிறை தண்ட னையில் விலக்கு அளிக்கும் சட்டத்தை மேக்ரோன் அரசு கொண்டு வரவுள்ளது.

இது குறித்து அரசின் சார்பில் பேசிய Christophe Castaner என்னும் நபர், இந்த சட்டம் நடை முறைக்கு வந்தாலும், பிரான்ஸில் கஞ்சா உபயோகப் படுத்துவது 
குற்றச் செயலாக தான் பாவிக்கப் படும். தற்போது உள்ள சட்டத்தால் பொலிசா ருக்கு அதிக நேரம் இது தொடர்பான வழக்கி லேயே செலவா கிறது.

இந்த சட்டம் வருவதால், பொலிசார் முக்கிய வேலை களில் தங்களை இனி ஈடுபடுத்தி கொள்ளலாம் என கூறி யுள்ளார். வரவிரு க்கும் இந்த புதிய சட்டத்து க்கு காவல் துறை சங்கம் வரவேற்பு தெரிவித் துள்ளது. 

ஆனாலும், நீதிபதிகள் இந்த சட்டத்து க்கு குறைந் தளவு ஆதரவே அளித்து ள்ளார்கள். இதனால் எதுவும் மாறப் போவ தில்லை என நீதிபதிகள் சங்கத்தை சார்ந்த Virginie என்பவர் கூறி யுள்ளார். 

பிரான்ஸில் கடந்த 2014ம் ஆண்டில் நடந்த கருத்துக் கணிப்பில் 17 மில்லியன் மக்கள் தங்கள் வாழ்க்கை யில் ஒரு முறை யேனும் 
கஞ்சா பயன் படுத்தி யுள்ளதா கவும், 700,000 பேர் தினமும் கஞ்சா பயன் படுத்துவ தாகவும் கூறினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags: