வெங்காயத்தை அப்படியே சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !

வெங்காயத்தில் சல்பர், விட்டமின் C, B6, பயோடின், ஃபோலிக் அமிலம், குரோமியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

வெங்காயத்தை அப்படியே சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !
இவ்வளவு சத்துக் களை உள்ளட க்கிய வெங்காய த்தை பச்சையாக சாப்பிடுவ தால் கிடைக்கும் நன்மைகள் என்ன வென்று தெரியுமா?

வெங்காய த்தை பச்சை யாக சாப்பிடுவ தால் கிடைக்கும் நன்மைகள்

வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் தமனிகளில் ப்ளேக்குகளின் உருவாக்க த்தைத் தடுத்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

வெங்காயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சுவாச குழாய் தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, ஆஸ்துமா மற்றும் மூச்சுக் குழாய் அழற்சியில் இருந்து விடுபட உதவுகிறது.

வெங்காயம் சளி, இருமல், காய்ச்சல், தும்மல் மற்றும் மூக்கு ஒழுகல் போன்ற வற்றையும் தடுக்க பெரிதும் உதவி யாக இருக்கும்.

வெங்காய த்தில் உள்ள ஆன்டி - மைக்ரோபியல் தன்மை சளி, காய்ச்சல், தும்மல், மூக்கு ஒழுகல், போன்ற நோய்களை சரி செய்து, அல்சர் ஏற்படும் அபாய த்தைக் குறைக்க உதவுகிறது.
வெங்காய த்தில் உள்ள கரையக் கூடிய நார்ச் சத்துக்கள், குடலில் நல்ல பாக்டீரியாக் களின் வளர்ச் சியை அதிகரித்து, செரிமானம், மலச்சிக்கல், சிறு நீர்ப்பை கோளாறுகள் போன்ற பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.

வெங்காய த்தில் உள்ள ஆன்டி - செப்டிக் மற்றும் ஆன்டி - மைக்ரோபியல் பண்புகள், காச நோயை ஏற்படுத்தும் மைகோ பாக்டீரியத்தை செயலிழக்கச் செய்து, காச நோய் வராமல் தடுக்கிறது.

பிரசவத் திற்கு பின் பெண்கள் வெங்காய த்தை சிறிது பச்சையாக தினமும் சாப்பிட்டால், அது தாய்ப் பால் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

வெங்காய த்தில் கலோரிகள், சோடியம் குறைவு மற்றும் கொழுப்பு கள் அற்றது என்பதால், அது ரத்த நாளங்களின் நெகிழ்வுத் தன்மையை அதிகரித்து, ரத்த சோகை, உயர் இரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கிறது.
Tags: