வாழ்ந்தா உன் கூட தான் - மனைவியை இழந்த பூபதி !

திருமணம் என்று வரும் போது பெற்ற வர்கள் பார்த்து வைக்கும் ஆணைத் திருமணம் செய்து கொள்வதில் தான் குடும்ப கெளரவமே அடங்கியி ருக்கிறது 

வாழ்ந்தா உன் கூட தான் -  மனைவியை இழந்த பூபதி !
என்பது தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் எழுதப் படாத சட்டமாக உள்ளது. குடும்ப மானமே பெண் களின் திருமண பந்தத்தில் புதைந்தி ருப்பதாக நினைத்துக் கொள்கி றார்கள் பெற்றவர்கள்.

பெற்றோரின் ஜாதி வெறியால் ஆணவக் கொலைக்கு ஆளாபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
காதல் திருமணம் செய்ததால் ஆணவக் கொலைக்கு ஆளான இளவரச னையும், சங்கரையும் அவ்வளவு எளிதாக நாம் மறந்தி ருக்க மாட்டோம்.

இச்சூழலில் மதுரை வீராளம் பட்டியைச் சேர்ந்த பெரிய கார்த்தி கேயனின் மகள் சுகன்யா, பூபதி என்பவரைக் காதலித்து பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த வர்கள் என்பதால் சுகன்யாவை ஆணவக் கொலைக்கு பலி கொடுத்தி ருக்கிறார்கள் அவளுடைய பெற்றோர்.

காவல் துறையினர் ஆய்வு செய்ததில் எரிந்து போன நிலையில் இருந்த சுகன்யா வின் எலும்புகள் கிடைத்  துள்ளன.

கிடைத்த எலும்புகள் பிரேதப் பரிசோத னைக்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளன.

இதை யடுத்து சுகன்யாவின் தந்தை மற்றும் அத்தை லட்சுமியை போலீஸார் கைது செய்து விசாரித்து வரும் சம்பவம் மீண்டும் தமிழக த்தைப் புரட்டிப் போட்டிருக்கிறது.
காதல் மனைவி இழந்து விட்டு தனிமரமாக நிற்கும் பூபதியிடம் நடந்த சம்பவங்கள் பற்றி விசாரி த்தோம். ”நான் முதன் முதலா சுகன்யாவை பிரைவேட் ஹாஸ்பிடல்ல நர்ஸ்ஸா பார்த்தேன்.
சுகன்யா வோட ஊர் பேரையூர் வீராளம்பட்டி. என்னோட ஊர் ஈரோடு கங்காபுரம். சுகன்யா வேலை பார்த்து வந்த ஆஸ்பத் திரிக்குப் பக்கத்துல நான் பெயிண்டராக வேலை பார்த்துட்டு இருந்தேன்.

என்னோட ஃப்ரெண்டுக்கு உடம்பு சரியில் லைன்னு சுகன்யா வேலைபார்த்த ஆஸ்பத் திரிக்கு கூட்டிட்டு போயி ருந்தேன்.

அங்க சுகன்யாவைப் பார்த்தேன். பார்த்த வுடனே இவ தான் என்பொண் டாட்டினு மனசு சொல்லிச்சு. ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கிட்டோம்.

பார்வை யில தொடங்கின எங்க காதல் கொஞ்சம், கொஞ்சமாக மொபைல் நம்பர் கொடுக்கிற அளவுக்கு மாறுச்சு.

வேலை நேரம் போக மத்த நேரங்கள்ல பார்த்துப் பேச ஆரம்பி ச்சோம். ரெண்டு பேருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறதா பட்டுச்சு.
‘நம்ம காதல் பத்தி வீட்டுல தெரிஞ்சா நம்மளை கொன்னுப் போட்டிரு வாங்க’னு என்கிட்ட அடிக்கடி சொல்லிக் கிட்டே இருப்பா.
எப்படி எங்க காதலை ரெண்டு வீட்டுலேயும் சொல்றதுனு யோசிச்சுட்டே இருந்தோம். அந்தச் சூழல்ல தைப் பொங்கலு க்கு சுகன்யா ஊருக்கு போயிட்டு வந்தா.

வந்ததும் எங்க வீட்ல மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிச் சிட்டாங்க. நாம சீக்கிரம் எங்க வீட்டு க்குத் தெரியாம கல்யாணம் பண்ணிக் கணும்னு சொன்னா.

எங்க வீட்ல எல்லாரு க்கும் சுகன் யாவைப் பிடிச் சிருந்தது. எங்க வீட்டு ஆட்கள் சம்மதத்தோட நாங்க பதிவுத் திருமணம் செஞ்சுக் கிட்டோம்.

கல்யாண த்துக்குப் பிறகு நான் சுகன்யாவை வேலைக்குப் போக வேண்டாம்னு சொல்லிட்டேன்.

ஈரோடு நொச்சிப் பாளையத்துல வாடகைக்கு வீடு பிடிச்சு வாழ்ந்து வந்தோம். எங்க வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா போயிட்டு இருந்தது.

என்னை ‘மாமா’னு தான் கூப்பிடுவா. எங்களுக்குக் கல்யாண மாகி ஒரு மாசம் கழிச்சு தான் அவங்க வீட்டுக்குத் தகவலே தெரிய வந்தது.
தகவல் தெரிஞ்சு ஸ்டேஷன்ல வெச்சு கூப்பிட்டு பேசினாங்க. ஸ்டேஷன்ல, சுகன் யாவை நாங்க சொல்ல சொல்ல கேட்காம அவங்க அப்பா, தம்பிகூட அனுப்பி வச்சுட் டாங்க.
மறு நாளே எனக்கு சுகன்யா போன் பண்ணி ‘என்னால இங்க இருக்க முடியல. உன் கூட தான் இருப்பேன்’னு போன் பண்ணினா.

அவங்க தம்பிக்கு போன் பண்ணி பேசினப்ப ஒரு வாரத்துல வந்துரு வானு சொன்னான். சரினு போனை வைச் சுட்டேன்.

ஆனா மறுநாளே என் மனைவி அவங்க வீட்டுக்குத் தெரியாம கால்ல செருப்பு கூட போடாம பஸ் ஏறி என்னைப் பார்க்க வந்துட்டா.

என்னைப் பார்த்ததும் ‘உன்னை விட்டு என்னால எங்கேயும் போக முடியாது மாமானு சொல்லி கட்டிப் பிடிச்சு அழுதா’.

நாங்க அவ்வளவு பாசமா இருந்தோம். சின்ன, சின்ன சண்டை வரும். நான் ஃப்ரெண்ட்ஸ் கூட பேசிட்டு வீட்டுக்கு லேட்டா வந்தா, கோவிச் சுக்குவா. பேச மாட்டா.
அப்பறம் அவளைக் கொஞ்சி, பேசி சமாதானம் செஞ்சா தான் சரியாவா. இப்படி எங்களுக்கு இடையில நடந்த சின்ன சின்ன சண்டை கூட எங்க அன்பை ஆழ மாக்குச்சு.

இப்படியே சந்தோஷமா நாங்க நூறு வருஷம் வாழ்வோம்னு நினைச் சிருந்தேன். சுகன்யா வுக்கு அவங்க அம்மா, அப்பான்னா உயிரு. அடிக்கடி போன் பண்ணி பேசிக்கிட்டே தான் இருப்பா.
நானும் எதுவும் சொல்ல மாட்டேன். கொஞ்ச நாள் எனக்குப் போன் பண்ணி மிரட்டி னாங்க. அப்பறம் நல்லபடியா பேச ஆரம் பிச்சாங்க.

சித்திரைத் திருவிழா வுக்கு ரெண்டு பேரும் வீட்டுக்கு வாங்கனு போன் பண்ணி கூப்பிட் டாங்க. நாங்க வரலைனு சொல் லிட்டோம்.

அப்பறம் அவங்க அம்மா, அப்பா ரெண்டு பேரும் எங்க வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் கூட இருந்தாங்க. என் குடும்பத்து ஆட்கள் அத்தனை பேரைம் சந்திச்சுப் பேசினாங்க.
பழசெல்லாம் மறந்து டுவோம். எங்க மருமக னையும், மகளையும் திருவிழா வுக்கு கூட்டிட்டுப் போறோம்னு நாடகம் ஆடினாங்க. நாங்களும் அவங்க விரிச்ச மாய வலையை பாசம்னு நம்பி மோசம் போயிட்டோம்.

சித்திரை ஒண்ணாம் தேதி அன்னைக்கு நைட்டு சுகன்யா ஊருக்கு அவங்க அம்மா, அப்பா, என்னோட அம்மாயி கூட போனோம்.

நைட்டு பத்தரை மணிக்கு ஆரப்பா ளையம் பஸ் ஸ்டாண்டுல இறங்கினோம். நைட் சாப்பாடு சாப் பிட்டோம்.
கார் இப்ப வந்துரும், அப்ப வந்துரும்னு சொல்லிட்டே இருந்தாங்க. அப்பறம் கார்ல அவங்க அண்ணன், தம்பியும் வந்தாங்க.

சுகன்யா வீட்டுக்கு ஒரு கிலோ மீட்டர் முன்னாடி இருளாம் பட்டியில காரை நிறுத்தி னாங்க. அப்ப மணி 12.45 இருக்கும். எல்லாரும் கீழே இறங் கினோம்.
கத்தியை காமிச்சு மிரட்டி, என்னையும், அம்மா யியையும் அடிச்சு கீழே இழுத்துப் போட்டுட்டு, சுகன்யாவை மட்டும் இழுத்து விட்டுப் போனாங்க.

எவ்வளவு போராடியும் எங்களால ஒண்ணும் செய்ய முடியல. சுகன்யா மாமா கூட தான் இருப்பேன். என்னை விடுங்க… விடுங்கனு… கத்தினது இன்னும் காதுல ஒலிச்சு க்கிட்டே இருக்கு..

மறுநாளே பேரையூர் காவல் நிலை யத்தில் புகார் கொடுத்தேன். அங்க போங்க, இங்க போங்கனு என்னை அலை கழிச்சாங்க.

அப்பறம் ஒரு வழியா சுகன்யா அம்மா, அப்பா விசார ணைக்கு வந்தாங்க. ‘எங்க பொண்ணு வீட்ல இருந்து ஓடிப் போயிருச்சு, எங்க இருக்குனு தெரியலை’ னு சொன்னாங்க.

அப்பறம், தொடர்ந்து நடந்த விசார ணையில சுகன்யாவை இவங்க உயிரோட துடிக்கத் துடிக்க எரிச்சதை சொன்னாங்க.

கடைசியா சுகன் யாவை சித்திரை ஒண்ணாம் தேதி ராத்திரி 12.45க்கு பார்த்தது. அந்த சமயத்துல மாத விலக்கு கூட 10 நாள் தள்ளிப் போயி ருந்தது.
ஊருக்குப் போயிட்டு வந்து, ஆஸ்பத் திரிக்கு போகலாம்னு நெனைச் சிருந்தோம். அதுக்குள்ள அவளே இல்லாம போயிட்டா..
சுகன் யாவை எரிச்சதா அவங்க அப்பா அம்மா சொன்ன கல் குவாரிக்குப் போய் பார்த்தேன்.

அங்க, இங்கனு சின்னச் சின்ன எலும்புகள் மட்டும் கிடந்தது. எல்லாத் தடயத் தையும் அழிச்சுட் டாங்க படுபாவிங்க.

நான் இப்ப தனி மரமா ஆகிட்டேன். எவ்வளவு கனவு, ஆசை யோட எங்க வாழ்க்கையை ஆரம் பிச்சோம்.

இன்னும் சுகன்யா செத்துட்டா ன்றதை மனசு ஏத்துக்க மாட்டிக்குது. அவளை எங்கை யாவது ஒளிச்சு வச்சிக் கிட்டு அவங்க அப்பா அம்மா நாடகம் ஆடுறாங் களோன்னு தோணுது.

காலையில கூட குறி சொல்றவர் கிட்ட குறி கேட்டேன். சுகன்யா உயிரோட தான் இருக்கா.

இன்னும் ஒரு மாசத்துல திரும்ப வந்துரு வான்னு சொன்னாங்க. அந்த ஒத்தை நம்பிக்கை யில உசுர கையில பிடிச்சுக் கிட்டு இருக்கேன்”.
Tags: